Preface
Read
+
Publisher
Nainoia, Inc.
PO Box 462, Bellefonte, PA 16823
(814) 470-8028
Nainoia Inc, Publisher
LinkedIn/NAINOIA-INC
Third Party Publisher Resources
Request Custom Formatted Verses
Please contact us below
Submit your proposed corrections
I understand that the Aionian Bible republishes public domain and Creative Commons Bible texts and that volunteers may be needed to present the original text accurately. I also understand that apocryphal text is removed and most variant verse numbering is mapped to the English standard. I have entered my corrections under the verse(s) below. Proposed corrections to the Tamil Bible, Psalms Chapter 29 https://www.AionianBible.org/Bibles/Tamil---Tamil-Bible/Psalms/29 1 ௧) தாவீதின் பாடல். தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். 2 ௨) யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள். 3 ௩) யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார். 4 ௪) யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது; யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது. 5 ௫) யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; யெகோவா லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார். 6 ௬) அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும், சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார். 7 ௭) யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும். 8 ௮) யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்; யெகோவா காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார். 9 ௯) யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும் யெகோவாவுக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள். 10 ௧0) யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்; யெகோவா என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார். 11 ௧௧) யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்; யெகோவா தமது மக்களுக்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார். Additional comments?
Refresh Captcha
The world's first Holy Bible un-translation!