< சங்கீதம் 89 >

1 எஸ்ரானாகிய ஏத்தானின் மஸ்கீல் என்னும் போதக பாடல். யெகோவாவின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என்னுடைய வாயினால் அறிவிப்பேன்.
われヱホバの憐憫をとこしへにうたはん われ口もてヱホバの眞實をよろづ代につげしらせん
2 கிருபை என்றென்றைக்கும் உறுதிப்பட்டிருக்கும்; உமது உண்மையை வானங்களிலே நிறுவுவீர் என்றேன்.
われいふ あはれみは永遠にたてらる 汝はその眞實をかたく天にさだめたまはんと
3 என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடு உடன்படிக்கை செய்து, என்னுடைய ஊழியனாகிய தாவீதை நோக்கி:
われわが撰びたるものと契約をむすびわが僕ダビデにちかひたり
4 என்றென்றைக்கும் உன்னுடைய சந்ததியை நிலைநிறுத்தி, தலைமுறை தலைமுறையாக உன்னுடைய சிங்காசனத்தை நிறுவுவேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா)
われなんぢの裔をとこしへに固うしなんぢの座位をたてて代々におよばしめん (セラ)
5 யெகோவாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும்.
ヱホバよもろもろの天はなんぢの奇しき事跡をほめん なんぢの眞實もまた潔きものの會にてほめらるべし
6 வானத்தில் யெகோவாவுக்கு சமமானவர் யார்? பலவான்களின் மகன்களில் யெகோவாவுக்கு ஒப்பானவர் யார்?
蒼天にてたれかヱホバに類ふものあらんや 神の子のなかに誰かヱホバのごとき者あらんや
7 தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் பயப்படத்தக்கவர்.
神はきよきものの公會のなかにて畏むべきものなり その四周にあるすべての者にまさりて懼るべきものなり
8 சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, உம்மைப்போல வல்லமையுள்ள யெகோவா யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது.
萬軍の神ヱホバよヤハよ汝のごとく大能あるものは誰ぞや なんぢの眞實はなんぢをめぐりたり
9 தேவனே நீர் கடலின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கச்செய்கிறீர்.
なんぢ海のあるるををさめ その浪のたちあがらんときは之をしづめたまふなり
10 ௧0 நீர் ராகாபை வெட்டப்பட்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்; உமது வல்லமையான கரத்தினால் உம்முடைய எதிரிகளைச் சிதறடித்தீர்.
なんぢラハブを殺されしもののごとく撃碎きおのれの仇どもを力ある腕をもて打散したまへり
11 ௧௧ வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள எல்லோரையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.
もろもろの天はなんぢのもの地もまた汝のものなり世界とその中にみつるものとはなんぢの基したまへるなり
12 ௧௨ வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்; தாபோரும் எர்மோனும் உம்முடைய பெயர் விளங்கக் கெம்பீரிக்கும்.
北と南はなんぢ造りたまへり タボル、ヘルモンはなんぢの名によりて歓びよばふ
13 ௧௩ உமக்கு வல்லமையுள்ள கை இருக்கிறது; உம்முடைய கை பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகை உன்னதமானது.
なんぢは大能のみうでをもちたまふ なんぢの手はつよく汝のみぎの手はたかし
14 ௧௪ நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.
義と公平はなんぢの寳座のもとゐなり あはれみと眞實とは聖顔のまへにあらはれゆく
15 ௧௫ கெம்பீரசத்தத்தை அறியும் மக்கள் பாக்கியமுள்ளவர்கள்; யெகோவாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.
よろこびの音をしる民はさいはひなり ヱホバよかれらはみかほの光のなかをあゆめり
16 ௧௬ அவர்கள் உம்முடைய பெயரில் நாள்தோறும் சந்தோஷப்பட்டு, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்.
かれらは名によりて終日よろこび 汝の義によりて高くあげられたり
17 ௧௭ நீரே அவர்களுடைய பலத்தின் மகிமையாக இருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்களுடைய கொம்பு உயரும்.
かれらの力の榮光はなんぢなり 汝の惠によりてわれらの角はたかくあげられん
18 ௧௮ யெகோவாவால் எங்களுடைய கேடகமும், இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு.
