< Від Луки 16 >

1 Промовив же і до учеників своїх: Один чоловік був багатий, що мав приставника; і обвинувачено сього йому, що розсипає маєток його.
பின்னும் அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: செல்வந்தனாகிய ஒரு மனிதனுக்கு நிர்வாகி ஒருவன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய சொத்துக்களை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.
2 І, покликавши його, каже йому: Що се чую про тебе? Дай мені перелік з твого приставництва, бо неможна вже тобі бути приставником.
அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் நிர்வாகத்தின் கணக்கைக் கொடு, இனி நீ நிர்வாகியாக இருக்கக்கூடாது என்றான்.
3 Каже ж у собі приставник: Що мені робити, що пан мій бере при-ставництво від мене? Копати не вмію, просити соромлюсь.
அப்பொழுது அந்த நிர்வாகி: நான் என்ன செய்வேன், என் எஜமான் நிர்வாக பொறுப்பிலிருந்து என்னை நீக்கிப்போடுகிறானே நிலத்தை பண்படுத்துவதற்கும்; எனக்குப் பெலனில்லை, பிச்சையெடுக்கவும் வெட்கப்படுகிறேன்.
4 Знаю, що зроблю, щоб, як відставлений буду від приставнищтва, прийняли мене в господи свої.
நிர்வாகப் பொறுப்பைவிட்டு நான் நீக்கப்படும்போது, என்னைத் தங்களுடைய வீடுகளில் ஏற்றுக்கொள்ளுவார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;
5 І покликавши кожного з довжників пава свого, каже первому: Скільки ти винен панові моєму?
தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.
6 Він же каже: Сто мір оливи. І каже йому: Візьми твою розписку, та сївши хутко, пиши пятьдесять.
அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது நிர்வாகி அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாக எழுது என்றான்.
7 Потім другому каже: Ти ж скільки винен? Він же каже: Сто мір пшениці. І каже йому: Візьми твою розписку, та напиши вісїмдесять.
பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு மூட்டை கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான்.
8 І похвалив пан приставника неправедного, що мудро вчинив; сини бо віку сього мудріші над синів сьвітла в роді своїм. (aiōn g165)
அநீதியுள்ள அந்த நிர்வாகி புத்தியாகச் செய்தான் என்று எஜமான் பார்த்து அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாக ஒளியின் மக்களைவிட இந்த உலகத்தின் மக்கள் தங்களுடைய சந்ததியில் அதிக புத்திமான்களாக இருக்கிறார்கள். (aiōn g165)
9 І я вам глаголю: Робіть собі приятелів від мамони неправди, щоб, як будете в недостатках, прийняли вас у вічні оселї. (aiōnios g166)
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மரிக்கும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவோர் உண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதியுங்கள். (aiōnios g166)
10 Вірний у найменшому і в великому вірний, а в найменшому неправедний, і в великому неправедний.
௧0கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாக இருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாக இருக்கிறான்.
11 Коли ж оце у неправедній мамонї вірні не будете, то правдиве хто вам звірить?
௧௧அநீதியான உலகப்பொருளில் நீங்கள் உண்மையாக இல்லாவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடம் நேர்மையான சொத்தை ஒப்புவிப்பார்கள்?
12 І коли у чужому вірні не були, ваше хто вам дасть?
௧௨வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாக இல்லாவிட்டால், உங்களுக்கு ஏதாவதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?
13 Жаден слуга не може двом павам служити: або одного ненавидіти ме, а другого любити ме; або до одного прихилить ся, а другим гордувати ме. Не можете Богові служити й мамонї.
௧௩எந்த வேலைக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு பணிவிடை செய்யமுடியாது; ஒருவனைப் பகைத்து மற்றவனை நேசிப்பான், அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களாலே கூடாது என்றார்.
14 Чули ж се все й Фарисеї, що були сріблолюбцями, та й насьміхались із Него.
௧௪இவைகளையெல்லாம் பொருளாசைக்காரர்களாகிய பரிசேயர்களும் கேட்டு, அவரைப் பரிகாசம்பண்ணினார்கள்.
