< ரோமர் 2 >

1 ஆகவே, மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, சாக்குப்போக்குச் சொல்லமுடியாது; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயும் செய்கிறதினால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைநீயே குற்றவாளியாக்குகிறாய்.
NAN i jota pakid pa om, aramaj amen koe, amen amen me kin kadeikada, pwe ni om kadeikada amen, pein koe me koe kin kariala, pwe koe me kin kadeikada, kin wiawia me dueta.
2 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
A kitail ajaer, me kadeik en Kot me melel on ir, me kin wiada mepukat.
3 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறாயோ?
A dadue aramaj amen koe me kin kadeikada, me kin wiewia mepukat, ap wiada dueta, koe kiki on, me koe pan piti jan kadeik en Kot?
4 அல்லது தேவனுடைய தயவு நீ மனம்திரும்புவதற்கு உன்னை நடத்துகிறதென்று தெரியாமல், அவருடைய தயவு, பொறுமை, நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?
De koe mamaleki kalanan en Kot japan, o a kanonama o papadake; koe jota aja, me kalanan en Kot kamaterok uk alan kalula?
5 உன் மனதின் கடினத்திற்கும், மனம்திரும்பாத இருதயத்திற்கும் தகுந்தபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும். கோபத்தின் தண்டனை நாளிலே உனக்காகக் கோபத்தினைக் குவித்துக்கொள்ளுகிறாயே.
A koe ni monion om me katiwo o kakaluak, me koe ki penan uk onion on ni ran en onion o kajanjal pan kadeik pun en Kot,
6 தேவன் அவனவனுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடி அவனவனுக்குப் பலன் கொடுப்பார்.
Me pan kotia depuk on amen amen duen a wiawia kan.
7 சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார். (aiōnios g166)
Irail me kin dadaurata ni ar wiawia mau kan o linan, o indand, o me jo kin mor pajan, maur joutuk. (aiōnios g166)
8 சண்டைக்காரர்களாக இருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ தேவனுடைய உக்கிரமான கோபம் வரும்.
A kamekam o wairok on irail me katiwo o jo oke melel, a me kin oke japun.
9 முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் பொல்லாப்பு செய்கிற எந்தவொரு மனிதனுக்கும் உபத்திரவமும், வியாகுலமும் உண்டாகும்.
O kanaudok o kalokolok on aramaj karoj, me wiadar jued, maj on Juj akan ap lel on men Krik.
10 ௧0 முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும், கனமும், சமாதானமும் உண்டாகும்.
A linan, o wau, o popol on amen amen, me kin wia mau, maj on Juj akan o pil on men Krik.
11 ௧௧ தேவனிடம் பட்சபாதம் இல்லை.
Pwe Kot jota kin lipilipil aramaj amen.
12 ௧௨ எவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டவர்களாகப் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே நியாயத்தீர்ப்பு அடைவார்கள்.
Pwe karoj me wiada diplikin kapun, pan lokidokila likin kapun, pil karoj, me aja kapun, ap wiada dip, pan pakadeikada pan kapun.
13 ௧௩ நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்குமுன்பாக நீதிமான்களாவதில்லை, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.
Pwe kaidin me roneron kapun kan pahn pun kila mon Kot, a me kin anada kapun pan pun kila.
14 ௧௪ அன்றியும் நியாயப்பிரமாணம் இல்லாத யூதரல்லாதோர் சுபாவமாக நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணம் இல்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாக இருக்கிறார்கள்.
Pwe ma men liki, me jota arail kapun, ap pil wiawia tiak en kapun jan nan pein irail, iei me irail, me jota arail kapun pein kapun arail.
15 ௧௫ அவர்களுடைய மனச்சாட்சியும், சாட்சியிடுகிறதினாலும், குற்றம் உண்டு குற்றம் இல்லை என்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றை ஒன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கு தகுந்த செயல்கள் தங்களுடைய இருதயங்களில் எழுதியிருக்கிறது என்று காண்பிக்கிறார்கள்.
