< சங்கீதம் 121 >

1 ஆரோகண பாடல். எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக என்னுடைய கண்களை உயர்த்துகிறேன்.
Подижем очи своје ка горама; одакле ми долази помоћ?
2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும்.
Помоћ је мени од Господа, који је створио небо и земљу.
3 உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார்.
Неће дати да попузне нога твоја; не дремље чувар твој.
4 இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
Гле, не дремље и не спава чувар Израиљев.
5 யெகோவா உன்னைக் காக்கிறவர்; யெகோவா உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.
Господ је чувар твој, Господ је сен твој, Он ти је с десне стране.
6 பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
Дању те неће сунце убити ни месец ноћу.
7 யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார்.
Господ ће те сачувати од сваког зла, сачуваће душу твоју Господ.
8 யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார்.
Господ ће чувати улазак твој и излазак твој, одсад и довека.

< சங்கீதம் 121 >