+ Буття 1 >

1 На поча́тку Бог створив небо та землю.
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்.
2 А земля́ була пуста та порожня, і те́мрява була над безоднею, і Дух Божий ширяв над поверхнею води.
பூமியானது. ஒழுங்கற்றதாகவும் வெறுமையாகவும் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
3 І сказав Бог: „Хай станеться світло!“І сталося світло.
தேவன் “வெளிச்சம் உண்டாகட்டும்,” என்றார், வெளிச்சம் உண்டானது.
4 І побачив Бог світло, що добре воно, — і Бог відділив світло від те́мряви.
வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
5 І Бог назвав світло: „День“, а темряву назвав: „Ніч“. І був вечір, і був ранок, — день перший.
தேவன் வெளிச்சத்திற்குப் பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் முடிந்தது.
6 І сказав Бог: „Нехай станеться твердь посеред води, і нехай відділяє вона між водою й водою.“
பின்பு தேவன்; “தண்ணீர்களின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகட்டும்,” என்றும், “அது தண்ணீரிலிருந்து தண்ணீரைப் பிரிக்கட்டும்” என்றும் சொன்னார்.
7 І Бог твердь учинив, і відділив воду, що під твердю вона, і воду, що над твердю вона. І сталося так.
தேவன் ஆகாயவிரிவை உருவாக்கி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற தண்ணீருக்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற தண்ணீருக்கும் பிரிவை உண்டாக்கினார்; அது அப்படியே ஆனது.
8 І назвав Бог твердь: „Небо“. І був вечір, і був ранок — день другий.
தேவன் ஆகாயவிரிவுக்கு “வானம் என்று பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் முடிந்தது.
9 І сказав Бог: „Нехай збереться вода з-попід неба до місця одного, і нехай суходіл стане видний“. І сталося так.
பின்பு தேவன்: “வானத்தின் கீழே இருக்கிற தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, வெட்டாந்தரை காணப்படுவதாக,” என்றார்; அது அப்படியே ஆனது.
10 І назвав Бог суходіл: „Земля“, а місце зібра́ння води назвав: „Море“. І Бог побачив, що добре воно.
௧0தேவன் வெட்டாந்தரைக்கு “பூமி” என்றும், சேர்ந்த தண்ணீருக்கு “சமுத்திரம்” என்றும் பெயரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
11 І сказав Бог: „Нехай земля вродить траву, ярину, що насіння вона розсіває, дерево овочеве, що за родом своїм плід приносить, що в ньому насіння його на землі“. І сталося так.
௧௧அப்பொழுது தேவன்: “பூமியானது புல்லையும், விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைத் தங்கள் தங்கள் வகையின்படியே கொடுக்கும் பழமரங்களையும் முளைப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது.
12 І земля траву видала, ярину, що насіння розсіває за родом її, і дерево, що приносить плід, що насіння його в нім за родом його. І Бог побачив, що добре воно.
௧௨பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் வகையின்படியே விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், தங்கள் தங்கள் வகைகளின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைக் கொடுக்கும் மரங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.
13 І був вечір, і був ранок, — день третій.
௧௩சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் முடிந்தது.
14 І сказав Бог: „Нехай бу́дуть світила на тверді небесній для відділення дня від ночі, і нехай вони стануть знаками, і часами умовленими, і днями, і роками.
௧௪பின்பு தேவன்: “பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகட்டும்” என்றார். மேலும் அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருடங்களையும் குறிக்கிறதற்காகவும் இருப்பதாக” என்றார்.
15 І нехай вони стануть на тверді небесній світилами, щоб світити над землею“. І сталося так.
௧௫“அவைகள் பூமியின்மேல் பிரகாசிப்பதற்காக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாக இருக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது.
16 І вчинив Бог оби́два світила великі, — світило велике, щоб воно керувало днем, і світило мале, щоб керувало ніччю, також зорі.
௧௬தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
17 І Бог умістив їх на тверді небесній, щоб світили вони над землею,
௧௭அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,
18 і щоб керували днем та ніччю, і щоб відділювали світло від те́мряви. І Бог побачив, що це добре.
௧௮பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்திற்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
19 І був вечір, і був ранок, — день четвертий.
