< வெளிப்படுத்தின விசேஷம் 17 >

1 ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் வந்து என்னோடு பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடு பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் மக்களும் வெறிகொண்டிருந்தார்களே;
七つの鉢を持てる七人の御使の一人きたり、我に語りて言ふ『來れ、われ多くの水の上に坐する大淫婦の審判を汝に示さん。
2 அவளுக்கு வருகிற தண்டனையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;
地の王たちは之と淫をおこなひ、地に住む者らは其の淫行の葡萄酒に醉ひたり』
3 ஆவிக்குள் என்னை வனாந்திரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் உடையதும் அவதூறான பெயர்களால் நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு பெண் ஏறியிருப்பதைப் பார்த்தேன்.
かくてわれ御靈に感じ、御使に携へられて荒野にゆき、緋色の獸に乘れる女を見たり、この獸の體は神を涜す名にて覆はれ、また七つの頭と十の角とあり。
4 அந்தப் பெண் இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையும் அணிந்து பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.
女は紫色と緋とを著、金・寶石・眞珠にて身を飾り、手には憎むべきものと己が淫行の汚とにて滿ちたる金の酒杯を持ち、
5 மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் பெயர் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
額には記されたる名あり。曰く『奧義 大なるバビロン、地の淫婦らと憎むべき者との母』
6 அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைப் பார்த்தேன்; அவளைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
我この女を見るに、聖徒の血とイエスの證人の血とに醉ひたり。我これを見て大に怪しみたれば、
7 அப்பொழுது, தூதனானவன் என்னைப் பார்த்து: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்தப் பெண்ணுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாக இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.
御使われに言ふ『なにゆゑ怪しむか、我この女と之を乘せたる七つの頭、十の角ある獸との奧義を汝に告げん。
8 நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். (Abyssos g12)
なんぢの見し獸は前に有りしも今あらず、後に底なき所より上りて滅亡に往かん、地に住む者にて世の創より其の名を生命の書に記されざる者は、獸の前にありて今あらず、後に來るを見て怪しまん。 (Abyssos g12)
9 ஞானமுள்ள மனம் இதைப் புரிந்துகொள்ளும். அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.
智慧の心は茲にあり。七つの頭は女の坐する七つの山なり、また七人の王なり。
10 ௧0 அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் ஆட்சி செய்வான்.
五 人は既に倒れて一人は今あり、他の一人は未だ來らず、來らば暫時のほど止るべきなり。
11 ௧௧ இருந்ததும், இப்பொழுது இல்லாததுமாகிய மிருகமே எட்டாவதாக வருகிறவனும், அந்த ஏழு இராஜாக்களில் ஒருவனும் நாசமடையப்போகிறவனுமாக இருக்கிறான்.
前にありて今あらぬ獸は第八なり、前の七人より出でたる者にして滅亡に往くなり。
12 ௧௨ நீ பார்த்த பத்துக்கொம்புகளும், பத்து ராஜாக்களே; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடன் ஒருமணி நேரம்வரை ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
汝の見し十の角は十 人の王にして未だ國を受けざれども、一時のあひだ獸と共に王のごとき權威を受くべし。
13 ௧௩ இவர்கள் ஒரே மனதுடையவர்கள்; இவர்கள் தங்களுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
彼らは心を一つにして己が能力と權威とを獸にあたふ。
14 ௧௪ இவர்கள் ஆட்டுக்குட்டியானவரோடு யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாக இருக்கிறதினால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடு இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாக இருக்கிறார்கள் என்றான்.
彼らは羔羊と戰はん。而して羔羊かれらに勝ち給ふべし、彼は主の主、王の王なればなり。これと偕なる召されたるもの、選ばれたるもの、忠實なる者も勝を得べし』
15 ௧௫ பின்னும் அந்த தூதன் என்னைப் பார்த்து: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைப் பார்த்தாயே; அவைகள் மக்களும், திரள்கூட்டமும், தேசங்களும், பல்வேறு மொழிகளைப் பேசுகிறவர்களுமே.
御使また我に言ふ『なんぢの見し水、すなわち淫婦の坐する處は、もろもろの民・群衆・國・國語なり。
16 ௧௬ நீ மிருகத்தின்மேல் பார்த்த பத்துக்கொம்புகளைப் போன்றவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய சரீரத்தை நாசமாக்கி, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.
なんぢの見し十の角と獸とは、かの淫婦を憎み、之をして荒涼ばしめ、裸ならしめ、且その肉を喰ひ、火をもて之を燒き盡さん。
17 ௧௭ தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறும்வரையும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே மனதுடையவர்களாக இருந்து, தங்களுடைய ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.
神は彼らに御旨を行ふことと、心を一つにすることと、神の御言の成就するまで國を獸に與ふることとを思はしめ給ひたればなり。
18 ௧௮ நீ பார்த்த அந்தப் பெண் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரமே என்றான்.
なんぢの見し女は地の王たちを宰どる大なる都なり』

< வெளிப்படுத்தின விசேஷம் 17 >