< Єремія 37 >

1 І зацарював цар Седекія, син Йосійїн, замість Конії, сина Єгоякимового, якого зробив царем Навуходоно́сор, цар вавилонський, в Юдиному кра́ї.
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாதேசத்தில் ராஜாவாக நியமித்த யோயாக்கீமுடைய மகனாகிய கோனியாவின் பட்டத்திற்கு யோசியாவின் மகனாகிய சிதேக்கியா வந்து ஆட்சிசெய்தான்.
2 Та не послухався ані він, ані його раби, ані наро́д кра́ю слів Господа, які Він говорив через пророка Єремію.
யெகோவா எரேமியா தீர்க்கதரிசியைக்கொண்டு சொன்ன வார்த்தைகளுக்கு அவனாகிலும், அவனுடைய ஊழியக்காரராகிலும், தேசத்தின் மக்களாகிலும் கேட்கவில்லை.
3 І послав цар Седекія Єгухала, сина Шелеміїного, і священика Цефанію, сина Маасеїного, до пророка Єремії, говорячи: „Помолися за нас до Господа, Бога нашого!“
சிதேக்கியா ராஜாவோவெனில், செலேமியாவின் மகனாகிய யூகாலையும், மாசெயாவின் மகனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனையும் எரேமியா தீர்க்கதரிசியிடத்தில் அனுப்பி: நீ நம்முடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி: எங்களுக்காக விண்ணப்பம் செய்யவேண்டும் என்று சொல்லச் சொன்னான்.
4 А Єремія тоді ще вільно ходив серед наро́ду, бо не дали́ його ще до в'язни́ці.
அப்பொழுது எரேமியா மக்களின் நடுவே போக்கும் வரத்துமாக இருந்தான்; அவனை அவர்கள் காவல் வீட்டில் இன்னும் போடவில்லை.
5 А фараонове ві́йсько вийшло з Єгипту. І почули вістку про них халдеї, що облягали Єрусалим, і відійшли від Єрусалиму.
பார்வோனின் சேனையோவென்றால், எகிப்திலிருந்து புறப்பட்டது; எருசலேமை முற்றுகைபோட்ட கல்தேயர் அவர்களுடைய செய்தியைக்கேட்டு, எருசலேமைவிட்டு நீங்கிப்போனார்கள்.
6 І було слово Господнє до пророка Єремії, говорячи:
அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசிக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர்:
7 „Так промовив Господь, Бог Ізраїлів: Так скажете до Юдиного царя, що послав вас до мене поспитати мене: Ось фараонове ві́йсько, що вийшло вам на поміч, ве́рнеться до свого кра́ю, до Єгипту.
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், என்னிடத்தில் விசாரிக்கும்படி உங்களை என்னிடத்திற்கு அனுப்பின யூதாவின் ராஜாவை நீங்கள் நோக்கி: இதோ, உங்களுக்கு ஒத்தாசையாகப் புறப்பட்ட பார்வோனின் சேனை தன் தேசமாகிய எகிப்திற்குத் திரும்பிப்போகும்.
8 А халдеї зно́ву ве́рнуться, і будуть воювати з цим містом, і здобу́дуть його, та й спалять його огнем.
கல்தேயரோவென்றால், திரும்பி வந்து இந்த நகரத்திற்கு விரோதமாகப் போர்செய்து, அதைப் பிடித்து, நெருப்பினால் சுட்டெரிப்பார்கள்.
9 Так говорить Господь: Не обманюйте своїх душ, говорячи: „Халдеї конче пі́дуть від нас“, бо не пі́дуть вони.
கல்தேயர் நம்மைவிட்டு கண்டிப்பாகப் போய்விடுவார்களென்று சொல்லி, நீங்கள் மோசம் போகாதிருங்கள், அவர்கள் போவதில்லை.
10 Бо якщо б ви побили все халдейське ві́йсько, що з вами воює, а з них залиши́лися б тільки ра́нені, то встане кожен із намету свого, і спалять це місто огнем“...
௧0உங்களுடன் போர்செய்கிற கல்தேயருடைய சேனையையெல்லாம் நீங்கள் தோற்கடித்தாலும், மீந்தவர்கள் எல்லோரும் காயம்பட்டவர்களாக இருந்தாலும், அவர்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து எழும்பி, இந்த நகரத்தை நெருப்பினால் சுட்டெரிப்பார்கள் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல்லுங்கள் என்றார்.
11 І сталося, коли халдейське ві́йсько відступи́ло від Єрусалиму перед фараоновим ві́йськом,
௧௧பார்வோனின் படை வருகிறதென்று, கல்தேயருடைய படை எருசலேமைவிட்டுப் போனபோது,
12 то вийшов Єремія з Єрусалиму, щоб піти до Веніяминового кра́ю, і щоб сховатися там серед наро́ду.
௧௨எரேமியா அவ்விடத்தைவிட்டு, மக்களின் நடுவில் விலகிப்போகிறவன் போல, பென்யமீன் தேசத்திற்குப் போக மனதாய் எருசலேமிலிருந்து புறப்பட்டுப்போனான்.
