< சங்கீதம் 90 >

1 தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம். ஆண்டவரே, தேவனே நீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.
Mose, Mawu ƒe ame ƒe gbedodoɖa. Yehowa, wòe nye míaƒe sitsoƒe le dzidzimewo katã me.
2 மலைகள் தோன்றுமுன்பும், நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாக இருக்கிறீர்.
Hafi towo nava dzɔ, alo hafi nàwɔ anyigba kple xexea me, tso mavɔ me yi ɖe mavɔ me, wò koe nye Mawu.
3 நீர் மனிதர்களைத் தூளாக்கி, மனித சந்ததிகளை, திரும்புங்கள் என்கிறீர்.
Ènana amegbetɔwo gatrɔna zua kewɔ, eye nègblɔna be, “O! Amegbetɔviwo, mitrɔ zu kewɔ.”
4 உமது பார்வைக்கு ஆயிரம் வருடங்கள் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இரவுவேளைபோலவும் இருக்கிறது.
Elabena ƒe akpewo le ŋkuwò me le abe etsɔ ŋkeke si va yi la ene, alo abe ŋudzɔɣi le zã me ene.
5 அவர்களை வெள்ளம்போல் அடித்துக்கொண்டு போகிறீர்; தூக்கத்திற்கு ஒப்பாக இருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
Èkplɔa amewo dzonae to ku me; wole abe gbe mumu le ŋdi me ene.
6 அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுக்கப்பட்டு உலர்ந்துபோகும்.
Togbɔ be emie le ŋdi yeyee hã la, le fiẽ me la, eƒu, eye wòku.
7 நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து உமது கடுங்கோபத்தினால் கலங்கிப்போகிறோம்.
Wò dɔmedzoe la tsrɔ̃ mí eye wò dɔmedzoe do ŋɔdzi na mí.
8 எங்களுடைய அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், எங்களுடைய மறைவான பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.
Ètsɔ míaƒe vodadawo ɖo wò ŋkume kple míaƒe nu vɔ̃ siwo míewɔ le ɣaɣlaƒe la ɖo wò mo ƒe kekeli nu.
9 எங்களுடைய நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒரு கதையைப்போல் எங்கள் வருடங்களைக் கழித்துப்போட்டோம்.
Míaƒe ŋkekewo katã nu va yi le wò dziku ta, eye míewu míaƒe ƒewo nu kple ŋeŋe.
10 ௧0 எங்களுடைய ஆயுள் நாட்கள் எழுபது வருடங்கள், பெலத்தின் மிகுதியால் எண்பது வருடங்களாக இருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கரமாகக் கடந்து போகிறது. நாங்களும் பறந்துபோகிறோம்.
Míaƒe agbemeŋkekewo le ƒe blaadre, alo blaenyi, gake ne ŋusẽ gale mía ŋutie nye ema, elabena woƒe didi nye fuɖename kple aɖukliɖuɖu; wo nu va yi kaba, eye míedzo.
11 ௧௧ உமது கோபத்தின் வல்லமையையும், உமக்குப் பயப்படக்கூடிய விதமாக உமது கடுங்கோபத்தையும் அறிந்துகொள்கிறவன் யார்?
Ame kae nya wò dɔmedzoe ƒe ŋusẽ? Elabena wò dziku nu sẽ abe ale si woavɔ̃ wòe ene.
12 ௧௨ நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்களுடைய நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.
Fia ale si míaxlẽ míaƒe ŋkekewo dedie la mí, ale be dzi si me dziƒonunya le la nasu mía si.
13 ௧௩ யெகோவாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாக இருப்பீர்? உமது அடியார்களுக்காகப் பரிதபியும்.
O! Yehowa, bɔbɔ wò asi! Va se ɖe ɣe ka ɣi? Kpɔ nublanui na wò dɔlawo.
14 ௧௪ நாங்கள் எங்களுடைய வாழ்நாட்களெல்லாம் சந்தோஷித்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.
Tsɔ wò lɔlɔ̃ si meʋãna o la ɖi ƒoe na mí le ŋdi me, be míadzi ha kple dzidzɔ, eye míatso aseye le míaƒe ŋkekewo katã me.
15 ௧௫ தேவனே நீர் எங்களை சிறுமைப்படுத்திய நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருடங்களுக்கும் இணையாக எங்களை மகிழ்ச்சியாக்கும்.
Na míatso aseye, ɖe ŋkeke siwo katã nètu nu kpli mí kple ƒe siwo katã me nèhe fukpekpe va mía dzi la ta.
16 ௧௬ உமது செயல்கள் உமது ஊழியக்காரர்களுக்கும், உமது மகிமை அவர்களுடைய பிள்ளைகளுக்கும் விளங்குவதாக.
Na woaɖe wò dɔwɔwɔwo afia wò dɔlawo kple wò atsyɔ̃ afia wo viwo.
17 ௧௭ எங்களுடைய தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்களுடைய கைகளின் செயல்களை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்களுடைய கைகளின் செயல்களை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.
Aƒetɔ, míaƒe Mawu, na wò amenuveve nanɔ mía dzi, eye nàli ke míaƒe asinudɔwo na mí, ɛ̃, míaƒe asinudɔwo, nàna woali ke nyuie.

< சங்கீதம் 90 >