< சங்கீதம் 119 >

1 ஆலெப். யெகோவாவுடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம வழியில் நடப்பவர்கள் பாக்கியவான்கள்.
Coek koi om ai loklam ah caeh ah, Angraeng ih kaalok to pazui kaminawk loe tahamhoih.
2 அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
A thuih ih loknawk to pakuem moe, palungthin boih hoiah anih pakrong kami loe tahamhoih.
3 அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
Nihcae loe zaehaih sah o ai; anih ih loklam ah caeh o.
4 உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாகக் கைக்கொள்ளும்படி நீர் கற்றுக்கொடுத்தீர்.
Na loklam to loktangta hoi pazui hanah kaicae khaeah nang thuih.
5 உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என்னுடைய நடைகள் நிலைத்திருந்தால் நலமாக இருக்கும்.
Aw, na paek ih loknawk to pazui thai hanah, lam nang patuek!
6 நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் நினைக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை.
Na paek ih loknawk boih to ka pakuem nahaeloe, azathaih ka tongh mak ai.
7 உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.
Katoeng na lokcaekhaih kam tuk naah, poektoenghaih hoiah nang to kang pakoeh han.
8 உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாமலிரும்.
Nang paek ih loknawk to ka pazui han; aw kai hae na pahnawt hmah roe ah.
9 பேத். வாலிபன் தன்னுடைய வழியை எதினால் சுத்தம்செய்வான்? உமது வசனத்திற்குக் கீழ்படிகிறதினால்தானே.
Kawbangmaw qoengthuem kami mah a caehhaih loklam to ciimsak thai tih? Na lok baktih toengah khosakhaih rang hoiah ni ciimsak tih.
10 ௧0 என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதவறிச் செல்ல விடாமலிரும்.
Palungthin boih hoiah nang to kang pakrong; Aw, nang paek ih loknawk hoi nam khraengsak hmah.
11 ௧௧ நான் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வசனத்தை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்.
Na nuiah zaehaih ka sak han ai ah, na lok to palung thungah ka suek boeh.
12 ௧௨ யெகோவாவே, நீர் வாழ்த்திற்குரியவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Aw Angraeng, taham na hoih! Nang paek ih loknawk to na patuk ah.
13 ௧௩ உம்முடைய வசனத்தின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என்னுடைய உதடுகளால் விவரித்திருக்கிறேன்.
Na pakha thung hoi tacawt na loknawk boih to pakha hoiah ka taphong boeh.
14 ௧௪ திரளான செல்வத்தில் சந்தோஷப்படுவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் சந்தோஷப்படுகிறேன்.
Hmuenmae congca hoi angraeng parai kami baktiah, na thuih ih loknawk pongah anghoehaih ka tawnh.
15 ௧௫ உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளை மனதில் வைக்கிறேன்.
Na loknawk to ka poek moe, na loklamnawk doeh ka khet han.
16 ௧௬ உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்.
Nang paek ih loknawk pongah kang hoe, na lok to ka pahnet mak ai.
17 ௧௭ கிமெல். உமது அடியேனுக்கு அனுகூலமாக இரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.
Ka hing moe, na lok pazui thai hanah, na tamna khaeah kahoih hmuen to sah ah.
18 ௧௮ உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என்னுடைய கண்களைத் திறந்தருளும்.
Na kaalok thungah dawnrai hmuennawk ka hnuk thai hanah, ka mik hae na paong pae ah.
19 ௧௯ பூமியிலே நான் அந்நியன்; உமது கற்பனைகளை எனக்கு மறையாமலிரும்.
Long ah angvin ah ka oh; nang paek ih loknawk to kai khae hoi hawk ving hmah.
20 ௨0 உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எந்தநேரமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் சோர்ந்துபோகிறது.
Na lokcaekhaih ka poek loiah ka hinghaih amro boeh.
21 ௨௧ உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட பெருமையுள்ளவர்களை நீர் கடிந்துகொள்ளுகிறீர்.
Na lokpaekhaihnawk hoiah amkhraeng ving, amoek kami hoi tangoeng ih kaminawk to nang mah na thuitaek.
22 ௨௨ நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டு அகற்றும்; நான் உம்முடைய சாட்சிகளுக்குக் கீழ்படிகிறேன்.
