< யோபு 13 >

1 இதோ, இவைகள் எல்லாவற்றையும் என் கண் கண்டு, என் காது கேட்டு அறிந்திருக்கிறது.
See, my eye has seen all this; my ear has heard and understood it.
2 நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல.
What you know, the same I also know; I am not inferior to you.
3 சர்வவல்லமையுள்ள தேவனுடன் நான் பேசினால் நல்லது; தேவனுடன் நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன்.
However, I would rather speak with the Almighty; I wish to reason with God.
4 நீங்கள் உண்மையில் பொய்யை இணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லோரும் காரியத்திற்கு உதவாத வைத்தியர்கள்.
But you whitewash the truth with lies; you are all physicians of no value.
5 நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.
Oh, that you would altogether hold your peace! That would be your wisdom.
6 நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள்.
Hear now my own reasoning; listen to the pleading of my own lips.
7 நீங்கள் தேவனுக்காக நியாயமில்லாமல் பேசி, அவருக்காக வஞ்சகமாகப் பேசவேண்டுமோ?
Will you speak unrighteously for God, and will you talk deceitfully for him?
8 அவருக்கு முகதாட்சிணியம் செய்வீர்களோ? தேவனுக்காக வழக்காடுவீர்களோ?
Will you show him partiality? Will you argue the case for God?
9 அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? மனிதனைக் கேலி செய்கிறதுபோல அவரைக் கேலி செய்வீர்களோ?
Will it be good for you when he searches you out? Could you deceive him as you might deceive men?
10 ௧0 நீங்கள் மறைமுகமாக முகதாட்சிணியம் செய்தால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார்.
He would surely reprove you if in secret you showed partiality.
11 ௧௧ அவருடைய மகத்துவம் உங்களை அதிர்ச்சியடையச் செய்யாதோ? அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ?
Will not his majesty terrify you, and the dread of him fall upon you?
12 ௧௨ உங்கள் பெயரை நினைக்கச்செய்யும் அடையாளங்கள் சாம்பலுக்கு இணையானது; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்.
Your memorable sayings are proverbs made of ashes; your defenses are defenses made of clay.
13 ௧௩ நீங்கள் மவுனமாயிருங்கள், நான் பேசுகிறேன், எனக்கு வருகிறது வரட்டும்.
Hold your peace, let me alone, so that I may speak, let come what may on me.
14 ௧௪ நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, என் உயிரை என் கையிலே ஏன் வைக்கவேண்டும்?
I will take my own flesh in my teeth; I will take my life in my hands.
15 ௧௫ அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக நிரூபிப்பேன்.
See, if he kills me, I will have no hope left; nevertheless, I will defend my ways before him.
16 ௧௬ அவரே என் பாதுகாப்பு; மாயக்காரனோ அவர் முன்னிலையில் சேரமாட்டான்.
This will be the reason for my deliverance, for no godless person would come before him.
17 ௧௭ என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் காதுகளால் கவனமாகக் கேளுங்கள்.
God, listen carefully to my speech; let my declaration come to your ears.
18 ௧௮ இதோ, என் நியாயங்களை வரிசையாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன்.
See now, I have set my defense in order; I know that I am innocent.
19 ௧௯ என்னுடன் வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் இறந்துபோவேனே.
Who is the one who would argue against me in court? If you came to do so, and if I were proved wrong, then I would be silent and give up my life.
20 ௨0 இரண்டு காரியங்களை மாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்திற்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.
God, do only two things for me, and then I will not hide myself from your face:
21 ௨௧ உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னை பயமுறுத்தாதிருப்பதாக.
withdraw your oppressive hand from me, and do not let your terrors make me afraid.
22 ௨௨ நீர் கூப்பிடும், நான் பதில் கொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.
Then call me, and I will answer; or let me speak to you, and you answer me.
23 ௨௩ என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.
How many are my iniquities and sins? Let me know my transgression and my sin.
24 ௨௪ நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைவனாக நினைப்பானேன்?
Why do you hide your face from me and treat me like your enemy?
25 ௨௫ காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?
Will you persecute a driven leaf? Will you pursue dry stubble?
26 ௨௬ மகா கசப்பான முடிவுகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கச்செய்கிறீர்.
For you write down bitter things against me; you make me inherit the iniquities of my youth.
27 ௨௭ என் கால்களைத் தொழுவத்தில் கட்டிப்போட்டு, என் வழிகளையெல்லாம் காவல்செய்கிறீர்; என் கால் தடங்களில் அடையாளத்தைப் போடுகிறீர்.
You also put my feet in the stocks; you closely watch all my paths; you examine the ground where the soles of my feet have walked
28 ௨௮ இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற பொருளைப் போலவும், பூச்சி அரித்த ஆடையைப் போலவும் அழிந்து போவான்.
although I am like a rotten thing that wastes away, like a garment that moths have eaten.

< யோபு 13 >