< ரோமர் 15 >

1 அன்றியும், பலம் உள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாக நடக்காமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.
ப³லவத்³பி⁴ரஸ்மாபி⁴ ர்து³ர்ப்³ப³லாநாம்’ தௌ³ர்ப்³ப³ல்யம்’ ஸோட⁴வ்யம்’ ந ச ஸ்வேஷாம் இஷ்டாசார ஆசரிதவ்ய​: |
2 நம்மில் ஒவ்வொருவனும் அயலகத்தானுக்கு பக்திவளர்ச்சிக்குரிய நன்மையை உண்டாக்குவதற்காக அவனுக்குப் பிரியமாக நடக்கவேண்டும்.
அஸ்மாகம் ஏகைகோ ஜந​: ஸ்வஸமீபவாஸிநோ ஹிதார்த²ம்’ நிஷ்டா²ர்த²ஞ்ச தஸ்யைவேஷ்டாசாரம் ஆசரது|
3 கிறிஸ்துவும் தமக்கே பிரியமாக நடக்காமல்: உம்மை அவமதிக்கிறவர்களுடைய அவமானங்கள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.
யத​: க்²ரீஷ்டோ(அ)பி நிஜேஷ்டாசாரம்’ நாசரிதவாந், யதா² லிகி²தம் ஆஸ்தே, த்வந்நிந்த³கக³ணஸ்யைவ நிந்தா³பி⁴ ர்நிந்தி³தோ(அ)ஸ்ம்யஹம்’|
4 தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும், ஆறுதலினாலும் நாம் நம்பிக்கை உள்ளவர்களாவதற்காக, முன்பே எழுதியிருக்கிறவைகள் எல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.
அபரஞ்ச வயம்’ யத் ஸஹிஷ்ணுதாஸாந்த்வநயோ ர்ஜநகேந ஸா²ஸ்த்ரேண ப்ரத்யாஸா²ம்’ லபே⁴மஹி தந்நிமித்தம்’ பூர்வ்வகாலே லிகி²தாநி ஸர்வ்வவசநாந்யஸ்மாகம் உபதே³ஸா²ர்த²மேவ லிலிகி²ரே|
5 நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவதற்காக,
ஸஹிஷ்ணுதாஸாந்த்வநயோராகரோ ய ஈஸ்²வர​: ஸ ஏவம்’ கரோது யத் ப்ரபு⁴ ர்யீஸு²க்²ரீஷ்ட இவ யுஷ்மாகம் ஏகஜநோ(அ)ந்யஜநேந ஸார்த்³த⁴ம்’ மநஸ ஐக்யம் ஆசரேத்;
6 பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஒரே சிந்தை உள்ளவர்களாக இருக்க உங்களுக்கு தயவு செய்வாராக.
யூயஞ்ச ஸர்வ்வ ஏகசித்தா பூ⁴த்வா முகை²கேநேவாஸ்மத்ப்ரபு⁴யீஸு²க்²ரீஷ்டஸ்ய பிதுரீஸ்²வரஸ்ய கு³ணாந் கீர்த்தயேத|
7 எனவே, தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.
அபரம் ஈஸ்²வரஸ்ய மஹிம்ந​: ப்ரகாஸா²ர்த²ம்’ க்²ரீஷ்டோ யதா² யுஷ்மாந் ப்ரத்யக்³ரு’ஹ்லாத் ததா² யுஷ்மாகமப்யேகோ ஜநோ(அ)ந்யஜநம்’ ப்ரதிக்³ரு’ஹ்லாது|
8 மேலும், முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்குவதற்காக, தேவனுடைய சத்தியத்தினால் இயேசுகிறிஸ்து விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு ஊழியக்காரர் ஆனார் என்றும்;
யதா² லிகி²தம் ஆஸ்தே, அதோ(அ)ஹம்’ ஸம்முகே² திஷ்ட²ந் பி⁴ந்நதே³ஸ²நிவாஸிநாம்’| ஸ்துவம்’ஸ்த்வாம்’ பரிகா³ஸ்யாமி தவ நாம்நி பரேஸ்²வர||
9 “யூதரல்லாத மக்களும் இரக்கம் பெற்றதினால் தேவனை மகிமைப்படுத்துகிறார்கள் என்றும் சொல்லுகிறேன். அப்படியே: இதனால் நான் யூதரல்லாத மக்களுக்குள்ளே உம்மை அறிக்கைசெய்து, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன்” என்று எழுதியிருக்கிறது.
