< ரோமர் 9 >

1 எனக்கு அதிக துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது;
NAI kin lokaia melel ren Krijtuj, o i jota kin likam, pwe injen ai o Nen jaraui kadede ia da,
2 நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவியானவருக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாக இருக்கிறது.
Me i kin patautau o injenjued nan monion i kaukaule.
3 சரீரத்தின்படி என் இனத்தைச் சேர்ந்த என் சகோதரர்களுக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே.
Pwe pein nai inon ion en riala, pwen dooki wei jan Krijtuj pweki ri ai kan ni pali uduk.
4 அவர்கள் இஸ்ரவேலர்களே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவ ஆராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;
lei men Ijrael me udan jeri en Ko t, me ar linan, o inau kan, o kapun, o upa Kot, o kokop akan mia,
5 முற்பிதாக்கள் அவர்களுடையவர்களே; சரீரத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலான தேவன். ஆமென். (aiōn g165)
Me jamaneki jam atail akan me Krijtuj pil tapi jan ia ni pali uduk a, me poedi meakaroj, iei Kot me iajanai kokolata, amen. (aiōn g165)
6 தேவவசனம் நிறைவேறாமல்போனது என்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோரும் இஸ்ரவேலர் இல்லையே.
Pwe kaidin dene majan en Kot jo pwaida, pwe kaidin karoj men Ijrael, me tikidar Ijrael;
7 அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தினராக இருந்தாலும் அனைவரும் பிள்ளைகள் அல்லவே; “ஈசாக்கினிடம் உன் வம்சம் விளங்கும்” என்று சொல்லியிருக்கிறதே.
Pil kaidin karoj jeri kan, me kijan kadaudok en Apraam; pwe jan ren Ijaak kadaudok om pan tapi jan ia.
8 அது எப்படியென்றால், சரீரத்தின்படி பிள்ளைகள் ஆனவர்கள் தேவனுடைய பிள்ளைகள் அல்லவே, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகள் ஆனவர்களே அந்த வம்சம் என்று எண்ணப்படுகிறார்கள்.
Ari, kaidin irail jeri en Kot akan, me jeri kan ni tiak en uduk, a jeri en inau kan pan wad on kadaudok o.
9 அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு மகனைப் பெறுவாள் என்பதே.
Pwe i majan, majan en inau eu: Ni anjau o I pan kodo, a Jara pan naitikada jeri ol amen.
10 ௧0 இதுமட்டுமல்லாமல், நம்முடைய முற்பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது,
A kaidin i eta, pwe pil Repeka lao lijean on jam atail Ijaak.
11 ௧௧ குழந்தைகள் இன்னும் பிறக்காமலும், நன்மை தீமை ஒன்றும் செய்யாமல் இருக்கும்போது, தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படி இருக்கிற அவருடைய தீர்மானம், செயல்களினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படி,
Pwe ni anjau jeri ko kaikenta ipwidier, o pil kaikenta wiadar meakot mau de me jued, o pwe kupur en Kot en pwaida, kaidin ni wiawia a ni lipilipil ren me piladar o,
12 ௧௨ மூத்தவன், இளையவனுக்கு ஊழியம் செய்வான் என்று அவளுக்கு சொல்லப்பட்டது.
A kotin majani on i: Me laud o pan papa me tikitik!
13 ௧௩ அப்படியே, யாக்கோபை நேசித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.
Duen a intinidier: lakop me I pok on er, a Ejau me I likidmalielar.
14 ௧௪ ஆகவே, நாம் என்னசொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.
Ari, da me kitail en inda? Kot me japun? O jo!
15 ௧௫ அவர் மோசேயைப் பார்த்து: எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ அவன்மேல் இரக்கமாக இருப்பேன், எவன்மேல் உருக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ அவன்மேல் உருக்கமாக இருப்பேன் என்றார்.
Pwe a kotin majani on Mojej: I pan maki on, me I men maki on, o I pan pokepoke, me I men pokepoke.
16 ௧௬ ஆகவே, விரும்புகிறவனாலும் இல்லை, ஓடுகிறவனாலும் இல்லை, இரங்குகிற தேவனாலே ஆகும்.
Ari, jota katepa, ma amen pan pein inon ion de tane wei, a ma Kot pan kotin maki on amen.
