< மத்தேயு 26 >

1 இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லிமுடித்தபின்பு, அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து:
イエスは,これらすべての言葉を語り終えた時,弟子たちにこう言った。
2 இரண்டு நாட்களுக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனிதகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.
「あなた方が知っているとおり,二日後には過ぎ越しがやって来る。そして人の子ははりつけにされるために引き渡される」 。
3 அப்பொழுது, பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மக்களின் மூப்பர்களும், காய்பா என்னப்பட்ட தலைமை ஆசாரியனுடைய அரண்மனையிலே கூடிவந்து,
その時,祭司長たちと律法学者たちと民の長老たちは,カイアファスと呼ばれる大祭司の邸宅に集まった。
4 இயேசுவைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனை செய்தார்கள்.
策略によってイエスを捕まえて殺そうと相談した。
5 ஆனாலும் மக்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள்.
しかし彼らは言った,「祭りの間はいけない。民の暴動が起きるかも知れないからだ」。
6 இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டில் இருக்கும்போது,
さて,イエスがベタニアでらい病の人シモンの家にいた時,
7 ஒரு பெண் விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடியைக் கொண்டுவந்து, அவர் உணவு பந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள்.
一人の女が,非常に高価な香油の入った雪花石こうのつぼを持って彼に近寄って来て,それを食卓に着いている彼の頭に注いだ。
8 அவருடைய சீடர்கள் அதைக் கண்டு கோபமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு?
しかし,これを見て弟子たちは憤慨し,こう言った。「なぜこんな無駄づかいをしたのか。
9 இந்தத் தைலத்தை அதிக விலைக்கு விற்று, தரித்திரர்களுக்குக் கொடுக்கலாமே என்றார்கள்.
この香油なら高く売れたし,そうすれば貧しい人々に施すことができたのに」。
10 ௧0 இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் இந்தப் பெண்ணை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்செயலைச் செய்திருக்கிறாள்.
しかし,これを知ってイエスは彼らに言った,「なぜあなた方はこの女を悩ませるのか。彼女はわたしに良い行ないをしてくれたのだ。
11 ௧௧ தரித்திரர்கள் எப்போதும் உங்களிடம் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடம் இருக்கமாட்டேன்.
あなた方には,貧しい人々はいつでも一緒にいるが,わたしはいつでもいるわけではないからだ。
12 ௧௨ இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம் செய்வதற்கு சமமான செய்கையாக இருக்கிறது.
彼女がわたしの体にこの香油を注いだのは,わたしに埋葬に備えるためだったのだ。
13 ௧௩ இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
本当にはっきりとあなた方に告げる。世界中どこでも,この福音が宣教される所では,この女の行なったこともまた,彼女の記念として語られるだろう」 。
14 ௧௪ அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியர்களிடத்திற்குப்போய்:
その時,十二人の一人で,ユダ・イスカリオトと呼ばれていた者が,祭司長たちのところに出て行き,
15 ௧௫ நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க ஒத்துக்கொண்டார்கள்.
「彼をあなた方に引き渡せば,わたしに何をくれますか」と言った。彼らはそれを聞いて喜び,彼にお金を与えることを約束した。彼らは彼に銀三十枚を量り分けた。
16 ௧௬ அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.
その時以来,彼はイエスを売り渡す機会を探り求めた。
17 ௧௭ புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள்.
さて,種なしパンの最初の日,弟子たちがイエスのもとに来て,こう言った。「過ぎ越しの食事をなさるため,わたしたちがどこで用意をすることをお望みですか」。
18 ௧௮ அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப்போய்: என் வேளை சமீபமாக இருக்கிறது, உன் வீட்டிலே என் சீடர்களோடுகூட பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார்.
彼は言った,「市内に入って,ある人のところへ行き,こう告げなさい。『先生が,「わたしの時が近づいた。わたしは弟子たちと共にあなたの家で過ぎ越しを祝う」と言っています』」 。
19 ௧௯ இயேசு கற்பித்தபடி சீடர்கள்போய், பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள்.
弟子たちはイエスが彼らに命じたとおりに行ない,彼らは過ぎ越しの用意をした。
20 ௨0 மாலைநேரமானபோது, பன்னிரண்டுபேரோடும் அவர் பந்தியிருந்தார்.
夕方になった時,彼は十二弟子と共に食卓に横になった。
21 ௨௧ அவர்கள் உணவு உண்ணும்போது, அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
彼らが食事をしていると,彼は言った,「本当にはっきりとあなた方に告げるが,あなた方の一人がわたしを売り渡すだろう」 。
22 ௨௨ அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரைப் பார்த்து: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராகக் கேட்கத்தொடங்கினார்கள்.