தஸ்ய த³யாலுத்வாச்ச பி⁴ந்நஜாதீயா யத்³ ஈஸ்²வரஸ்ய கு³ணாந் கீர்த்தயேயுஸ்தத³ர்த²ம்’ யீஸு²​: க்²ரீஷ்டஸ்த்வக்சே²த³நியமஸ்ய நிக்⁴நோ(அ)ப⁴வத்³ இத்யஹம்’ வதா³மி| யதா² லிகி²தம் ஆஸ்தே, அதோ(அ)ஹம்’ ஸம்முகே² திஷ்ட²ந் பி⁴ந்நதே³ஸ²நிவாஸிநாம்’| ஸ்துவம்’ஸ்த்வாம்’ பரிகா³ஸ்யாமி தவ நாம்நி பரேஸ்²வர||
10 ௧0 மேலும், யூதரல்லாத மக்களே, அவருடைய மக்களுடன் சேர்ந்து களிகூருங்கள் என்கிறார்.
அபரமபி லிகி²தம் ஆஸ்தே, ஹே அந்யஜாதயோ யூயம்’ ஸமம்’ நந்த³த தஜ்ஜநை​: |
11 ௧௧ மேலும், யூதரல்லாத மக்களே, எல்லோரும் கர்த்த்தரை துதியுங்கள்; மக்களே, எல்லோரும் அவரைப் புகழுங்கள்” என்றும் சொல்லுகிறார்.
புநஸ்²ச லிகி²தம் ஆஸ்தே, ஹே ஸர்வ்வதே³ஸி²நோ யூயம்’ த⁴ந்யம்’ ப்³ரூத பரேஸ்²வரம்’| ஹே ததீ³யநரா யூயம்’ குருத்⁴வம்’ தத்ப்ரஸ²ம்’ஸநம்’||
12 ௧௨ மேலும், “ஈசாயின் வேரும் யூதரல்லாத மக்களை ஆளுகை செய்கிற ஒருவர் தோன்றுவார்; அவரிடம் யூதரல்லாத மக்கள் நம்பிக்கை வைப்பார்கள்” என்று ஏசாயா சொல்லுகிறான்.
அபர யீஸா²யியோ(அ)பி லிலேக², யீஸ²யஸ்ய து யத் மூலம்’ தத் ப்ரகாஸி²ஷ்யதே ததா³| ஸர்வ்வஜாதீயந்ரு’ணாஞ்ச ஸா²ஸக​: ஸமுதே³ஷ்யதி| தத்ராந்யதே³ஸி²லோகைஸ்²ச ப்ரத்யாஸா² ப்ரகரிஷ்யதே||
13 ௧௩ பரிசுத்த ஆவியானவரின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருக, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவிதமான சந்தோஷத்தினாலும், சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.
அதஏவ யூயம்’ பவித்ரஸ்யாத்மந​: ப்ரபா⁴வாத்³ யத் ஸம்பூர்ணாம்’ ப்ரத்யாஸா²ம்’ லப்ஸ்யத்⁴வே தத³ர்த²ம்’ தத்ப்ரத்யாஸா²ஜநக ஈஸ்²வர​: ப்ரத்யயேந யுஷ்மாந் ஸா²ந்த்யாநந்தா³ப்⁴யாம்’ ஸம்பூர்ணாந் கரோது|
14 ௧௪ என் சகோதரர்களே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், எல்லா அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாக இருக்கிறீர்கள் என்று நானும் உங்களைக்குறித்து நிச்சயித்திருக்கிறேன்.