Nang thuih ih loknawk ka pazui pongah, kasaethuihaih hoi hnaphnaehaih to kai khae hoi na takhoe pae ving ah.
23 ௨௩ அதிகாரிகளும் உட்கார்ந்து எனக்கு விரோதமாகப் பேசிக்கொள்ளுகிறார்கள்; உமது ஊழியனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன்.
Angraengnawk mah kai kasae ang thuih o; toe na tamna loe nang paek ih loknawk ni ka poek.
24 ௨௪ உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், எனக்கு ஆலோசனை தருபவையாக இருக்கிறது.
Na thuih ih loknawk loe kang hoehaih hoi kai han poekhaih paekkung ah oh.
25 ௨௫ டாலெத். என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.
Ka hinghaih loe maiphu thungah anghnut sut, na lok baktih toengah na hingsak ah.
26 ௨௬ என்னுடைய வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Ka caehhaih loklam kawng ka thuih naah, nang pathim; nang paek ih loknawk to kai han na patuk ah.
27 ௨௭ உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.
Nang thuitaekhaih loklamnawk to na panoeksak ah; to tiah nahaeloe dawnrai hmuennawk to ka poek tih.
28 ௨௮ துயரத்தால் என்னுடைய ஆத்துமா கரைந்து போகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.
Palungset pongah ka hinghaih angpho sut boeh; na lok hoiah tha na caksak ah.
29 ௨௯ பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்.
Alinghaih loklam thung hoi ka loih thai hanah, tahmenhaih hoi na kaalok to na paek ah.
30 ௩0 மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன்.
Kai loe loktang lam to ka qoih moe, na lokcaekhaih ka hmaa ah ka suek boeh.
31 ௩௧ உமது சாட்சிகள்மேல் பற்றுதலாக இருக்கிறேன்; யெகோவாவே, என்னை வெட்கமடைய விடாமலிரும்.
Na thuih ih loknawk to kacakah ka patawnh boeh; Aw Angraeng, azathaih na tongsak hmah.
32 ௩௨ நீர் என்னுடைய இருதயத்தை விரிவாக்கும்போது, நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன்.
Ka palungthin nam ongsak boeh pongah, na thuih ih loklam pongah ka cawnh han.
33 ௩௩ எ. யெகோவாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுவரை நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.
Aw Angraeng, na thuih ih loknawk pazuihaih loklam to na patuk ah; to loklam to boeng khoek to ka pazui han.
34 ௩௪ எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என்னுடைய முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.
Na kaalok to ka pazui hanah, panoek thaihaih to na paek ah; ue, kaalok to palungthin boih hoiah ka pazui han.
35 ௩௫ உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாக இருக்கிறேன்.
Nang paek ih loknawk hoiah loklam na patuek ah; to loklam ah ni anghoehaih ka tawnh.
36 ௩௬ என்னுடைய இருதயம் பொருளாசையைச் சார்ந்து இருக்காமல், உமது சாட்சிகளைச் சார்ந்து இருக்கும்படி செய்யும்.
Ka palung hae khithaih bangah na ai ah, na thuih ih loknawk bangah paqoi ah.
37 ௩௭ மாயையைப் பார்க்காதபடி நீர் என்னுடைய கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.
Atho kaom ai hmuennawk khet han ai ah ka mik hae paqoi ving ah; na loklam ah na hingsak ah.
38 ௩௮ உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்குத்தத்தத்தை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும்.
Nang zithaih tawn, na tamna khaeah na lok to caksak ah.
39 ௩௯ நான் பயப்படுகிற அவமானத்தை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.
Na lokcaekhaih loe hoih baktih toengah, ka zit koek ih kasaethuihaih to na la pae ving ah.
40 ௪0 இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாக இருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.
Khenah, nang paek ih loknawk to ka poek khing; na toenghaih bangah na hingsak ah.
41 ௪௧ வௌ. யெகோவாவே, உம்முடைய வாக்குத்தத்ததின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.
Aw Angraeng, na tahmenhaih rang hoiah na lok baktih toengah, na pahlonghaih kai khaeah angzo nasoe.
42 ௪௨ அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு பதில் சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.
