< சங்கீதம் 21 >

1 இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். யெகோவாவே, உம்முடைய வல்லமையிலே இராஜா மகிழ்ச்சியாக இருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாகச் சந்தோஷப்படுகிறார்!
Przedniejszemu śpiewakowi pieśń Dawidowa. Panie! w mocy twojej raduje się król, a w zbawieniu twojem wielce się weseli.
2 அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாமலிருக்கிறீர். (சேலா)
Dałeś mu żądość serca jego, a prośby ust jego nie odmówiłeś mu. (Sela)
3 உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் தலையில் பொற்கிரீடம் அணிவிக்கிறீர்.
Albowiemeś go uprzedził błogosławieństwy hojnemi; włożyłeś na głowę jego koronę ze złota szczerego.
4 அவர் உம்மிடத்தில் ஆயுளைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள நீடித்த ஆயுளை அளித்தீர்.
Prosił cię o żywot, a dałeś mu przedłużenie dni na wieki wieków.
5 உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாக இருக்கிறது; மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு கொடுத்தீர்.
Wielka jest chwała jego w zbawieniu twojem; chwałą i zacnością przyodziałeś go;
6 அவர் நீடித்த ஆசீர்வாதங்களை அவர்களுக்கு கொடுக்கிறார்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.
Boś go wystawił na rozmaite błogosławieństwo aż na wieki; rozweseliłeś go weselem oblicza twego.
7 ஏனெனில் இராஜா யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறார்; உன்னதமான தேவனுடைய தயவினால் அசைக்கப்படாமல் இருப்பார்.
Gdyż król nadzieję ma w Panu, a z miłosierdzia Najwyższego nie będzie poruszony.
8 உமது கை உமது எதிரிகள் எல்லோரையும் எட்டிப்பிடிக்கும்; உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.
Znajdzie ręka twoja wszystkich nieprzyjaciół twoich, prawica twoja dosięże wszystkich, co cię w nienawiści mają.
9 உமது கோபத்தின் காலத்திலே அவர்களை நெருப்புச் சூளையாக்கிப்போடுவீர்; யெகோவா தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; நெருப்பு அவர்களை அழிக்கும்.
Uczynisz ich jako piec ognisty czasu gniewu twego; Pan w popędliwości swojej wytraci ich, a ogień ich pożre.
10 ௧0 அவர்கள் பிள்ளைகளை பூமியிலிருந்தும் அவர்கள் சந்ததியை மனுமக்களிலிருந்தும் அழிப்பீர்.
Plemię ich z ziemi wygubisz, a nasienie ich z synów ludzkich.
11 ௧௧ அவர்கள் உமக்கு விரோதமாக தீங்கு நினைத்தார்கள்; தீவினை செய்ய முயன்றார்கள்; ஒன்றும் வாய்க்காமல்போனது.
Albowiem czyhali na twoje złe; zmyślali radę, której dowieść nie mogli.
12 ௧௨ உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே எய்து அவர்களைத் திரும்பி ஓடச்செய்கிறீர்.
Przetoż wystawisz ich za cel; cięciwę twą wyciągniesz przeciwko twarzy ich.
13 ௧௩ யெகோவாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடித் துதிப்போம்.
Podnieśże się, Panie! w mocy twojej, tedy będziemy śpiewać i wysławiać możność twoję.

< சங்கீதம் 21 >