Me kin kajanjaleda wiawia en kapun me intinidier nan monion arail, i me injen arail pil kadedeki o ar lamalam, me irail jakara kida de kalole mau ki nan pun arail.
16 ௧௬ என்னுடைய நற்செய்தியின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனிதர்களுடைய இரகசியங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.
Lao ran o, me Kot pan kotiki on Iejuj en kadeikada dip okiok kan ren aramaj akan, duen ai ronamau.
17 ௧௭ நீ யூதனென்று பெயர்பெற்று நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருந்து, தேவனைக்குறித்து மேன்மைபாராட்டி,
A ma koe adaneki Juj amen, me kin liki kapun o juaiki Kot,
18 ௧௮ நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாக, அவருடைய விருப்பத்தை அறிந்து, நன்மை எது, தீமை எது, என்று தெரிந்துகொள்கிறாயே.
O ajada kupur a, o koe pun kila lamalam, ni om padapadaki jan nan kapun,
19 ௧௯ நீ உன்னைக் குருடர்களுக்கு வழிகாட்டியாகவும், இருளில் இருப்பவர்களுக்கு வெளிச்சமாகவும்,
Koe me lameda, me koe itar on, en kalua wei me majkun akan, o kamarain pan me rotorot akan,
20 ௨0 பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு ஆசிரியராகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் நினைக்கிறாயே.
O jaunkaian pan me lampon kan, o jaunpadak en kijin jeri kan, me aja tiak en lolekon o melel en kapun.
21 ௨௧ இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்கு நீயே போதிக்காமல் இருக்கலாமா? திருடக்கூடாது என்று பிரசங்கம் பண்ணுகிற நீ திருடலாமா?
Ari, koe kin kawewe on amen, ap jota kin kawewe on pein uk, o koe kin padaki me ren der pirap, a koe kin pirap;
22 ௨௨ “விபசாரம் செய்யக்கூடாது” என்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையடிக்கலாமா?
Koe kin inda, me aramaj ender kamal, a koe kin kamal? Koe kin juedeki dikedik en ani mal akan, a koe kin pirap me japwilim en Kot?
23 ௨௩ நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா?
Koe kin juaiki kapun, a koe kin kijan Kot waui ni om tiakedi kapun?
24 ௨௪ எழுதியிருக்கிறபடி, “தேவனுடைய நாமம் யூதரல்லாதவர்களுக்குள்ளே உங்கள் மூலமாக அவமதிக்கப்படுகிறதே.”
Pwe mar en Kot kin mamale kila komail ren men liki kan, duen a intinidier.
25 ௨௫ நீ நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான்; நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லையே.
Pwe jirkomjaij me mau, ma koe aneda kapun; a ma koe tiakedi kapun, om jirkomjaij pan jojirkomjaij.
26 ௨௬ மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்திற்குரிய நீதிகளைக் கைக்கொண்டு நடந்தால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை, விருத்தசேதனம் என்று எண்ணப்படுமல்லவா?
Nan i, me jojirkomjaij, anada pun en kapun, daduen a jojirkomjaij jo pan wadok on i jirkomjaij?
27 ௨௭ சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாக இருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாக இருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாக இருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானே?
Ari, ma me udan jojirkomjaij akan pan kapwaiada kapun, re jota pan kadeik uk ada? Pwe koe kin mi pan kijin likau o jirkomjaij, ap tiakedi kapun o.
28 ௨௮ எனவே, வெளிப்புறமாக யூதனானவன் யூதன் இல்லை, வெளிப்புறமாக சரீரத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனம் இல்லை.
Pwe kaidin i Juj amen, ma pali liki ta, o pil kaidin i jirkomjaij, me jirkomjaij liki nan uduk eta.
29 ௨௯ உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்கு வரும் புகழ்ச்சி மனிதராலே உண்டாகவில்லை, தேவனாலே உண்டாயிருக்கிறது.
A i Juj amen, me Juj en lole, o i jirkomjaij, me mi nan monion i, ni nen e, a kaidin ni intin; me a kapinepa jota mi ren aramaj akan pwe ren Kot.

< ரோமர் 2 >