Na lok ah oephaih ka tawnh pongah, kai kasae thui kami to lok ka pathim han.
43 ௪௩ சத்திய வசனம் முற்றிலும் என்னுடைய வாயிலிருந்து நீங்கவிடாமலிரும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.
Ka pakha thung hoiah loktang lok to na la pae ving hmah; na lokcaekhaih ah ni oephaih to ka suek.
44 ௪௪ நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
Na kaalok to dungzan hoi dungzan khoek to ka pazui han.
45 ௪௫ நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், அகலமான பாதையில் நடப்பேன்.
Nang patuk ih loknawk to ka pakrong pongah, pakaahaih om ai ah ka caeh han.
46 ௪௬ நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.
Nang paek ih loknawk to siangpahrangnawk hmaa ah ka thuih han, azathaih ka tongh mak ai.
47 ௪௭ நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளில் மனமகிழ்ச்சியாக இருப்பேன்.
Kai loe ka palung ih, na lokpaekhaih ah kang hoe tih boeh.
48 ௪௮ நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையை உயர்த்துவேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன்.
Ka palung ih na lokpaekhaih bangah ban ka payangh tahang moe, nang patuk ih loknawk to ka poek han.
49 ௪௯ சாயீன். நீர் என்னை நம்பச்செய்த வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்.
Na tamna khaeah paek ih lok to panoek poe ah, to lok hoiah ni oephaih to nang paek.
50 ௫0 அதுவே என்னுடைய துன்பத்தில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்குத்தத்தம் என்னை உயிர்ப்பித்தது.
Patangkhang naah hae lok mah monghaih ang paek; na lok mah ni kai ang hingsak.
51 ௫௧ பெருமைக்காரர்கள் என்னை மிகவும் பரியாசம்செய்தும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.
Amoek kaminawk mah kai ang pahnui o thuih; toe kai loe na kaalok hoiah kam khraeng ving ai.
52 ௫௨ யெகோவாவே, ஆரம்பமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.
Aw Angraeng, canghnii ih lokcaekhaihnawk to ka pakuem poe pongah, monghaih to ang paek.
53 ௫௩ உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்களின் நடுக்கம் என்னைப் பிடித்தது.
Kasae kaminawk hoi na kaalok pahnawt kaminawk pongah, palungphuihaih mah kai ang pazawk.
54 ௫௪ நான் நிலையில்லாத குடியிருக்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்கு பாடல்களானது.
Nang patuk ih lok loe kholong ka caehhaih ahmuen kruekah kai ih laa ah oh.
55 ௫௫ யெகோவாவே, இரவுநேரத்தில் உமது பெயரை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.
Aw Angraeng, khoving ah, na hmin to ka poek moe, na kaaloknawk to ka pazui.
56 ௫௬ நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டதால், இது எனக்குக் கிடைத்தது.
Nang paek ih loknawk ka pazuihaih loe ka sakzong ih hmuen ah oh boeh.
57 ௫௭ ஹெத். யெகோவாவே, நீரே என்னுடைய பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
Aw Angraeng, nang loe kai taham ah na oh; na loknawk to ka pazui han, tiah ka thuih boeh.
58 ௫௮ முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்குத்தத்தத்தின்படி எனக்கு இரங்கும்.
Palungthin boih hoiah nang to kang pakrong boeh; na thuih ih lok baktih toengah na tahmen ah.
59 ௫௯ என்னுடைய வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என்னுடைய கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.
Ka caehhaih loklamnawk ka poek naah, nang paek ih loknawk bangah khok ka takan boeh.
60 ௬0 உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதிக்காமல் விரைந்தேன்.
Nang paek ih loknawk loe akra ai, karangah ka pazui roep.
61 ௬௧ துன்மார்க்கர்களின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை.
Kasae kaminawk mah kai ang tuk o; toe na kaalok to ka pahnet ai.
62 ௬௨ உமது நீதியான நியாயத்தீர்ப்புகளுக்காக, உம்மைத் துதிக்கும்படி பாதி இரவில் எழுந்திருப்பேன்.
Katoengah lok na caek pongah, aqum ah kang thawk moe, nang khaeah kawnhaih lok ka thuih han.
63 ௬௩ உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் நண்பன்.
