< ரோமர் 8 >

1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவிற்கு உட்பட்டவர்களாக இருந்து, சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லை.
யே ஜநா​: க்²ரீஷ்டம்’ யீஸு²ம் ஆஸ்²ரித்ய ஸா²ரீரிகம்’ நாசரந்த ஆத்மிகமாசரந்தி தே(அ)து⁴நா த³ண்டா³ர்ஹா ந ப⁴வந்தி|
2 ஜீவனுடைய ஆவியானவரின் பிரமாணம் கிறிஸ்து இயேசுவிற்குள் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கினதே.
ஜீவநதா³யகஸ்யாத்மநோ வ்யவஸ்தா² க்²ரீஷ்டயீஸு²நா பாபமரணயோ ர்வ்யவஸ்தா²தோ மாமமோசயத்|
3 அது எப்படியென்றால், சரீரத்தினாலே பலவீனமாக்கப்பட்ட நியாயப்பிரமாணம் செய்யமுடியாததை தேவனே செய்வதற்காக, தம்முடைய குமாரனைப் பாவசரீரத்தின் சாயலாகவும், பாவத்தை நீக்கும் பலியாகவும் அனுப்பி, சரீரத்திலே பாவத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்த்தார்.
யஸ்மாச்சா²ரீரஸ்ய து³ர்ப்³ப³லத்வாத்³ வ்யவஸ்த²யா யத் கர்ம்மாஸாத்⁴யம் ஈஸ்²வரோ நிஜபுத்ரம்’ பாபிஸ²ரீரரூபம்’ பாபநாஸ²கப³லிரூபஞ்ச ப்ரேஷ்ய தஸ்ய ஸ²ரீரே பாபஸ்ய த³ண்ட³ம்’ குர்வ்வந் தத்கர்ம்ம ஸாதி⁴தவாந்|
4 சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிற நம்மிடம் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறுவதற்காகவே அப்படிச் செய்தார்.
தத​: ஸா²ரீரிகம்’ நாசரித்வாஸ்மாபி⁴ராத்மிகம் ஆசரத்³பி⁴ர்வ்யவஸ்தா²க்³ரந்தே² நிர்த்³தி³ஷ்டாநி புண்யகர்ம்மாணி ஸர்வ்வாணி ஸாத்⁴யந்தே|
5 அன்றியும் சரீரத்தின்படி நடக்கிறவர்கள் சரீரத்திற்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்கள் ஆவியானவருக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
யே ஸா²ரீரிகாசாரிணஸ்தே ஸா²ரீரிகாந் விஷயாந் பா⁴வயந்தி யே சாத்மிகாசாரிணஸ்தே ஆத்மநோ விஷயாந் பா⁴வயந்தி|
6 சரீரசிந்தை மரணம்; ஆவியானவரின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாகும்.
ஸா²ரீரிகபா⁴வஸ்ய ப²லம்’ ம்ரு’த்யு​: கிஞ்சாத்மிகபா⁴வஸ்ய ப²லே ஜீவநம்’ ஸா²ந்திஸ்²ச|
7 எப்படியென்றால், சரீரசிந்தை தேவனுக்கு எதிரான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியமுடியாமலும் இருக்கிறது.
யத​: ஸா²ரீரிகபா⁴வ ஈஸ்²வரஸ்ய விருத்³த⁴​: ஸ²த்ருதாபா⁴வ ஏவ ஸ ஈஸ்²வரஸ்ய வ்யவஸ்தா²யா அதீ⁴நோ ந ப⁴வதி ப⁴விதுஞ்ச ந ஸ²க்நோதி|
8 சரீரத்திற்கு உட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாக இருக்கமாட்டார்கள்.
ஏதஸ்மாத் ஸா²ரீரிகாசாரிஷு தோஷ்டும் ஈஸ்²வரேண ந ஸ²க்யம்’|
9 தேவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், நீங்கள் சரீரத்திற்கு உட்பட்டவர்களாக இல்லாமல் ஆவியானவருக்கு உட்பட்டவர்களாக இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியானவர் இல்லாதவன் அவருடையவன் இல்லை.