ஹே ப்⁴ராதரோ யூயம்’ ஸத்³பா⁴வயுக்தா​: ஸர்வ்வப்ரகாரேண ஜ்ஞாநேந ச ஸம்பூர்ணா​: பரஸ்பரோபதே³ஸே² ச தத்பரா இத்யஹம்’ நிஸ்²சிதம்’ ஜாநாமி,
15 ௧௫ அப்படியிருந்தும், சகோதரர்களே, யூதரல்லாதவர்கள் பரிசுத்த ஆவியானவராலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படி, நான் தேவனுடைய நற்செய்தி ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாக இருந்து யூதரல்லாதவர்களுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாவதற்கு,
ததா²ப்யஹம்’ யத் ப்ரக³ல்ப⁴தரோ ப⁴வந் யுஷ்மாந் ப்ரபோ³த⁴யாமி தஸ்யைகம்’ காரணமித³ம்’|
16 ௧௬ தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காக இவைகளை நான் அதிக தைரியமாக எழுதினேன்.
பி⁴ந்நஜாதீயா​: பவித்ரேணாத்மநா பாவிதநைவேத்³யரூபா பூ⁴த்வா யத்³ க்³ராஹ்யா ப⁴வேயுஸ்தந்நிமித்தமஹம் ஈஸ்²வரஸ்ய ஸுஸம்’வாத³ம்’ ப்ரசாரயிதும்’ பி⁴ந்நஜாதீயாநாம்’ மத்⁴யே யீஸு²க்²ரீஷ்டஸ்ய ஸேவகத்வம்’ தா³நம்’ ஈஸ்²வராத் லப்³த⁴வாநஸ்மி|
17 ௧௭ எனவே, நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மை பாராட்டமுடியும்.
ஈஸ்²வரம்’ ப்ரதி யீஸு²க்²ரீஷ்டேந மம ஸ்²லாகா⁴கரணஸ்ய காரணம் ஆஸ்தே|
18 ௧௮ யூதரல்லாதவர்களை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணுவதற்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியானவரின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு செய்தவைகளைத்தவிர வேறொன்றையும் சொல்ல நான் துணியவில்லை.
பி⁴ந்நதே³ஸி²ந ஆஜ்ஞாக்³ராஹிண​: கர்த்தும்’ க்²ரீஷ்டோ வாக்யேந க்ரியயா ச, ஆஸ்²சர்ய்யலக்ஷணைஸ்²சித்ரக்ரியாபி⁴​: பவித்ரஸ்யாத்மந​: ப்ரபா⁴வேந ச யாநி கர்ம்மாணி மயா ஸாதி⁴தவாந்,
19 ௧௯ இப்படி எருசலேமிலிருந்து ஆரம்பித்து, இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் நற்செய்தியைப் பூரணமாகப் பிரசங்கம் செய்திருக்கிறேன்.
கேவலம்’ தாந்யேவ விநாந்யஸ்ய கஸ்யசித் கர்ம்மணோ வர்ணநாம்’ கர்த்தும்’ ப்ரக³ல்போ⁴ ந ப⁴வாமி| தஸ்மாத் ஆ யிரூஸா²லம இல்லூரிகம்’ யாவத் ஸர்வ்வத்ர க்²ரீஷ்டஸ்ய ஸுஸம்’வாத³ம்’ ப்ராசாரயம்’|
20 ௨0 மேலும் அவருடைய செய்தியை அறியாமல் இருந்தவர்கள் பார்ப்பார்கள் என்றும், கேள்விப்படாமல் இருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்றும் எழுதியிருக்கிறபடியே,
அந்யேந நிசிதாயாம்’ பி⁴த்தாவஹம்’ யந்ந நிசிநோமி தந்நிமித்தம்’ யத்ர யத்ர ஸ்தா²நே க்²ரீஷ்டஸ்ய நாம கதா³பி கேநாபி ந ஜ்ஞாபிதம்’ தத்ர தத்ர ஸுஸம்’வாத³ம்’ ப்ரசாரயிதும் அஹம்’ யதே|
21 ௨௧ நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாமல் கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்படாத இடங்களில் நற்செய்தியை அறிவிக்கும்படி விரும்புகிறேன்.