17 ௧௭ மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடம் காண்பிப்பதற்காகவும், என்னுடைய பெயர் பூமியில் எங்கும் பிரசித்தமடைவதற்காகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனோடு சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.
Pwe kijin likau me katitiki on Parao: Nan iet me I kilele uk adar, pwe I en kajale kida uk ai manaman, o pwe mar ai en indandeki jili ni jap akan karoj.
18 ௧௮ எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.
Ari, a kin kotin maki on, me a kotin kupura, ap kapitakaila, duen me a kotin mauki.
19 ௧௯ அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய்.
Koe ap pan indan ia: Ari da me a kailon kin ia? Pwe ij me kak palian kupur a?
20 ௨0 அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா?
Ei melel aramaj koe, ij koe, me men palian Kot? Da, dipijou pan indai on me wiadar i: Menda koe wiai on ia momuei?
21 ௨௧ மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?
Pala jaun wiada dal jota manaman on, en wia kida lopon en pwel ota dal eu me kajelel, de eu me jakanekan?
22 ௨௨ தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,
A Kot kotin kanonama on dal jued akan, me wiauier on lokidokila, ni a men kajaleda a onion o manaman,
23 ௨௩ தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன?
O a pil men kotin kajaleda a dir en linan ki dal en a mak kan, me a kotin kaonopadar maj o en linanla.
24 ௨௪ அவர் யூதர்களிலிருந்து மட்டுமல்ல, யூதரல்லாத மக்களிடமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே.
Iei kitail, me a kotin waron do, kaidin jan ren Juj akan eta, a pil jan ren men liki kan.
25 ௨௫ அந்தப்படி: “எனக்கு மக்களாக இல்லாதவர்களை என்னுடைய மக்கள் என்றும், நேசிக்கப்படாமல் இருந்தவளை நேசிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்.
Duen a pil kotin majanier nan puk en Ojea: I pan kaadaneki irail, me kaidin nai, nai aramaj akan, o me jo kompoke pai, kompoke pai.
26 ௨௬ நீங்கள் என்னுடைய மக்கள் இல்லை என்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்” என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.
A pan wiaui waja o me a loki on irail: Komail kaidin nai aramaj, i waja re pan adaneki jeri en Kot ieiaj.
27 ௨௭ அல்லாமலும் இஸ்ரவேல் மக்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணலைப்போல இருந்தாலும், மீதியாக இருப்பவர்கள்மட்டும் இரட்சிக்கப்படுவார்கள் என்றும்;
A Iejaia likelikwir duen men Ijrael: Ma jeri en Ijrael akan pan raj on pik en oror, lua ta pan maurela. iej.
28 ௨௮ அவர் நீதியோடு சீக்கிரமாகத் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார்” என்றும், ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான்.
Pwe a pan kotin kairela japwilim a dodok o kamode kila ni a pun, pwe Kaun o pan kotin wiada dok motomot nin jappa.
29 ௨௯ அல்லாமலும் ஏசாயா முன்பே சொன்னபடி: “சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு வம்சத்தைக்கூட மீதியாக வைக்காமல் இருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவைப்போல இருந்திருப்போம்.”
O duen Iejaia majanier maj o: Ma Kaun Jepaot jo nikideki on kitail kaparapar, kitail pan dueta Jodom o Komora.
30 ௩0 இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்? நீதியைத் தேடாத யூதரல்லாத மக்கள் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினால் உண்டாகும் நீதியே.
Ari, da me kitail en inda duen men liki kan me jota rapaki pun, re diaradar pun, a pun eu, me tapi jan pojon.
31 ௩௧ நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை.
A men Ijrael me inon ion kapwaiada kujoned en pun, ap jota konodi kujoned wet.
32 ௩௨ ஏனென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் செயல்களினாலே தேடினதினால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.
Pwekida? Pwekia jota tapi jan ni pojon a ni wiawia kan, pwe irail dipikelekeleki takai en dipikelekel.
33 ௩௩ “இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுகிறதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை” என்று எழுதியிருக்கிறபடி நடந்தது.
Duen a intinidier: Kilan, I pajonedi takai eu nan Jion, takai en dipikelekel eu o paip en kamakar. A me pan pojon i, a jota pan jarodi.

< ரோமர் 9 >