கிந்த்வீஸ்²வரஸ்யாத்மா யதி³ யுஷ்மாகம்’ மத்⁴யே வஸதி தர்ஹி யூயம்’ ஸா²ரீரிகாசாரிணோ ந ஸந்த ஆத்மிகாசாரிணோ ப⁴வத²​: | யஸ்மிந் து க்²ரீஷ்டஸ்யாத்மா ந வித்³யதே ஸ தத்ஸம்ப⁴வோ நஹி|
10 ௧0 மேலும் கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் இறந்ததாகவும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாகவும் இருக்கும்.
யதி³ க்²ரீஷ்டோ யுஷ்மாந் அதி⁴திஷ்ட²தி தர்ஹி பாபம் உத்³தி³ஸ்²ய ஸ²ரீரம்’ ம்ரு’தம்’ கிந்து புண்யமுத்³தி³ஸ்²யாத்மா ஜீவதி|
11 ௧௧ அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவருடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவர் உங்களுக்குள் வாழ்கிற தம்முடைய ஆவியானவராலே மரணத்திற்குரிய உங்களுடைய சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
ம்ரு’தக³ணாத்³ யீஸு² ர்யேநோத்தா²பிதஸ்தஸ்யாத்மா யதி³ யுஷ்மந்மத்⁴யே வஸதி தர்ஹி ம்ரு’தக³ணாத் க்²ரீஷ்டஸ்ய ஸ உத்தா²பயிதா யுஷ்மந்மத்⁴யவாஸிநா ஸ்வகீயாத்மநா யுஷ்மாகம்’ ம்ரு’ததே³ஹாநபி புந ர்ஜீவயிஷ்யதி|
12 ௧௨ எனவே, சகோதரர்களே, சரீரத்தின்படி பிழைப்பதற்கு நாம் சரீரத்திற்குக் கடனாளிகள் இல்லை.
ஹே ப்⁴ராத்ரு’க³ண ஸ²ரீரஸ்ய வயமத⁴மர்ணா ந ப⁴வாமோ(அ)த​: ஸா²ரீரிகாசாரோ(அ)ஸ்மாபி⁴ ர்ந கர்த்தவ்ய​: |
13 ௧௩ சரீரத்தின்படி பிழைத்தால் இறப்பீர்கள்; ஆவியானவராலே சரீரத்தின் செயல்களை அழித்தால் பிழைப்பீர்கள்.
யதி³ யூயம்’ ஸ²ரீரிகாசாரிணோ ப⁴வேத தர்ஹி யுஷ்மாபி⁴ ர்மர்த்தவ்யமேவ கிந்த்வாத்மநா யதி³ ஸ²ரீரகர்ம்மாணி கா⁴தயேத தர்ஹி ஜீவிஷ்யத²|
14 ௧௪ மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியானவராலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறார்கள்.
யதோ யாவந்தோ லோகா ஈஸ்²வரஸ்யாத்மநாக்ரு’ஷ்யந்தே தே ஸர்வ்வ ஈஸ்²வரஸ்ய ஸந்தாநா ப⁴வந்தி|
15 ௧௫ அப்படியே, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், ஆவியானவரால், அப்பா பிதாவே என்று கூப்பிடக்கூடிய பிள்ளை என்கிற உரிமையைப் பெற்றீர்கள்.
யூயம்’ புநரபி ப⁴யஜநகம்’ தா³ஸ்யபா⁴வம்’ ந ப்ராப்தா​: கிந்து யேந பா⁴வேநேஸ்²வரம்’ பித​: பிதரிதி ப்ரோச்ய ஸம்போ³த⁴யத² தாத்³ரு’ஸ²ம்’ த³த்தகபுத்ரத்வபா⁴வம் ப்ராப்நுத|
16 ௧௬ நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே சாட்சிக் கொடுக்கிறார்.