Kai loe nang zithaih tawn kaminawk hoi nang paek ih loknawk pazui kaminawk boih ih, ampui ah ka oh.
64 ௬௪ யெகோவாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Aw Angraeng, long loe na tahmenhaih hoiah koi; na thuitaekhaih loknawk to na patuk ah.
65 ௬௫ தேத். யெகோவாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாக நடத்தினீர்.
Aw Angraeng, na lok baktih toengah, na tamna khaeah kahoih hmuen to na sah pae ah.
66 ௬௬ உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளில் நம்பிக்கையாக இருக்கிறேன்.
Nang paek ih loknawk to ka tang pongah, palunghahaih hoi kahoih lokcaekhaih to na paek ah.
67 ௬௭ நான் உபத்திரவப்படுவதற்கு முன்பு வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.
Loklam kam khraeng ving pongah, nang thuitaek vai boeh; toe vaihi loe na lok to ka tahngai boeh.
68 ௬௮ தேவனே நீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாக இருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Nang loe na hoih, na sak ih hmuen doeh hoih; nang paek ih thuitaekhaih loknawk to na patuk ah.
69 ௬௯ பெருமைக்காரர்கள் எனக்கு விரோதமாகப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்.
Amoek kaminawk mah amsawnlok hoiah kai ahmin ang set o sak; toe nang paek ih loknawk to palungthin boih hoiah ka pazui han.
70 ௭0 அவர்களுடைய இருதயம் கொழுத்திருக்கிறது; நானோ, உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்.
Nihcae ih palung loe moithawk baktiah amkhawk; toe kai loe na kaalok ah anghoehaih ka tawnh.
71 ௭௧ நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
Nang paek ih thuitaekhaih loknawk to kam tuk thai hanah, patangkhanghaih loe kai hanah hoih.
72 ௭௨ அநேக ஆயிரம் பொன் வெள்ளியைவிட, நீர் கொடுத்த வேதமே எனக்கு நலம்.
Na pakha pong ih kaalok loe kai hanah, sui hoi sumkanglung sangto pongah doeh hoih kue.
73 ௭௩ யோட். உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கினது; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.
Na ban hoiah nang sak moe, krang ah nang coengsak; nang paek ih loknawk kam tuk thai hanah, panoekthaihaih to na paek ah.
74 ௭௪ நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்.
Na lok ah oephaih ka suek pongah, nang zithaih tawn kaminawk mah ang hnuk o naah anghoe o tih.
75 ௭௫ யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.
Aw Angraeng, nang loe toenghaih hoiah lok na caek, na oepthohhaih hoiah ni kai patang nang khangsak, tito ka panoek.
76 ௭௬ நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி, உமது கிருபை என்னைத் தேற்றட்டும்.
Na tamna khaeah na suek ih lok baktih toengah, na palungnathaih mah monghaih na paek nasoe, tiah lawk ka thuih.
77 ௭௭ நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைக்கட்டும்; உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி.
Ka hing thai hanah, na palungnathaih kai khaeah om nasoe; na kaalok loe kang hoehaih ah oh.
78 ௭௮ பெருமைக்காரர்கள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போகட்டும்; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.
Amoek kaminawk loe takung tidoeh om ai ah ka nuiah sethaih sak o pongah, azat o nasoe; toe kai loe nang patuk ih loknawk to ka pakuem han.
79 ௭௯ உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னிடம் திரும்பட்டும்.
Nang zithaih tawn kami hoi na thuih ih loknawk panoek kaminawk loe, nang khaeah amlaem o let nasoe.
80 ௮0 நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என்னுடைய இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாக இருக்கட்டும்.
Azat ka tong han ai ah, nang thuitaekhaih loknawk pongah ka palung hae coek koi om ai ah om nasoe.
81 ௮௧ கப். உம்முடைய இரட்சிப்புக்கு என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.
Na pahlonghaih to ka koeh loiah, ka pakhra thazok sut boeh; toe kai loe na lok ah ni oephaih to ka suek.
82 ௮௨ எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்குத்தத்தத்தின்மேல் நோக்கமாக என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது.
Ka miknawk mah na lok to danh, toe hnu ai; natuek naah maw kai nang mongsak tih? tiah ka thuih.