௧௯சாயங்காலமும் விடியற்காலமுமாகி நான்காம் நாள் முடிந்தது.
20 І сказав Бог: „Нехай вода вироїть дрібні істоти, душу живу, і птаство, що літає над землею під небесною твердю“.
௨0பின்பு தேவன்: “நீந்தும் உயிரினங்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், தண்ணீரானது திரளாக பிறப்பிக்கட்டும்” என்றார்.
21 І створив Бог риби великі, і всяку душу живу плазуючу, що її вода вироїла за їх родом, і всяку пташину крилату за родом її. І Бог побачив, що добре воно.
௨௧தேவன், மகா பெரிய கடலில் வாழும் உயிரினங்களையும், தண்ணீரில் தங்கள் தங்கள் வகையின்படியே திரளாகப் பிறப்பிக்கப்பட்ட அனைத்துவித நீரில்வாழும் உயிரினங்களையும், சிறகுள்ள வகைவகையான அனைத்துவிதப் பறவைகளையும் உருவாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
22 І поблагословив їх Бог, кажучи: „Плодіться й розмножуйтеся, і наповнюйте воду в морях, а птаство нехай розмножується на землі!“
௨௨தேவன் அவைகளை ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திரத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியிலே பெருகட்டும்” என்றும் சொன்னார்.
23 І був вечір, і був ранок, — день п'ятий.
௨௩சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் முடிந்தது.
24 І сказав Бог: „Нехай видасть земля живу душу за родом її, худобу й плазуюче, і зе́мну звірину́ за родом її“. І сталося так.
௨௪பின்பு தேவன்: “பூமியானது வகைவகையான உயிரினங்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், வகைவகையாகப் பிறப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது.
25 І вчинив Бог зе́мну звірину́ за родом її, і худобу за родом її, і все земне плазуюче за родом його. І бачив Бог, що добре воно.
௨௫தேவன் பூமியிலுள்ள வகைவகையான காட்டுமிருகங்களையும், வகைவகையான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
26 І сказав Бог: „Створімо людину за образом Нашим, за подобою Нашою, і хай панують над мо́рською рибою, і над птаством небесним, і над худобою, і над усею землею, і над усім плазуючим, що плазує по землі“.
௨௬பின்பு தேவன்: “நமது சாயலாகவும் நமது தோற்றத்தின்படியேயும் மனிதனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் அனைத்துப் பிராணிகளையும் ஆண்டுகொள்ளட்டும்” என்றார்.
27 І Бог на Свій образ людину створив, на образ Божий її Він створив, як чоловіка та жінку створив їх.
௨௭தேவன் தம்முடைய சாயலாக மனிதனை உருவாக்கினார், அவனைத் தேவசாயலாகவே உருவாக்கினார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை உருவாக்கினார்.
28 І поблагословив їх Бог, і сказав Бог до них: „Плодіться й розмножуйтеся, і наповнюйте землю, оволоді́йте нею, і пануйте над мо́рськими рибами, і над птаством небесним, і над кожним плазуючим живим на землі!“
௨௮பின்பு தேவன் அவர்களை நோக்கி: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் உயிரினங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
29 І сказав Бог: „Оце дав Я вам усю ярину, що розсіває насіння, що на всій землі, і кожне дерево, що на ньому плід деревни́й, що воно розсіває насіння, — нехай буде на їжу це вам!
௨௯பின்னும் தேவன்: “இதோ, பூமியின்மேல் எங்கும் விதை தரும் அனைத்துவிதத் தாவரங்களையும், விதை தரும் பழமரங்களாகிய அனைத்துவித மரங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாக இருப்பதாக;
30 І зе́мній усій звірині і всьому птаству небесному, і кожному, що плазує по землі, що душа в ньому жива, — уся зелень яринна на їжу для них.“І сталося так.
௩0பூமியிலுள்ள அனைத்து மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள அனைத்து பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான அனைத்துவிதத் தாவரங்களையும் ஆகாரமாகக் கொடுத்தேன்” என்றார்; அது அப்படியே ஆனது.
31 І побачив Бог усе, що вчинив. І ото, — вельми добре воно! І був вечір, і був ранок, — день шостий.
௩௧அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அவைகள் மிகவும் நன்றாக இருந்தன; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் முடிந்தது.

+ Буття 1 >