அபரஞ்ச வயம் ஈஸ்²வரஸ்ய ஸந்தாநா ஏதஸ்மிந் பவித்ர ஆத்மா ஸ்வயம் அஸ்மாகம் ஆத்மாபி⁴​: ஸார்த்³த⁴ம்’ ப்ரமாணம்’ த³தா³தி|
17 ௧௭ நாம் பிள்ளைகளானால் வாரிசுகளுமாமே; தேவனுடைய வாரிசுகளும், கிறிஸ்துவிற்கு உடன் வாரிசுகளுமாமே; கிறிஸ்துவோடு நாம் மகிமைப்படுவதற்காக அவரோடு பாடுபட்டால் அப்படி ஆகும்.
அதஏவ வயம்’ யதி³ ஸந்தாநாஸ்தர்ஹ்யதி⁴காரிண​: , அர்தா²த்³ ஈஸ்²வரஸ்ய ஸ்வத்த்வாதி⁴காரிண​: க்²ரீஷ்டேந ஸஹாதி⁴காரிணஸ்²ச ப⁴வாம​: ; அபரம்’ தேந ஸார்த்³த⁴ம்’ யதி³ து³​: க²பா⁴கி³நோ ப⁴வாமஸ்தர்ஹி தஸ்ய விப⁴வஸ்யாபி பா⁴கி³நோ ப⁴விஷ்யாம​: |
18 ௧௮ ஆதலால் இந்தக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடம் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடக்கூடியவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.
கிந்த்வஸ்மாஸு யோ பா⁴வீவிப⁴வ​: ப்ரகாஸி²ஷ்யதே தஸ்ய ஸமீபே வர்த்தமாநகாலீநம்’ து³​: க²மஹம்’ த்ரு’ணாய மந்யே|
19 ௧௯ மேலும் தேவனுடைய குமாரர்கள் வெளிப்படுத்தப்படுவதற்காக தேவனுடைய படைப்புகள் அதிக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது.
யத​: ப்ராணிக³ண ஈஸ்²வரஸ்ய ஸந்தாநாநாம்’ விப⁴வப்ராப்திம் ஆகாங்க்ஷந் நிதாந்தம் அபேக்ஷதே|
20 ௨0 அது என்னவென்றால் படைப்புகள் அழிவிற்குரிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடு,
அபரஞ்ச ப்ராணிக³ண​: ஸ்வைரம் அலீகதாயா வஸீ²க்ரு’தோ நாப⁴வத்
21 ௨௧ அந்தப் படைப்புகள் சொந்த இஷ்டத்தினாலே இல்லை, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
கிந்து ப்ராணிக³ணோ(அ)பி நஸ்²வரதாதீ⁴நத்வாத் முக்த​: ஸந் ஈஸ்²வரஸ்ய ஸந்தாநாநாம்’ பரமமுக்திம்’ ப்ராப்ஸ்யதீத்யபி⁴ப்ராயேண வஸீ²கர்த்ரா வஸீ²சக்ரே|
22 ௨௨ எனவே, நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் படைப்புகள் எல்லாம் ஒன்றாகத் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.
அபரஞ்ச ப்ரஸூயமாநாவத்³ வ்யதி²த​: ஸந் இதா³நீம்’ யாவத் க்ரு’த்ஸ்ந​: ப்ராணிக³ண ஆர்த்தஸ்வரம்’ கரோதீதி வயம்’ ஜாநீம​: |
23 ௨௩ அதுவும் இல்லாமல், ஆவியானவரின் முதற்பலன்களைப் பெற்ற நாமும் நம்முடைய சரீர மீட்பாகிய பிள்ளை என்கிற உரிமை வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
கேவல​: ஸ இதி நஹி கிந்து ப்ரத²மஜாதப²லஸ்வரூபம் ஆத்மாநம்’ ப்ராப்தா வயமபி த³த்தகபுத்ரத்வபத³ப்ராப்திம் அர்தா²த் ஸ²ரீரஸ்ய முக்திம்’ ப்ரதீக்ஷமாணாஸ்தத்³வத்³ அந்தரார்த்தராவம்’ குர்ம்ம​: |
24 ௨௪ அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். பார்க்கப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கை இல்லை; ஒருவன் தான் பார்க்கிறதை நம்பவேண்டியது என்ன?
