< நீதிமொழிகள் 17 >

1 சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட, சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம்.
טוב פת חרבה ושלוה-בה-- מבית מלא זבחי-ריב
2 புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு, சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான்.
עבד-משכיל--ימשל בבן מביש ובתוך אחים יחלק נחלה
3 வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா.
מצרף לכסף וכור לזהב ובחן לבות יהוה
4 தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.
מרע מקשיב על-שפת-און שקר מזין על-לשון הות
5 ஏழையைப் புறக்கணிக்கிறவன் அவனை உண்டாக்கினவரை சபிக்கிறான்; ஆபத்தைக் குறித்துக் மகிழ்கிறவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
לעג לרש חרף עשהו שמח לאיד לא ינקה
6 பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்களுடைய தகப்பன்மார்களே.
עטרת זקנים בני בנים ותפארת בנים אבותם
7 மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு கொஞ்சம்கூட தகாது.
לא-נאוה לנבל שפת-יתר אף כי-לנדיב שפת-שקר
8 லஞ்சம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போல இருக்கும்; அது பார்க்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.
אבן-חן השחד בעיני בעליו אל-כל-אשר יפנה ישכיל
9 குற்றத்தை மூடுகிறவன் நட்பை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான்.
מכסה-פשע מבקש אהבה ושנה בדבר מפריד אלוף
10 ௧0 மூடனை நூறடி அடிப்பதைவிட, புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாக உறைக்கும்.
תחת גערה במבין-- מהכות כסיל מאה
11 ௧௧ தீயவன் கலகத்தையே தேடுகிறான்; கொடிய தூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.
אך-מרי יבקש-רע ומלאך אכזרי ישלח-בו
12 ௧௨ தன்னுடைய மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைவிட, குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது மேல்.
פגוש דב שכול באיש ואל-כסיל באולתו
13 ௧௩ நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவனுடைய வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.
משיב רעה תחת טובה-- לא-תמיש (תמוש) רעה מביתו
14 ௧௪ சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோல இருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன்பு அதை விட்டுவிடு.
פוטר מים ראשית מדון ולפני התגלע הריב נטוש
15 ௧௫ துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இந்த இருவரும் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.
מצדיק רשע ומרשיע צדיק-- תועבת יהוה גם-שניהם
16 ௧௬ ஞானத்தை வாங்கும்படி மூடன் கையிலே பணம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே.
למה-זה מחיר ביד-כסיל-- לקנות חכמה ולב-אין
17 ௧௭ நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.
בכל-עת אהב הרע ואח לצרה יולד
18 ௧௮ புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான்.
אדם חסר-לב תוקע כף ערב ערבה לפני רעהו
19 ௧௯ விவாதப்பிரியன் பாவப்பிரியன்; தன்னுடைய வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.
אהב פשע אהב מצה מגביה פתחו מבקש-שבר
20 ௨0 மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான்.
עקש-לב לא ימצא-טוב ונהפך בלשונו יפול ברעה
21 ௨௧ மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.
ילד כסיל לתוגה לו ולא-ישמח אבי נבל
22 ௨௨ மனமகிழ்ச்சி நல்ல மருந்து; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரச்செய்யும்.
לב שמח ייטיב גהה ורוח נכאה תיבש-גרם
23 ௨௩ துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட மடியிலுள்ள லஞ்சத்தை வாங்குகிறான்.
שחד מחק רשע יקח-- להטות ארחות משפט
24 ௨௪ ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும்.
את-פני מבין חכמה ועיני כסיל בקצה-ארץ
25 ௨௫ மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.
כעס לאביו בן כסיל וממר ליולדתו
26 ௨௬ நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.
גם ענוש לצדיק לא-טוב-- להכות נדיבים על-ישר
27 ௨௭ அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.
חושך אמריו יודע דעת וקר- (יקר-) רוח איש תבונה
28 ௨௮ பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன்னுடைய உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.
גם אויל מחריש חכם יחשב אטם שפתיו נבון

< நீதிமொழிகள் 17 >