83 ௮௩ புகையிலுள்ள தோல்பை போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.
Kai loe kazaek moihin pailang baktiah ni ka oh sut boeh, toe nang thuitaekhaih loknawk to ka pahnet ai.
84 ௮௪ உமது அடியேனுடைய நாட்கள் எவ்வளவு? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர்?
Na tamna ih ni loe nasetto maw akra vop tih? Kai pacaekthlaek kaminawk to natuek naah maw lok na caek han?
85 ௮௫ உம்முடைய வேதத்திற்கு விரோதமாக பெருமைக்காரர்கள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்.
Na kaalok baktih na ai ah, amoek kaminawk mah kai hanah tangqom ang takaeh pae o.
86 ௮௬ உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாக இருக்கிறது; அநியாயமாக என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்கு உதவி செய்யும்.
Nang paek ih loknawk boih loe oepthoh; tidoeh na ai ah nihcae mah kai ang pacaekthlaek o; na bom ah.
87 ௮௭ அவர்கள் என்னைப் பூமியில் இல்லாமல் நீக்கிவிடச் சற்றே தப்பினது; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை.
Long nuiah nihcae mah kai ang tamit o tom boeh, toe na paek ih loknawk to ka pahnawt sut ai.
88 ௮௮ உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்குத்தத்தத்தின் சாட்சியைக் காத்து நடப்பேன்.
Nam lunghaih hoiah ka hinghaih hae pathawk ah, to tiah ni pakha hoi na thuih ih loknawk to ka pakuem thai tih.
89 ௮௯ லாமேட். யெகோவாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.
Aw Angraeng, na lok loe van ah, dungzan khoek to cak.
90 ௯0 உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது.
Na oepthohhaih loe angzo han koi caanawk dung khoek to cak; long loe na caksak ih baktih toengah, oh poe.
91 ௯௧ உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்த நாள்வரைக்கும் நிற்கிறது; அனைத்தும் உம்மைச் சேவிக்கும்.
Na sakzong ih atawk loe vaihni khoek to cak, to sak ih hmuennawk loe na tamna ah ni oh o boih.
92 ௯௨ உமது வேதம் என்னுடைய மனமகிழ்ச்சியாக இல்லாமலிருந்தால், என்னுடைய துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.
Na kaalok to kang hoehaih ah om ai nahaeloe, patangkhanghaih hoiah kang hmaa tih boeh.
93 ௯௩ நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்.
Nang patuk ih loknawk to natuek naah doeh ka pahnet mak ai; to loknawk hoiah ni nang hingsak.
94 ௯௪ நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்.
Na pahlong ah, nang ih hmuen ah ni ka oh; kai loe nang patuk ih loknawk to ni ka pakrong.
95 ௯௫ துன்மார்க்கர்கள் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.
Kasae kaminawk loe kai hum hanah zing o; toe kai loe na thuih ih loknawk ni ka poek han.
96 ௯௬ நிறைவான அனைத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா பெரிது.
Kacung bit baktiah kamtueng hmuennawk boih loe boenghaih oh, tiah ka hnuk; toe nang paek ih loknawk loe paroeai kawk.
97 ௯௭ மேம். உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாக இருக்கிறேன்! நாள் முழுவதும் அது என்னுடைய தியானம்.
Aw na lok hae kawkruk maw ka palung! Athun qui ka poek.
98 ௯௮ நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என்னுடைய எதிரிகளிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.
Ka misanawk pongah nang paek ih loknawk mah palung ang hasak kue; to loknawk loe ka taengah oh o poe.
99 ௯௯ உம்முடைய சாட்சிகள் என்னுடைய தியானமாக இருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்கள் எல்லோரிலும் அறிவுள்ளவனாக இருக்கிறேன்.
Na thuih ih loknawk to ka poek pongah, kai patuk kaminawk boih pongah panoekhaih ka tawnh kue.
100 ௧00 உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைவிட ஞானமுள்ளவனாக இருக்கிறேன்.
Nang patuk ih loknawk to ka pazui pongah, canghnii ih kaminawk pongah doeh panoekhaih ka tawnh kue.
101 ௧0௧ உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, எல்லா பொல்லாத வழிகளுக்கும் என்னுடைய கால்களை விலக்குகிறேன்.