彼らは深く悲しみ,一人ずつ彼に「主よ,それはわたしではないでしょうね」と尋ね始めた。
23 ௨௩ அவர் மறுமொழியாக: என்னோடுகூடத் தட்டில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்.
彼は答えた,「わたしと共に手を鉢に浸している者,その者がわたしを売り渡すだろう。
24 ௨௪ மனிதகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆனாலும், எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ; அந்த மனிதன் பிறக்காதிருந்தானானால் அவனுக்கு நலமாக இருக்கும் என்றார்.
人の子は自分について書いてあるとおりに去って行く。だが,人の子を売り渡すその者は災いだ! 生まれて来なかった方が,その者のためには良かっただろう」 。
25 ௨௫ அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரைப் பார்த்து: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.
イエスを売り渡したユダが答えた,「ラビ,それはわたしではないでしょうね」。 イエスは彼に言った,「あなたがそう言った」 。
26 ௨௬ அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீடர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிச்சாப்பிடுங்கள், இது என்னுடைய சரீரமாக இருக்கிறது என்றார்.
彼らが食事をしていると,イエスはパンを取り,それに対する感謝をささげてからそれを裂いた。弟子たちに与えてこう言った。「取って,食べなさい。これはわたしの体だ」 。
27 ௨௭ பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, நன்றிசெலுத்தி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லோரும் இதிலே பானம்பண்ணுங்கள்;
杯を取り,感謝をささげてから,彼らに与えてこう言った。「あなた方は皆,この杯から飲みなさい。
28 ௨௮ இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய ஒப்பந்தத்திற்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது.
これは新しい契約のためのわたしの血だ。それは罪の許しのため,多くの人のために注ぎ出されるのだ。
29 ௨௯ இதுமுதல் இந்தத் திராட்சைப்பழரசத்தை புதிதானதாக உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரை இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
だが,本当にはっきりとあなた方に告げるが,わたしの父の王国においてそれを新たに飲むその日まで,わたしは今後ブドウの木のこの産物を飲むことはない」 。
30 ௩0 அவர்கள் துதிப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.
賛美の歌を歌ってから,彼らはオリーブ山へと出て行った。
31 ௩௧ அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: மேய்ப்பனை வெட்டுவேன்; மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இரவிலே நீங்கள் எல்லோரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.
それからイエスは彼らに言った,「今夜,あなた方全員がわたしのためにつまずくだろう。『わたしは羊飼いを打つ。すると羊の群れは散らされるだろう』と書いてあるからだ。
32 ௩௨ ஆனாலும் நான் உயிர்த்தெழுந்தபின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போவேன் என்றார்.
だが,わたしは起こされた後,あなた方より先にガリラヤに行くだろう」 。
33 ௩௩ பேதுரு அவருக்கு மறுமொழியாக: உமதுநிமித்தம் எல்லோரும் இடறலடைந்தாலும், நான் ஒருபோதும் இடறலடையமாட்டேன் என்றான்.
しかしペトロは彼に答えた,「みんながあなたのためにつまずいたとしても,わたしは決してつまずきません」。
34 ௩௪ இயேசு அவனைப் பார்த்து: இந்த இரவிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
イエスは彼に言った,「本当にはっきりとあなたに告げるが,今夜,おんどりが鳴く前に,あなたは三度わたしを否認するだろう」 。
35 ௩௫ அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீடர்கள் எல்லோரும் அப்படியே சொன்னார்கள்.
ペトロは彼に言った,「あなたと一緒に死ななければならないとしても,わたしはあなたを否認しません」。ほかの弟子たちも皆,同じ事を言った。
36 ௩௬ அப்பொழுது, இயேசு அவர்களோடு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீடர்களைப் பார்த்து: நான் அங்கே போய் ஜெபம்செய்யும்வரை நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;
それからイエスは彼らと共にゲツセマネと呼ばれる場所にやって来た。彼は弟子たちに言った,「わたしがあちらに行って祈っている間,ここに座っていなさい」 。
37 ௩௭ பேதுருவையும் செபெதேயுவின் குமாரர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
彼はペトロとゼベダイの二人の子らを伴って行ったが,悲しみ,またひどく苦悩し始めた。
38 ௩௮ அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்திற்குரிய துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடுகூட விழித்திருங்கள் என்று சொல்லி,
その時,彼は彼らに言った,「わたしの魂は死ぬほどに深く悲しんでいる。ここにとどまって,わたしと共に見張っていなさい」 。
39 ௩௯ சிறிது விலகிப்போய், முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிச் செய்யும்; ஆனாலும் என் விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார்.