13 Та коли він був біля Веніяминової брами, то був там начальник сторо́жі, а ім'я́ йому́ Їрійя, син Шелемеї, сина Хананіїного. І схопи́в він пророка Єремію, говорячи: „Ти перехо́диш до халлеїв!“
௧௩அவன் பென்யமீன் வாசலில் வந்தபோது, காவற்காரர்களின் அதிபதியாகிய யெரியா என்னும் பெயருள்ள ஒருவன் அங்கே இருந்தான்; அவன் அனனியாவின் மகனாகிய செலேமியாவின் மகன்; அவன்: நீ கல்தேயரைச் சேரப்போகிறவன் என்றுசொல்லி, எரேமியா தீர்க்கதரிசியைப் பிடித்தான்.
14 А Єремія відказав: „Неправда, — я не перехо́джу до халдеїв!“Та не послухав той його; і схопи́в Їрійя Єремію, і попрова́див його до зверхників.
௧௪அப்பொழுது எரேமியா: அது பொய், நான் கல்தேயரைச் சேரப்போகிறவனல்ல என்றான்; ஆனாலும் யெரியா எரேமியாவின் சொல்லைக் கேளாமல், அவனைப் பிடித்து, பிரபுக்களிடத்தில் கொண்டுபோனான்.
15 I розгнівалися зверхники на Єремію, і побили його, та й віддали́ його до в'язниці в домі писаря Єгонатана, бо його зробили за в'язни́чний дім.
௧௫அப்பொழுது பிரபுக்கள்: எரேமியாவின்மேல் கடுங்கோபங்கொண்டு, அவனை அடித்து, அவனைக் காரியதரிசியாகிய யோனத்தானுடைய வீட்டில் காவற்படுத்தினார்கள்; அவர்கள் அதைக் காவற்கூடமாக்கியிருந்தார்கள்.
16 I зійшов Єремія до темни́чної ями та до підва́лу, і сидів там Єремія багато днів.
௧௬அப்படியே எரேமியா காவற்கிடங்கின் நிலவறைகளில் நுழைந்து, அங்கே அநேக நாட்கள் இருந்தான்.
17 І послав цар Седекія, і взяв його. І спитав його цар у своїм домі таємно й сказав: „Чи є слово від Господа?“І Єремія відказав: „Є“. І далі сказав: „Ти будеш ві́дданий в руку вавилонського царя́“.
௧௭பின்பு சிதேக்கியா ராஜா அவனை வரவழைத்து: யெகோவாவால் ஒரு வார்த்தை உண்டோ என்று ராஜா அவனைத் தன் வீட்டில் இரகசியமாகக் கேட்டான். அதற்கு எரேமியா: உண்டு, பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர் என்று சொன்னான்.
18 І сказав Єремія до царя Седекії: „Що́ я згрішив тобі й рабам твоїм та цьому наро́дові, що ви віддали мене до в'язни́ці?
௧௮பின்னும் எரேமியா, சிதேக்கியா ராஜாவை நோக்கி: நீங்கள் என்னைக் காவல் வீட்டில் அடைப்பதற்கு, நான் உமக்கும் உம்முடைய ஊழியக்காரருக்கும் இந்த மக்களுக்கும் விரோதமாக என்ன குற்றம்செய்தேன்?
19 І де́ ваші пророки, що вам пророкували, говорячи: „Цар вавилонський не при́йде на вас та на Край цей?“
௧௯பாபிலோன் ராஜா உங்களுக்கும் இந்தத் தேசத்திற்கும் விரோதமாக வருவதில்லையென்று உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்ன உங்களுடைய தீர்க்கதரிசிகள் எங்கே?
20 А тепер послухай, пане мій ца́рю: хай упаде́ моє блага́ння перед обличчя твоє, і не вертай мене до дому писаря Єгонатана, щоб не помер я там!“
௨0இப்போதும் ராஜாவாகிய என் ஆண்டவனே, எனக்குக் காதுகொடுத்து, என் விண்ணப்பத்திற்குத் தயைசெய்து, என்னைக் காரியதரிசியாகிய யோனத்தானுடைய வீட்டிற்குத் திரும்ப அனுப்பவேண்டாம்; அனுப்பினால் நான் அங்கே செத்துப்போவேன் என்றான்.
21 І наказав цар Седекія, й Єремію вмістили в подві́р'ї в'язни́ці, і давали йому бухане́ць хліба на день з вулиці пе́карів, аж поки не скінчи́вся ввесь хліб у місті. І сидів Єремія в подвір'ї в'язни́ці.
௨௧அப்பொழுது எரேமியாவைக் காவல்நிலையத்தின் முற்றத்தில் காக்கவும், நகரத்தில் அப்பம் இருக்குவரை அப்பம் சுடுகிறவர்களின் வீதியில் தினம் ஒரு அப்பத்தை அவனுக்கு வாங்கிக்கொடுக்கவும் கட்டளையிட்டான்; அப்படியே எரேமியா காவல்நிலையத்தின் முற்றத்தில் இருந்தான்.

< Єремія 37 >