Na lok tahngaih thai hanah, kasae loklamnawk thungah khok ka takan ai.
102 ௧0௨ நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகமாட்டேன்.
Nang patuk boeh pongah, na lokcaekhaih thung hoiah kam khraeng ai.
103 ௧0௩ உம்முடைய வார்த்தைகள் என்னுடைய நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என்னுடைய வாய்க்கு அவைகள் தேனிலும் இனிமையானதாக இருக்கும்.
Ka pataeng naah na loknawk loe kawkruk maw luep! ue, ka pakha ah loe khoitui pongah doeh luep kue!
104 ௧0௪ உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
Nang patuk ih loknawk rang hoiah palunghahaih to ka hnuk; to pongah katoeng ai loklamnawk boih to ka hnukma.
105 ௧0௫ நூன். உம்முடைய வசனம் என்னுடைய கால்களுக்குத் தீபமும், என்னுடைய பாதைக்கு வெளிச்சமுமாக இருக்கிறது.
Na lok loe ka khok hanah hmaithaw ah oh moe, ka caehhaih loklam hanah aanghaih ah oh.
106 ௧0௬ உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.
Katoeng na lokcaekhaih pazui han, tiah lokkamhaih to ka caksak han.
107 ௧0௭ நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; யெகோவாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.
Paroeai patang ka khang; Aw Angraeng, na lok baktih toengah, na pathawk ah.
108 ௧0௮ யெகோவாவே, என்னுடைய வாயின் உற்சாகபலிகளை நீர் ஏற்றுக்கொண்டு, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.
Aw Angraeng, ka pakha mah koehhaih baktiah paek ih hmuen to nang talawk pae hanah, kang hnik; na lokcaekhaihnawk to na patuk ah.
109 ௧0௯ என்னுடைய உயிர் எப்பொழுதும் என்னுடைய கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறக்கமாட்டேன்.
Ka hinghaih loe ka ban ah ni oh poe; toe na kaalok to ka pahnet ai.
110 ௧௧0 துன்மார்க்கர்கள் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறிப் போகமாட்டேன்.
Kasae kaminawk mah kai hanah thaang ang patung pae o; toe kai loe nang paek ih loknawk hoi kam khraeng ving ai.
111 ௧௧௧ உம்முடைய சாட்சிகளை நிரந்தர சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என்னுடைய இருதயத்தின் மகிழ்ச்சி.
Na thuih ih loknawk loe kai hanah dungzan qawk ah oh moe, ka palung anghoehaih ah oh.
112 ௧௧௨ முடிவுவரை இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என்னுடைய இருதயத்தைச் சாய்த்தேன்.
Nang thuitaekhaih loknawk boeng khoek to pazui poe hanah, ka palungthin hae ka paongh.
113 ௧௧௩ சாமெக். வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.
Poek angphae kaminawk to ka hnukma; toe na kaalok loe ka palung.
114 ௧௧௪ என்னுடைய மறைவிடமும் என்னுடைய கேடகமும் நீரே; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.
Nang loe ka buephaih hoi kai pakaahaih ah na oh; na lok ah oephaih ka tawnh.
115 ௧௧௫ பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.
Nangcae kahoih ai hmuen sah kaminawk, kai khae hoi tacawt oh; ka Sithaw mah paek ih loknawk to ka pazui han.
116 ௧௧௬ நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என்னுடைய நம்பிக்கை வீணாகிப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாமல் இரும்.
Ka hing thai hanah, na lok baktih toengah na patawn ah; oephaih ka tawnh pongah na zatsak hmah.
117 ௧௧௭ என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, எந்தநாளும் உம்முடைய பிரமாணங்களில் தியானமாக இருப்பேன்.
Ka loih hanah, na patawn ah; nang thuitaekhaih loknawk to ka pazui poe han.
118 ௧௧௮ உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற அனைவரையும் மிதித்துப் போடுகிறீர்; அவர்களுடைய சிந்தனை வஞ்சனையானது.
Na thuitaekhaih loknawk hoi amkhraeng kaminawk boih to na pahnawt; nihcae loe aling hanah lok amlai o.
119 ௧௧௯ பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரையும் துருவைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்.
