< சங்கீதம் 125 >

1 யெகோவாவை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் மலையைப்போல் இருப்பார்கள்.
上行之詩。 倚靠耶和華的人 好像錫安山,永不動搖。
2 மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருக்கிறதுபோல், யெகோவா இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய மக்களைச் சுற்றிலும் இருக்கிறார்.
眾山怎樣圍繞耶路撒冷, 耶和華也照樣圍繞他的百姓, 從今時直到永遠。
3 நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்களுடைய கைகளை நீட்டாதபடிக்கு, துன்மார்க்கத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சொத்தின்மேல் நிலைத்திருக்காது.
惡人的杖不常落在義人的分上, 免得義人伸手作惡。
4 யெகோவாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும்.
耶和華啊,求你善待那些為善 和心裏正直的人。
5 தங்களுடைய கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் யெகோவா அக்கிரமக்காரர்களோடு போகச்செய்வார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.
至於那偏行彎曲道路的人, 耶和華必使他和作惡的人一同出去受刑。 願平安歸於以色列!

< சங்கீதம் 125 >