< Вихід 17 >

1 І рушила вся громада Ізраїлевих синів із пустині Сін на похо́ди свої з нака́зу Господнього, і ота́борилася в Рефідімі. І не було води пити наро́дові.
பின்பு இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் யெகோவாவுடைய கட்டளையின்படி சீன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டு, பயணம்செய்து, ரெவிதீமிலே வந்து முகாமிட்டார்கள்; அங்கே மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருந்தது.
2 І сварився наро́д із Мойсеєм, і казали вони: „Дайте нам води, і ми бу́демо пити!“А Мойсей їм сказав: „Чого ви сваритеся зо мною? Нащо випробо́вуєте Господа?“
அப்பொழுது மக்கள் மோசேயோடு வாதாடி: “நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும்” என்றார்கள். அதற்கு மோசே: “என்னோடு ஏன் வாதாடுகிறீர்கள், யெகோவாவை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள்” என்றான்.
3 І наро́д був там спраглий води. І ре́мствував наро́д на Мойсея й говорив: „На́що це ти ви́провадив нас із Єгипту? Щоб повбивати спраглого мене та синів моїх, та ота́ри мої?“
மக்கள் அந்த இடத்தில் தண்ணீர்த் தாகமாக இருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து: “நீர் எங்களையும் எங்களுடைய பிள்ளைகளையும் எங்களுடைய ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தாகத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டுவந்தீர்” என்றார்கள்.
4 І кли́кав Мойсей до Господа, кажучи: „Що я вчиню́ цьому наро́дові? Ще трохи, — і вони вкамену́ють мене!“
மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: “இந்த மக்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே” என்றான்.
5 І сказав Господь до Мойсея: „Перейдися перед наро́дом, і візьми з собою декого з старши́х Ізраїлевих, а па́лицю, що нею ти вдарив був Річку, візьми в свою руку, та й іди!
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மூப்பர்களில் சிலரை உன்னோடு கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன்னுடைய கோலை உன்னுடைய கையில் பிடித்துக்கொண்டு, மக்களுக்கு முன்னே நடந்துபோ.
6 Ось Я стану перед лицем твоїм там, на скелі в Хориві, а ти вдариш у скелю, — і вийде із неї вода, і буде пити наро́д!“І зробив Мойсей так на оча́х старши́х Ізраїлевих.
அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது மக்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும்” என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பர்களின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.
7 І назвав він ім'я́ того місця: Масса́ та Мери́ва через колотнечу Ізраїлевих синів і через ви́пробування ними Господа, коли казали: „Чи є Господь серед нас, чи нема?“
இஸ்ரவேலர்கள் வாதாடினதற்காகவும், “யெகோவா எங்களுடைய நடுவில் இருக்கிறாரா இல்லையா” என்று அவர்கள் யெகோவாவை சோதித்துப் பார்த்ததினாலும், அவன் அந்த இடத்திற்கு மாசா என்றும், மேரிபா என்றும் பெயரிட்டான்.
8 І прибув Амали́к, і воював з Ізра́їлем у Рефідімі.
அமலேக்கியர்கள் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தார்கள்.
9 І сказав Мойсей до Ісуса: „Вибери нам людей, і вийди, воюй з Амали́ком. Узавтра я стану на верхі́в'ї гори, а Божа па́лиця буде в моїй руці“.
அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: “நீ நமக்காக மனிதர்களைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கியர்களோடு யுத்தம்செய்; நாளைக்கு நான் மலைமேல் தேவனுடைய கோலை என்னுடைய கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன்” என்றான்.
10 І зробив Ісус, як сказав йому́ Мойсей, щоб воювати з Амали́ком. А Мойсей, Аарон та Хур вийшли на верхі́в'я гори.
௧0யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கியர்களோடு யுத்தம்செய்தான். மோசேயும், ஆரோனும், ஊர் என்பவனும் மலைமேல் ஏறினார்கள்.
11 І сталося, коли Мойсей підіймав свої руки, то перемага́в Ізра́їль, а коли руки його опускались, то перемагав Амали́к.
௧௧மோசே தன்னுடைய கையை மேலே பிடித்திருக்கும்போது, இஸ்ரவேலர்கள் வெற்றிபெற்றார்கள்; அவன் தன்னுடைய கையைகீழே விடும்போது, அமலேக்கு வெற்றிபெற்றான்.
12 А ру́ки Мойсеєві стали тяжкі. І взяли́ вони ка́меня, і поклали під ним. І сів він на ньому, а Аарон та Хур підтримували ру́ки йому, один із цього боку, а один із того. І були його руки ста́лі аж до за́ходу сонця.
௧௨மோசேயின் கைகள் சோர்ந்துபோனது, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும், ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறுபக்கத்திலும் இருந்து, அவனுடைய கைகளைத் தாங்கினார்கள்; இந்த விதமாக அவனுடைய கைகள் சூரியன் மறையும்வரையும் ஒரே நிலையாக இருந்தது.
13 І переміг Ісус Амали́ка й народ його ві́стрям меча́.
௧௩யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் கூர்மையான பட்டயத்தாலே தோற்கடித்தான்.
14 І сказав Господь до Мойсея: „Напиши це на пам'ятку в книзі, і поклади до вух Ісусових, що докра́ю зітру Я па́м'ять Амали́кову з-під неба.“
௧௪பின்பு யெகோவா மோசேயை நோக்கி: “இதை நினைவுகூரும்படி, நீ ஒரு புத்தகத்தில் எழுதி, யோசுவாவின் காதிலே கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழே எங்கும் இல்லாதபடி நாசம் செய்வேன்” என்றார்.
15 І збудував Мойсей же́ртівника, і назвав ім'я́ йому: Єгова-Ніссі.
௧௫மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பெயரிட்டு,
16 І проказав він: „Бо рука на Господньому пра́порі: Господе́ві війна з Амали́ком із роду в рід!“
௧௬“அமலேக்கின் கை யெகோவாவுடைய சிங்காசனத்திற்கு விரோதமாக இருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாக யெகோவாவின் யுத்தம் நடக்கும்” என்றான்.

< Вихід 17 >