少し進んで行ってうつ伏し,祈って言った,「わたしの父よ,もしできることなら,この杯をわたしから過ぎ去らせてください。それでも,わたしの望むことではなく,あなたの望まれることを」 。
40 ௪0 பின்பு, அவர் சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவைப் பார்த்து: நீங்கள் ஒருமணி நேரமாவது என்னோடுகூட விழித்திருக்கக்கூடாதா?
弟子たちのところに来て,彼らが眠っているのを見つけて,ペトロに言った,「何と,あなたはわたしと共に一時間も見張っていられなかったのか。
41 ௪௧ நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்செய்யுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
あなた方は誘惑に陥らないよう,見張って,祈っていなさい。霊はその気でも,肉体は弱いのだ」 。
42 ௪௨ அவர் மறுபடியும் இரண்டாம்முறை போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய விருப்பத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார்.
再び,二度目に離れて行き,祈って言った,「わたしの父よ,わたしが飲まない限り,この杯がわたしから過ぎ去らないのでしたら,あなたの望まれることが行なわれますように」 。
43 ௪௩ அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது.
もう一度やって来て,彼らが眠っているのを見つけた。彼らの目は非常に重くなっていたのである。
44 ௪௪ அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப்போய், மூன்றாம்முறையும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்செய்தார்.
彼は彼らを残して再び離れて行き,三度目に同じ言葉で祈った。
45 ௪௫ பின்பு அவர் தம்முடைய சீடர்களிடத்தில் வந்து: இன்னும் நித்திரைபண்ணி இளைப்பாறுகிறீர்களா? இதோ, மனிதகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற நேரம்வந்தது.
それから,三度目に弟子たちのところに来て,彼らに言った,「なお眠って,休息をとりなさい。見よ,時が来た。そして人の子は罪人たちの手に売り渡される。
46 ௪௬ என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார்.
立ちなさい,さあ行こう。見よ,わたしを売り渡す者が近づいて来た」 。
47 ௪௭ அவர் இப்படிப் பேசும்போது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடுகூட பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பின திரளான மக்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள்.
彼がまだ話しているうちに,見よ,十二人の一人のユダがやって来た。そして彼と共に,祭司長たちと民の長老たちのもとから来た群衆が,剣やこん棒を手にしてやって来た。
48 ௪௮ அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தம்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.
さて,イエスを売り渡した者は,「わたしが口づけするのがその者だ。それを捕まえろ」と言って,彼らに合図を伝えていた。
49 ௪௯ உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான்.
すぐにイエスに近寄り,「こんばんは,ラビ!」と言って,口づけした。
50 ௫0 இயேசு அவனைப் பார்த்து; நண்பனே, எதற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவைப் பிடித்தார்கள்.
イエスは彼に言った,「友よ,なぜここにいるのか」 。その時,彼らはイエスに手をかけて捕まえた。
51 ௫௧ அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கையை நீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காது அறுந்துபோக வெட்டினான்.
見よ,イエスと共にいた者の一人が,手を伸ばして剣を抜き,大祭司の召使いに撃ちかかり,その片耳を切り落とした。
52 ௫௨ அப்பொழுது, இயேசு அவனைப் பார்த்து: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற அனைவரும் பட்டயத்தால் அழிந்துபோவார்கள்.
その時イエスは彼に言った,「剣をもとの所に納めなさい。すべて剣を取る者は剣で死ぬからだ。
53 ௫௩ நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்களை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?
それともあなたは,わたしがわたしの父に求めて,今すぐに十二軍団以上のみ使いたちを遣わしていただくことができないとでも思うのか。
54 ௫௪ அப்படிச் செய்வேனானால், இவ்விதமாக நடைபெறவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்.
だがそれでは,こうならなければならないと書いてある聖句はどうして果たされるだろうか」 。
55 ௫௫ அந்த நேரத்திலே இயேசு மக்களைப் பார்த்து: திருடனைப்பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம் செய்துகொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே.
その時,イエスは群衆に言った,「あなた方は強盗に対するかのように,剣とこん棒を持ってわたしを捕まえに出て来たのか。わたしは毎日神殿に座って教えていたのに,あなた方はわたしを逮捕しなかった。
56 ௫௬ ஆனாலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் நடைபெறுகிறது என்றார். அப்பொழுது, சீடர்களெல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.
だが,このすべてが起こったのは,預言者たちの聖句が果たされるためなのだ」 。 その時,弟子たちは皆,彼を残して逃げて行った。
57 ௫௭ இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கூடிவந்திருந்தார்கள்.