そはわれらの盾はヱホバに屬われらの王はイスラエルの聖者につけり
19 ௧௯ அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: உதவிசெய்யக்கூடிய சக்தியை ஒரு வல்லமையுள்ளவன்மேல் வைத்து, மக்களில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.
そのとき異象をもてなんぢの聖徒につげたまはく われ佑助をちからあるものに委ねたり わが民のなかより一人をえらびて高くあげたり
20 ௨0 என்னுடைய ஊழியனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என்னுடைய பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம் செய்தேன்.
われわが僕ダビデをえて之にわが聖膏をそそげり
21 ௨௧ என்னுடைய கை அவனோடு உறுதியாக இருக்கும்; என்னுடைய கை அவனைப் பலப்படுத்தும்.
わが手はかれとともに堅くわが臂はかれを強くせん
22 ௨௨ எதிரி அவனை நெருக்குவதில்லை; துன்மார்க்கமான மகன் அவனை ஒடுக்குவதில்லை.
仇かれをしへたぐることなし惡の子かれを苦しむることなからん
23 ௨௩ அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்கி, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன்.
われかれの前にそのもろもろの敵をたふし彼をにくめるものを撃ん
24 ௨௪ என்னுடைய உண்மையும் என்னுடைய கிருபையும் அவனோடு இருக்கும்; என்னுடைய பெயரினால் அவன் கொம்பு உயரும்.
されどわが眞實とわが憐憫とはダビデとともに居り わが名によりてその角はたかくあげられん
25 ௨௫ அவனுடைய கையை மத்திய தரைக் கடலின்மேலும், அவனுடைய வலது கையை ஆறுகள்மேலும் ஆளும்படி வைப்பேன்.
われ亦かれの手を海のうへにおき そのみぎの手を河のうへにおかん
26 ௨௬ அவன் என்னை நோக்கி: நீர் என்னுடைய பிதா, என் தேவன், என்னுடைய இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.
ダビデ我にむかひて汝はわが父わが神わがすくひの岩なりとよばん
27 ௨௭ நான் அவனை எனக்கு முதலில் பிறந்தவனும், பூமியின் ராஜாக்களைவிட மகா உயர்ந்தவனுமாக்குவேன்.
われまた彼をわが初子となし地の王たちのうち最もたかき者となさん
28 ௨௮ என்னுடைய கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என்னுடைய உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.
われとこしへに憐憫をかれがためにたもち 之とたてし契約はかはることなかるべし
29 ௨௯ அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளவரை நிலைநிற்கவும் செய்வேன்.
われまたその裔をとこしへに存へ そのくらゐを天の日數のごとくながらへしめん
30 ௩0 அவனுடைய பிள்ளைகள் என்னுடைய நியாயங்களின்படி நடக்காமல், என்னுடைய வேதத்தை விட்டு விலகி;
もしその子わが法をはなれ わが審判にしたがひて歩まず
31 ௩௧ என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் என்னுடைய நியமங்களை மீறி நடந்தால்;
わが律法をやぶりわが誡命をまもらずば
32 ௩௨ அவர்களுடைய மீறுதலை சாட்டையினாலும், அவர்களுடைய அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.
われ杖をもてかれらの愆をただし鞭をもてその邪曲をただすべし
33 ௩௩ ஆனாலும் என்னுடைய கிருபையை அவனை விட்டு விலக்காமலும், என்னுடைய உண்மையில் மீறாமலும் இருப்பேன்.
されど彼よりわが憐憫をことごとくはとりさらず わが眞實をおとろへしむることなからん
34 ௩௪ என்னுடைய உடன்படிக்கையை மீறாமலும், என்னுடைய உதடுகள் சொன்னதை மாற்றாமலும் இருப்பேன்.
われおのれの契約をやぶらず己のくちびるより出しことをかへじ
35 ௩௫ ஒருமுறை என்னுடைய பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதிற்கு நான் பொய்சொல்லமாட்டேன்.
われ曩にわが聖をさして誓へり われダビデに虚偽をいはじ
36 ௩௬ அவனுடைய சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவனுடைய சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.