15 І рече їм: Ви оправдуєте себе перед людьми. Бог же знав серця ваші, бо що в людей високе, те огида перед Богом.
௧௫அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனிதர்கள் முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்களுடைய இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனிதர்களுக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்குமுன்பாக அருவருப்பாக இருக்கிறது.
16 Закон і пророки до Йоана. З того ж часу царство Боже благовіствуєть ся, і кожен силою здобував його.
௧௬நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் இருந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் நற்செய்தியாக அறிவிக்கப்பட்டுவருகிறது, அனைவரும் பலவந்தமாக அதில் பிரவேசிக்கிறார்கள்.
17 Легше ж небу та землї перейти, нїж із закону одній титлї пропасти.
௧௭வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு ஒழிந்துபோவதைவிட, வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.
18 Всякий, хто розводить ся з жінкою своєю, і женить ся з иншою, робить перелюб; і всякий, хто женить ся з розведеною з чоловіком, робить перелюб.
௧௮தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்கிறவன் விபசாரம் செய்கிறான், கணவனாலே விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறான்.
19 Один же чоловік був заможний, і одягавсь у кармазин та висон, і жив дцо-дня пишно.
௧௯செல்வந்தனாகிய ஒரு மனிதன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையுயர்ந்த உடையும் அணிந்து, அநுதினமும் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருந்தான்.
20 Убогий же один був, на ймя Лазар, що лежав перед ворітьми його ввесь у струпі,
௨0லாசரு என்னும் பெயர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் சரீர முழுவதும் கொப்பளங்கள் நிறைந்தவனாக, அந்த செல்வந்தனுடைய வாசலின் அருகே தங்கி,
21 і бажав погодуватись окрушинами, що падали з стола багатиревого, тільки ж і собаки приходячи лизали рани його.
௨௧அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாக இருந்தான்; நாய்கள் வந்து அவன் கொப்பளங்களை நக்கிற்று.
22 Стало ся ж, що вмер убогий, і перенесли його ангели на лоно Авраамове; умер же і багатир і поховали його.
௨௨பின்பு அந்த தரித்திரன் மரித்து, தேவதூதர்களால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; செல்வந்தனும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.
23 І в пеклї зняв він очі свої, бувши в муках, і побачив оддалеки Авраама, й Лазаря на лоні його. (Hadēs g86)
௨௩பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். (Hadēs g86)
24 І покликнувши він, каже: Отче Аврааме, помилуй мене та пішли Лазаря, нехай умочить конець пальця свого в воду та прохолодить язик мій; бо я мучусь у поломї сьому.
௨௪அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணிரீல் தோய்த்து, என் நாக்கைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினியில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.
25 Рече ж Авраам: Дитино, спогадай, що прийняв єси добре твоє в життю твоїм, а Лазар так само лихе; тепер же він тут утїшавть ся, а ти мучиш ся.
௨௫அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடு இருக்கும் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அனுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.
26 Та ще й до того, між нами й вами пропасть велика утвердилась, щоб которі схотіли перейти звідсіля до вас, не здолїли; анї звідтіля до нас не перейшли.
௨௬அதுவுமல்லாமல், இந்த இடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அந்த இடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளவு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான்.
27 Каже ж він: Благаю ж тебе, отче, щоб післав його до дому батька мого:
௨௭அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரர்கள் உண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்திற்கு வராதபடி, அவன்போய் அவர்களுக்கு சாட்சியாக அறிவிக்கும்படியாக,
28 маю бо пять братів; нехай сьвідкує їм, щоб і вони не прийшли у се місце муки.
௨௮நீர் அவனை என் தகப்பன் வீட்டிற்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
29 Рече йому Авраам: Мають вони Мойсея і пророків; нехай слухають їх.
௨௯ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.
30 Він же каже: Нї, отче Аврааме; тільки ж, коли б хто з мертвих прийшов до них, покають ся.
௩0அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப்போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.
31 Рече ж йому: Коли Мойсея і пророків не слухають, то, коли б хто й з мертвих воскрес, не піймуть віри.
௩௧அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.

< Від Луки 16 >