யாத்³ரு’ஸ²ம்’ லிகி²தம் ஆஸ்தே, யை ர்வார்த்தா தஸ்ய ந ப்ராப்தா த³ர்ஸ²நம்’ தைஸ்து லப்ஸ்யதே| யைஸ்²ச நைவ ஸ்²ருதம்’ கிஞ்சித் போ³த்³து⁴ம்’ ஸ²க்ஷ்யந்தி தே ஜநா​: ||
22 ௨௨ உங்களிடம் வருவதற்கு இதினாலே அநேகமுறை தடைபட்டேன்.
தஸ்மாத்³ யுஷ்மத்ஸமீபக³மநாத்³ அஹம்’ முஹுர்முஹு ர்நிவாரிதோ(அ)ப⁴வம்’|
23 ௨௩ இப்பொழுது இந்தப் பகுதிகளிலே எனக்கு இடம் இல்லதாதினாலும், உங்களிடம் வரும்படி அநேக வருடமாக எனக்கு அதிக விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
கிந்த்விதா³நீம் அத்ர ப்ரதே³ஸே²ஷு மயா ந க³தம்’ ஸ்தா²நம்’ கிமபி நாவஸி²ஷ்யதே யுஷ்மத்ஸமீபம்’ க³ந்தும்’ ப³ஹுவத்ஸராநாரப்⁴ய மாமகீநாகாங்க்ஷா ச வித்³யத இதி ஹேதோ​:
24 ௨௪ நான் ஸ்பானியா தேசத்திற்கு பயணம்செய்யும்போது உங்களிடம் வந்து, உங்களைப் பார்க்கவும், உங்களிடம் கொஞ்சம் திருப்தியடைந்தபின்பு, அந்த இடத்திற்கு உங்களால் நான் வழியனுப்பப்படவும், எனக்கு நேரம் கிடைக்கும் என்று நம்பியிருக்கிறேன்.
ஸ்பாநியாதே³ஸ²க³மநகாலே(அ)ஹம்’ யுஷ்மந்மத்⁴யேந க³ச்ச²ந் யுஷ்மாந் ஆலோகிஷ்யே, தத​: பரம்’ யுஷ்மத்ஸம்பா⁴ஷணேந த்ரு’ப்திம்’ பரிலப்⁴ய தத்³தே³ஸ²க³மநார்த²ம்’ யுஷ்மாபி⁴ ர்விஸர்ஜயிஷ்யே, ஈத்³ரு’ஸீ² மதீ³யா ப்ரத்யாஸா² வித்³யதே|
25 ௨௫ இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்வதற்காக நான் எருசலேமுக்குப் பயணம் செய்ய இருக்கிறேன்.
கிந்து ஸாம்ப்ரதம்’ பவித்ரலோகாநாம்’ ஸேவநாய யிரூஸா²லம்நக³ரம்’ வ்ரஜாமி|
26 ௨௬ மக்கெதோனியாவிலும், அகாயாவிலும் உள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற ஏழைகளுக்கு சில பொருளுதவிகளைச் செய்ய விருப்பமாக இருக்கிறார்கள்;
யதோ யிரூஸா²லமஸ்த²பவித்ரலோகாநாம்’ மத்⁴யே யே த³ரித்³ரா அர்த²விஸ்²ராணநேந தாநுபகர்த்தும்’ மாகித³நியாதே³ஸீ²யா ஆகா²யாதே³ஸீ²யாஸ்²ச லோகா ஐச்ச²ந்|
27 ௨௭ இப்படிச்செய்வது நல்லதென்று நினைத்தார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாகவும் இருக்கிறார்கள். எப்படியென்றால், யூதரல்லாதவர்கள் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீர நன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாக இருக்கிறார்களே.