வயம்’ ப்ரத்யாஸ²யா த்ராணம் அலபா⁴மஹி கிந்து ப்ரத்யக்ஷவஸ்துநோ யா ப்ரத்யாஸா² ஸா ப்ரத்யாஸா² நஹி, யதோ மநுஷ்யோ யத் ஸமீக்ஷதே தஸ்ய ப்ரத்யாஸா²ம்’ குத​: கரிஷ்யதி?
25 ௨௫ நாம் பார்க்காததை நம்பினோமானால், அது வருகிறதற்குப் பொறுமையோடு காத்திருப்போம்.
யத்³ அப்ரத்யக்ஷம்’ தஸ்ய ப்ரத்யாஸா²ம்’ யதி³ வயம்’ குர்வ்வீமஹி தர்ஹி தை⁴ர்ய்யம் அவலம்ப்³ய ப்ரதீக்ஷாமஹே|
26 ௨௬ அப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியது என்னவென்று தெரியாமல் இருக்கிறதினால், ஆவியானவர்தாமே சொல்லிமுடியாத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
தத ஆத்மாபி ஸ்வயம் அஸ்மாகம்’ து³ர்ப்³ப³லதாயா​: ஸஹாயத்வம்’ கரோதி; யத​: கிம்’ ப்ரார்தி²தவ்யம்’ தத்³ போ³த்³து⁴ம்’ வயம்’ ந ஸ²க்நும​: , கிந்த்வஸ்பஷ்டைரார்த்தராவைராத்மா ஸ்வயம் அஸ்மந்நிமித்தம்’ நிவேத³யதி|
27 ௨௭ ஆவியானவர் தேவனுடைய விருப்பத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறதினால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியானவரின் சிந்தை என்னவென்று அறிவார்.
அபரம் ஈஸ்²வராபி⁴மதரூபேண பவித்ரலோகாநாம்’ க்ரு’தே நிவேத³யதி ய ஆத்மா தஸ்யாபி⁴ப்ராயோ(அ)ந்தர்ய்யாமிநா ஜ்ஞாயதே|
28 ௨௮ அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாக தேவனிடம் அன்பாக இருக்கிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்குரியவைகளாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம்.
அபரம் ஈஸ்²வரீயநிரூபணாநுஸாரேணாஹூதா​: ஸந்தோ யே தஸ்மிந் ப்ரீயந்தே ஸர்வ்வாணி மிலித்வா தேஷாம்’ மங்க³லம்’ ஸாத⁴யந்தி, ஏதத்³ வயம்’ ஜாநீம​: |
29 ௨௯ தம்முடைய குமாரன் அநேக சகோதரர்களுக்குள்ளே முதற்பேறானவராக இருப்பதற்காக, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;
யத ஈஸ்²வரோ ப³ஹுப்⁴ராத்ரு’ணாம்’ மத்⁴யே ஸ்வபுத்ரம்’ ஜ்யேஷ்ட²ம்’ கர்த்தும் இச்ச²ந் யாந் பூர்வ்வம்’ லக்ஷ்யீக்ரு’தவாந் தாந் தஸ்ய ப்ரதிமூர்த்யா​: ஸாத்³ரு’ஸ்²யப்ராப்த்யர்த²ம்’ ந்யயும்’க்த|
30 ௩0 எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்தும் இருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார்.
அபரஞ்ச தேந யே நியுக்தாஸ்த ஆஹூதா அபி யே ச தேநாஹூதாஸ்தே ஸபுண்யீக்ரு’தா​: , யே ச தேந ஸபுண்யீக்ரு’தாஸ்தே விப⁴வயுக்தா​: |
31 ௩௧ இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு எதிராக இருப்பவன் யார்?
இத்யத்ர வயம்’ கிம்’ ப்³ரூம​: ? ஈஸ்²வரோ யத்³யஸ்மாகம்’ ஸபக்ஷோ ப⁴வதி தர்ஹி கோ விபக்ஷோ(அ)ஸ்மாகம்’?
32 ௩௨ தம்முடைய சொந்தக்குமாரன் என்றும் பார்க்காமல் நம்மெல்லோருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடு சேர்த்து மற்ற எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்காமல் இருப்பது எப்படி?
