< சங்கீதம் 48 >

1 கோராகின் மகன்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல். யெகோவா பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த மலையிலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
Pieśń psalmu synów Korego. Wielki jest Pan, i bardzo chwalebny w mieście Boga naszego, na górze świętej swojej.
2 வடதிசையிலுள்ள சீயோன் மலை அழகான உயரமும் முழு பூமியின் மகிழ்ச்சியுமாக இருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.
Ozdobą krainy, uciechą wszystkiej ziemi jest góra Syon w stronach północnych, miasto króla wielkiego.
3 அதின் அரண்மனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.
Bóg w pałacach jego uznany jest za twierdzę wysoką.
4 இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஒன்றாகக் கடந்துவந்தார்கள்.
Bo oto królowie, gdy się zgromadzili i ciągnęli wespół,
5 அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள்.
Sami to ujrzawszy bardzo się zadziwili, a przestraszeni będąc prędko uciekali.
6 அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப்போல வேதனைப்பட்டார்கள்.
Strach ich tam ogarnął i boleść, jako niewiastę rodzącą.
7 கிழக்கு காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.
Wiatrem wschodnim pokruszysz okręty z Tarsys.
8 நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய யெகோவாவின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் பாதுகாப்பார். (சேலா)
Jakośmy słyszeli, takeśmy widzieli w mieście Pana zastępów, w mieście Boga naszego; Bóg je ugruntował aż na wieki. (Sela)
9 தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
Uważamy, o Boże! miłosierdzie twoje w pośród kościoła twego.
10 ௧0 தேவனே, உமது பெயர் வெளிப்படுகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடைசிவரையிலும் வெளிப்படுகிறது; உமது வலதுகை நீதியால் நிறைந்திருக்கிறது.
Jakie jest imię twoje, Boże! taka też jest chwała twoja aż do kończyn ziemi; sprawiedliwości pełna jest prawica twoja.
11 ௧௧ உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்காக சீயோன் மலை மகிழ்வதாக, யூதாவின் மக்கள் சந்தோஷப்படுவார்களாக.
NIech się rozweseli góra Syon: niech się rozradują córki Judzkie dla sądów twoich, Boże!
12 ௧௨ சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கோபுரங்களை எண்ணுங்கள்.
Otoczcie Syon, i obstąpcie go; policzcie wieże jego.
13 ௧௩ பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் சுவரை கவனித்து, அதின் அரண்மனைகளை உற்றுப்பாருங்கள்.
Przypatrujcie się pilnie basztom jego, a oglądajcie pałace jego, abyście umieli powiadać narodowi potomnemu.
14 ௧௪ இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள எல்லா காலங்களிலும் நம்முடைய தேவன்; மரணம்வரை நம்மை நடத்துவார்.
Że ten Bóg jest Bogiem naszym na wieki wieczne, a iż on naszym hetmanem będzie aż do śmierci.

< சங்கீதம் 48 >