Preface
Read
+
Publisher
Nainoia, Inc.
PO Box 462, Bellefonte, PA 16823
(814) 470-8028
Nainoia Inc, Publisher
LinkedIn/NAINOIA-INC
Third Party Publisher Resources
Request Custom Formatted Verses
Please contact us below
Submit your proposed corrections
I understand that the Aionian Bible republishes public domain and Creative Commons Bible texts and that volunteers may be needed to present the original text accurately. I also understand that apocryphal text is removed and most variant verse numbering is mapped to the English standard. I have entered my corrections under the verse(s) below. Proposed corrections to the Tamil Bible, Psalms Chapter 62 https://www.AionianBible.org/Bibles/Tamil---Tamil-Bible/Psalms/62 1 ௧) எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவனையே நோக்கி என்னுடைய ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும். 2 ௨) அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாக அசைக்கப்படுவதில்லை. 3 ௩) நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனிதனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனைவரும் அழிக்கப்படுவீர்கள், சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள். 4 ௪) அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைசெய்து, பொய்பேச விரும்புகிறார்கள்; தங்களுடைய வாயினால் ஆசீர்வதித்து, தங்களுடைய உள்ளத்தில் சபிக்கிறார்கள். (சேலா) 5 ௫) என்னுடைய ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். 6 ௬) அவரே என்னுடைய கன்மலையும், என்னுடைய இரட்சிப்பும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை. 7 ௭) என்னுடைய இரட்சிப்பும், என்னுடைய மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என்னுடைய கன்மலையும் என்னுடைய அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. 8 ௮) மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்களுடைய இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார். (சேலா) 9 ௯) கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லோரும் மாயையிலும் லேசானவர்கள். 10 ௧0) கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்; செல்வம் அதிகமானால் இருதயத்தை அதின்மேல் வைக்காமலிருங்கள். 11 ௧௧) தேவன் ஒருமுறை பேசினார், இரண்டுமுறை கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே. 12 ௧௨) கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! தேவனே நீர் அவனவன் செய்கைக்குத் தகுந்தபடி பலனளிக்கிறீர். Additional comments?
Refresh Captcha
The world's first Holy Bible un-translation!