< Ісая 46 >

1 Бел упав на коліна, зігнувся Нево́, — стали і́доли їхні для звіри́ни й худоби. Те, що колись ви носили, накладене, мов той тяга́р на худобу пому́чену.
பேல் பணியும், நேபோ குனியும், அவைகளின் சிலைகள் காட்டு மிருகங்களுக்கும் நாட்டு மிருகங்களுக்கும் சுமையாகும்; நீங்கள் சுமந்த சுமைகள், இளைத்துப்போன மிருகங்களுக்குப் பாரமாயிருக்கும்.
2 Зігнулися й ра́зом упали вони на коліна; не могли врятува́ти тягара́, і самі до поло́ну пішли.
அவைகள் ஏகமாகக் குனிந்து பணியும்; சுமைகளை அவைகள் தப்புவிக்கமாட்டாது; அவைகள் தாமே சிறைப்பட்டுப்போகும்.
3 Почуйте Мене, доме Яковів, та ввесь за́лишку дому Ізраїлевого, яких від живота Я підняв, носив від утро́би,
யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்.
4 і Я буду Той Самий до ста́рости вашої, і до сивини вас носи́тиму, Я вчинив, і Я буду носити, й Я дви́гатиму й поряту́ю!
உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுவரை நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.
5 До ко́го Мене ви вподо́бите та прирівня́єте, до кого подібним Мене́ ви учините, щоб схожому бути?
யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படி என்னை ஒப்பிடுவீர்கள்?
6 Ті, що золото сиплють з киси́, срібло ж важать вагою, вина́ймлюють золотаря́, щоб із того їм бога зробив, і перед ним вони падають та поклоня́ються,
பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி, வெள்ளியைத் தராசில் நிறுத்து, கொல்லனுடனே கூலி பொருத்திக்கொள்கிறார்கள்; அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான்; அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள்.
7 носять його на плечі́, підіймають його, і ставлять його на місці його. І стоїть, і з місця свого́ він не рухається; коли ж хто до нього кричить, то він не відпові́сть, і не врятує його від недолі.
அதைத் தோளின்மேல் எடுத்து, அதைச் சுமந்து, அதை அதின் இடத்திலே வைக்கிறார்கள்; அங்கே அது நிற்கும்; தன் இடத்தைவிட்டு அசையாது; ஒருவன் அதை நோக்கிக் கூப்பிட்டால், அது மறுஉத்திரவு கொடுக்கிறதுமில்லை, அவன் இக்கட்டை நீக்கி அவனை காப்பாற்றியதுமில்லை.
8 Пам'ятайте про це та змужні́йте, візьміть це на розум, прови́нники!
இதை நினைத்து ஆண்களாயிருங்கள்; பாதகர்களே, இதை மனதில் வையுங்கள்.
9 Пам'ятайте про давнє, відвічне, бо Я Бог, і немає більш Бога, й ніко́го, як Я,
முன்பு ஆரம்பகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை.
10 що звіщаю кінець від поча́тку, і напере́д — що не сталося ще, і що говорю́: „Мій за́мір відбу́деться, і всяке жада́ння Своє Я вчиню́“,
௧0முடிவிலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் ஆரம்பகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,
11 що хижого пта́ха зо схо́ду прикли́кую, з кра́ю далекого мужа Своєї поради! Так, Я сказав — те й спрова́джу, що Я задумав був — теє зроблю́!
௧௧வேகமாக பறக்கிற ஒரு பறவையைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனிதனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்செய்தேன், அதைச் செய்துமுடிப்பேன்.
12 Почуйте Мене, твердосе́рді, далекі від справедливости!
௧௨கடின இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமானவர்களே, எனக்குச் செவிகொடுங்கள்.
13 Я Свою справедливість набли́зив, — вона недале́ко, а спасі́ння Моє не припі́зниться, і дам на Сіоні спасі́ння, дам Ізраїлеві Свою ве́лич!
௧௩என் நீதியைச் சமீபிக்கச்செய்கிறேன், அது தூரமாயிருப்பதில்லை; என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை; நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கொடுப்பேன்.

< Ісая 46 >