イエスを捕まえた者たちは,彼を大祭司カイアファスのところに引いて行った。そこには祭司長たちと長老たちが集まっていた。
58 ௫௮ பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனை வரைக்கும் வந்து, உள்ளே நுழைந்து, முடிவைப் பார்க்கும்படி காவலாளிகளோடு உட்கார்ந்தான்.
他方,ペトロは遠くからイエスに付いて行き,大祭司の中庭までやって来た。そして中に入り,成り行きを見ようとして,役人たちと共に座った。
59 ௫௯ பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி தேடினார்கள்;
さて,祭司長たちと長老たちと最高法院全体は,イエスを死に渡すため,彼に不利な証言を探していたが,
60 ௬0 ஒருவரும் கிடைக்கவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்புடையதாயில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து:
何も見つからなかった。多くの偽りの証人が進み出たにもかかわらず,何も見つからなかった。しかし,最後に二人の者が進み出て,
61 ௬௧ தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாட்களுக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள்.
こう言った。「この者は,『わたしは神の神殿を壊し,それを三日で建てる』と言いました」。
62 ௬௨ அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரைப் பார்த்து: இவர்கள் உனக்கு விரோதமாக சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.
大祭司が立ち上がって彼に言った,「何も答えないのか。これらの者たちがお前に不利な証言をしているのは,どういうことなのか」。
63 ௬௩ இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.
しかし彼は黙っていた。大祭司は彼に尋ねた,「生ける神に誓ってお前に命じる。我々に告げよ,お前は神の子,キリストなのかどうか」。
64 ௬௪ அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனிதகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
イエスは言った,「あなたがそう言っている。それでも,あなた方に告げるが,今後,あなた方は人の子が力ある方の右に座り,天の雲と共に来るのを見るだろう」 。
65 ௬௫ அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவனை நிந்தித்தான்; இனி சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் நிந்தித்ததை இப்பொழுது கேட்டீர்களே.
その時,大祭司は自分の衣を引き裂いてこう言った。「この者は冒とくを口にした! どうしてこれ以上証人が必要だろうか。見よ,あなた方は今,冒とくの言葉を聞いたのだ。
66 ௬௬ உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்திற்குப் பாத்திரனாக இருக்கிறான் என்றார்கள்.
あなた方はどう思うか」。 彼らは答えた,「この者は死に値する!」
67 ௬௭ அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து:
それから,彼らは彼の顔につばをかけ,こぶしで殴り,「預言しろ!」と言い始めた。ある者たちは彼を平手で打って,
68 ௬௮ கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞான தரிசனத்தினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.
こう言った。「キリストよ,我々に預言しろ! お前を打ったのはだれか」。
69 ௬௯ அந்தநேரத்தில் பேதுரு வெளியே வந்து அரண்மனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடுகூட இருந்தாய் என்றாள்.
さて,ペトロが外の中庭に座っていると,一人の女中が彼のところに来て,こう言った。「あなたもガリラヤ人イエスと一緒にいました!」
70 ௭0 அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லோருக்கும் முன்பாக மறுதலித்தான்.
しかし彼はみんなの前でそれを否定して言った,「わたしはあなたが何のことを言っているのか分からない」。
71 ௭௧ அவன், வாசல் மண்டபத்திற்குப்போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடுகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள்.
彼が入り口の方に出て行くと,別の女が彼を見て,そこにいる者たちにこう言った。「この人もナザレ人イエスと一緒にいました」。
72 ௭௨ அவனோ: அந்த மனிதனை நான் அறியேன் என்று சத்தியம் செய்து, மறுபடியும் மறுதலித்தான்.
彼は誓いつつ再びそれを否定した。「わたしはその人を知らない」。
73 ௭௩ சிறிதுநேரத்திற்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உண்மையாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை காட்டிக்கொடுக்கிறது என்றார்கள்.
しばらくして,そばに立っていた者たちが近寄って来てペトロに言った,「確かにあなたも彼らの一人だ。方言であなたのことが分かるからだ」。
74 ௭௪ அப்பொழுது அவன்: அந்த மனிதனைத் தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். உடனே சேவல் கூவியது.
その時,彼はのろったり誓ったりし始めて言った,「わたしはその人を知らないのだ!」 すぐにおんどりが鳴いた。
75 ௭௫ அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொண்டு, வெளியேபோய், மனங்கசந்து அழுதான்.
ペトロは,「おんどりが鳴く前に,あなたは三度わたしを否認するだろう」 とイエスが自分に言った言葉を思い出した。そして,外に出て,激しく泣いた。

< மத்தேயு 26 >