ஆத்மபுத்ரம்’ ந ரக்ஷித்வா யோ(அ)ஸ்மாகம்’ ஸர்வ்வேஷாம்’ க்ரு’தே தம்’ ப்ரத³த்தவாந் ஸ கிம்’ தேந ஸஹாஸ்மப்⁴யம் அந்யாநி ஸர்வ்வாணி ந தா³ஸ்யதி?
33 ௩௩ தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
ஈஸ்²வரஸ்யாபி⁴ருசிதேஷு கேந தோ³ஷ ஆரோபயிஷ்யதே? ய ஈஸ்²வரஸ்தாந் புண்யவத இவ க³ணயதி கிம்’ தேந?
34 ௩௪ தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே உயிரோடு எழுந்தும் இருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபக்கத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.
அபரம்’ தேப்⁴யோ த³ண்ட³தா³நாஜ்ஞா வா கேந கரிஷ்யதே? யோ(அ)ஸ்மந்நிமித்தம்’ ப்ராணாந் த்யக்தவாந் கேவலம்’ தந்ந கிந்து ம்ரு’தக³ணமத்⁴யாத்³ உத்தி²தவாந், அபி சேஸ்²வரஸ்ய த³க்ஷிணே பார்ஸ்²வே திஷ்ட²ந் அத்³யாப்யஸ்மாகம்’ நிமித்தம்’ ப்ரார்த²த ஏவம்பூ⁴தோ ய​: க்²ரீஷ்ட​: கிம்’ தேந?
35 ௩௫ “உமக்காக எந்தநேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்” என்று எழுதியிருக்கிறபடி நடந்தாலும்,
அஸ்மாபி⁴​: ஸஹ க்²ரீஷ்டஸ்ய ப்ரேமவிச்சே²த³ம்’ ஜநயிதும்’ க​: ஸ²க்நோதி? க்லேஸோ² வ்யஸநம்’ வா தாட³நா வா து³ர்பி⁴க்ஷம்’ வா வஸ்த்ரஹீநத்வம்’ வா ப்ராணஸம்’ஸ²யோ வா க²ங்கோ³ வா கிமேதாநி ஸ²க்நுவந்தி?
36 ௩௬ கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ?
கிந்து லிகி²தம் ஆஸ்தே, யதா², வயம்’ தவ நிமித்தம்’ ஸ்மோ ம்ரு’த்யுவக்த்ரே(அ)கி²லம்’ தி³நம்’| ப³லிர்தே³யோ யதா² மேஷோ வயம்’ க³ண்யாமஹே ததா²|
37 ௩௭ இவைகள் எல்லாவற்றிலேயும் நாம் நம்மேல் அன்பு வைத்திருக்கிறவராலே முற்றிலும் வெற்றி பெறுகிறவர்களாக இருக்கிறோமே.
அபரம்’ யோ(அ)ஸ்மாஸு ப்ரீயதே தேநைதாஸு விபத்ஸு வயம்’ ஸம்யக்³ விஜயாமஹே|
38 ௩௮ மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும்,
யதோ(அ)ஸ்மாகம்’ ப்ரபு⁴நா யீஸு²க்²ரீஷ்டேநேஸ்²வரஸ்ய யத் ப்ரேம தஸ்மாத்³ அஸ்மாகம்’ விச்சே²த³ம்’ ஜநயிதும்’ ம்ரு’த்யு ர்ஜீவநம்’ வா தி³வ்யதூ³தா வா ப³லவந்தோ முக்²யதூ³தா வா வர்த்தமாநோ வா ப⁴விஷ்யந் காலோ வா உச்சபத³ம்’ வா நீசபத³ம்’ வாபரம்’ கிமபி ஸ்ரு’ஷ்டவஸ்து
39 ௩௯ உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தப் படைப்புகளானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமுடியாது என்று நம்பியிருக்கிறேன்.
வைதேஷாம்’ கேநாபி ந ஸ²க்யமித்யஸ்மிந் த்³ரு’ட⁴விஸ்²வாஸோ மமாஸ்தே|

< ரோமர் 8 >