ஏஷா தேஷாம்’ ஸதி³ச்சா² யதஸ்தே தேஷாம் ரு’ணிந​: ஸந்தி யதோ ஹேதோ ர்பி⁴ந்நஜாதீயா யேஷாம்’ பரமார்த²ஸ்யாம்’ஸி²நோ ஜாதா ஐஹிகவிஷயே தேஷாமுபகாரஸ்தை​: கர்த்தவ்ய​: |
28 ௨௮ இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாக ஒப்புவித்தப்பின்பு, உங்களுடைய ஊர்வழியாக ஸ்பானியாவிற்குப் போவேன்.
அதோ மயா தத் கர்ம்ம ஸாத⁴யித்வா தஸ்மிந் ப²லே தேப்⁴ய​: ஸமர்பிதே யுஷ்மந்மத்⁴யேந ஸ்பாநியாதே³ஸோ² க³மிஷ்யதே|
29 ௨௯ நான் உங்களிடம் வரும்போது கிறிஸ்துவினுடைய நற்செய்தியின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடு வருவேன் என்று அறிந்திருக்கிறேன்.
யுஷ்மத்ஸமீபே மமாக³மநஸமயே க்²ரீஷ்டஸ்ய ஸுஸம்’வாத³ஸ்ய பூர்ணவரேண ஸம்ப³லித​: ஸந் அஹம் ஆக³மிஷ்யாமி இதி மயா ஜ்ஞாயதே|
30 ௩0 மேலும் சகோதரர்களே, தேவ விருப்பத்தினாலே நான் சந்தோஷத்தோடு உங்களிடம் வந்து உங்களோடு ஓய்வெடுப்பதற்காக,
ஹே ப்⁴ராத்ரு’க³ண ப்ரபோ⁴ ர்யீஸு²க்²ரீஷ்டஸ்ய நாம்நா பவித்ரஸ்யாத்மாந​: ப்ரேம்நா ச விநயே(அ)ஹம்’
31 ௩௧ யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படுவதற்காகவும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மஉதவிகள் அவர்களால் அங்கீகரிக்கப்படுவதற்காகவும்,
யிஹூதா³தே³ஸ²ஸ்தா²நாம் அவிஸ்²வாஸிலோகாநாம்’ கரேப்⁴யோ யத³ஹம்’ ரக்ஷாம்’ லபே⁴ய மதீ³யைதேந ஸேவநகர்ம்மணா ச யத்³ யிரூஸா²லமஸ்தா²​: பவித்ரலோகாஸ்துஷ்யேயு​: ,
32 ௩௨ நீங்கள் தேவனை நோக்கி செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடு சேர்ந்து போராடவேண்டும் என்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், பரிசுத்த ஆவியானவருடைய அன்பினாலும், உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
தத³ர்த²ம்’ யூயம்’ மத்க்ரு’த ஈஸ்²வராய ப்ரார்த²யமாணா யதத்⁴வம்’ தேநாஹம் ஈஸ்²வரேச்ச²யா ஸாநந்த³ம்’ யுஷ்மத்ஸமீபம்’ க³த்வா யுஷ்மாபி⁴​: ஸஹித​: ப்ராணாந் ஆப்யாயிதும்’ பாரயிஷ்யாமி|
33 ௩௩ சமாதானத்தின் தேவன் உங்கள் அனைவரோடும் இருப்பாராக. ஆமென்.
ஸா²ந்திதா³யக ஈஸ்²வரோ யுஷ்மாகம்’ ஸர்வ்வேஷாம்’ ஸங்கீ³ பூ⁴யாத்| இதி|

< ரோமர் 15 >