その裔はとこしへにつづきその座位は日のごとく恒にわが前にあらん
37 ௩௭ சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், வானத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று சொன்னீர். (சேலா)
また月のごとく永遠にたてられん空にある證人はまことなり (セラ)
38 ௩௮ ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர்; நீர் அபிஷேகம் செய்துவைத்தவன்மேல் கடுங்கோபமானீர்.
されどその受膏者をとほざけて棄たまへり なんぢ之をいきどほりたまへり
39 ௩௯ உமது அடியானுடன் நீர் செய்த உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, அவனுடைய கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர்.
なんぢ己がしもべの契約をいみ 其かんむりをけがして地にまでおとし給へり
40 ௪0 அவனுடைய மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, அவனுடைய பாதுகாப்பான இடங்களைப் பாழாக்கினீர்.
またその垣をことごとく倒し その保砦をあれすたれしめたまへり
41 ௪௧ வழிநடக்கிற அனைவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; தன்னுடைய அயலாருக்கு நிந்தையானான்.
その道をすぐるすべての者にかすめられ隣人にののしらる
42 ௪௨ அவனுடைய எதிரிகளின் வலது கையை நீர் உயர்த்தி, அவனுடைய விரோதிகள் அனைவரும் சந்தோஷிக்கும்படி செய்தீர்.
なんぢかれが敵のみぎの手をたかく擧そのもろもろの仇をよろこばしめたまへり
43 ௪௩ அவனுடைய வாளின் கூர்மையை மழுங்கச்செய்து, அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர்.
なんぢかれの劍の刃をふりかへして戰闘にたつに堪へざらしめたまひき
44 ௪௪ அவனுடைய மகிமையை இல்லாமல்போகச்செய்து, அவனுடைய சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர்.
またその光輝をけしその座位を地になげおとし
45 ௪௫ அவனுடைய வாலிபநாட்களைக் குறுக்கி, அவனை வெட்கத்தால் மூடினீர். (சேலா)
その年若き日をちぢめ恥をそのうへに覆たまへり (セラ)
46 ௪௬ எதுவரைக்கும், யெகோவாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ?
ヱホバよかくて幾何時をへたまふや自己をとこしへに隠したまふや忿怒は火のもゆるごとくなるべきか
47 ௪௭ என்னுடைய உயிர் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனிதர்கள் அனைவரையும் வீணாக படைக்கவேண்டியதென்ன?
ねがはくはわが時のいかに短かきかを思ひたまへ 汝いたづらにすべての人の子をつくりたまはんや
48 ௪௮ மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்? தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா) (Sheol h7585)
誰かいきて死をみず又おのがたましひを陰府より救ひうるものあらんや (セラ) (Sheol h7585)
49 ௪௯ ஆண்டவரே, நீர் தாவீதிற்கு உம்முடைய உண்மையைக்கொண்டு சத்தியம்செய்த உமது ஆரம்பநாட்களின் கிருபைகள் எங்கே?
主よなんぢが眞實をもてダビデに誓ひたまへる昔日のあはれみはいづこにありや
50 ௫0 ஆண்டவரே, உம்முடைய எதிரிகள் உம்முடைய ஊழியக்காரர்களையும், நீர் அபிஷேகம் செய்தவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,
主よねがはくはなんぢの僕のうくる謗をみこころにとめたまへ ヱホバよ汝のもろもろの仇はわれをそしりなんぢの受膏者のあしあとをそしれり 我もろもろの民のそしりをわが懐中にいだく
51 ௫௧ யெகோவாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான மக்கள் எல்லோராலும் நான் என்னுடைய மடியில் சுமக்கும் என்னுடைய நிந்தையையும் நினைத்தருளும்.
主よねがはくはなんぢの僕のうくる謗をみこころにとめたまへ ヱホバよ汝のもろもろの仇はわれをそしりなんぢの受膏者のあしあとをそしれり 我もろもろの民のそしりをわが懐中にいだく
52 ௫௨ யெகோவாவுக்கு என்றென்றைக்கும் நன்றி உண்டாகட்டும். ஆமென். ஆமென்.
ヱホバは永遠にほむべきかな アーメン アーメン

< சங்கீதம் 89 >