Kami zae, long kaminawk boih to sum aek baktiah na takhoe baat pongah, na thuih ih loknawk to ka palung.
120 ௧௨0 உமக்குப் பயப்படும் பயத்தால் என்னுடைய உடல் சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.
Nang kang zit loiah ka tasoeh; na lokcaekhaihnawk to ka zit.
121 ௧௨௧ ஆயின். நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாமல் இரும்.
Kai loe kamsoem lokcaekhaih hoi toenghaih to ka sak boeh; kai hnaphnae kaminawk khaeah na caeh taak hmah.
122 ௧௨௨ உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; பெருமைக்காரர்கள் என்னை ஒடுக்கச்செய்யாதிரும்.
Na tamna kai ka hoih thai hanah na caksak ah; amoek kaminawk mah na pacaekthalek o hmah nasoe.
123 ௧௨௩ உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைகளுக்கும் காத்திருக்கிறதினால் என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது.
Na pahlonghaih hoi na toenghaih loknawk to, mik hoiah ka khet.
124 ௧௨௪ உமது ஊழியனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Na palungnathaih baktih toengah, na tamna khaeah sah rae ah loe, nang thuitaekhaih loknawk to na patuk ah.
125 ௧௨௫ நான் உமது ஊழியன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.
Kai loe na tamna ah ni ka oh; na thuih ih loknawk ka panoek thai hanah, thaikophaih to na paek ah.
126 ௧௨௬ நீதியைச்செய்யக் யெகோவாவுக்கு வேளை வந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிராணத்தை மீறினார்கள்.
Aw Angraeng, vaihi loe na toksakhaih atue ah ni oh boeh; nihcae loe na kaalok to phraek o boeh.
127 ௧௨௭ ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாக உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.
Sui pongah doeh, ue, atui kaciim sui pongah doeh, nang paek ih loknawk to ka palung kue.
128 ௧௨௮ எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, அனைத்து பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
To pongah nang paek ih loknawk boih loe toeng tiah ka poek; katoeng ai loklamnawk boih loe ka hnukma.
129 ௧௨௯ பே. உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என்னுடைய ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்.
Na thuih ih loknawk loe dawnrai han oh; to pongah ka pakhra mah pazui.
130 ௧௩0 உம்முடைய வசனத்தின் விளக்கம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.
Amtuengsak ih na loknawk mah aanghaih to ang paek moe, panoek ai kaminawk hanah panoekthaihaih to a paek.
131 ௧௩௧ உம்முடைய கற்பனைகளை நான் விரும்புகிறபடியால், என்னுடைய வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்.
Na paek ih loknawk to ka poek loiah, angpho hoiah pakha ka aang sut boeh.
132 ௧௩௨ உம்முடைய பெயரை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும்.
Na hmin palung kaminawk khaeah na sak ih baktih toengah, palungnathaih hoiah na khen ah.
133 ௧௩௩ உம்முடைய வார்த்தையிலே என்னுடைய காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆட்கொள்ளச்செய்யாமல் இரும்.
Na lok hoiah ka khok tangkannawk hae toengsak ah; zaehaih mah na uk hmah nasoe.
134 ௧௩௪ மனிதர்கள் செய்யும் அநீதிகளுக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன்.
Nang patuk ih loknawk to ka pazui thai hanah, pacaekthlaekhaih thung hoiah na loisak ah.
135 ௧௩௫ உமது ஊழியன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்து, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Na tamna nuiah na mikhmai to pansak ah loe, nang thuitaekhaih loknawk to na patuk ah.
136 ௧௩௬ உம்முடைய வேதத்தை மனிதர்கள் காத்து நடக்காதபடியால், என்னுடைய கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.
Kaminawk mah na kaalok to pazui o ai pongah, ka mik hoiah mikkhraetui vapuituinawk baktiah longh.
137 ௧௩௭ த்சாடே. யெகோவாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
Aw Angraeng, nang loe na toeng, na lokcaekhaihnawk doeh toeng.
138 ௧௩௮ நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.
Na thuih ih loknawk loe toeng moe, oepthoh.
139 ௧௩௯ என்னுடைய எதிரிகள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், என்னுடைய பக்திவைராக்கியம் என்னை அழிக்கிறது.
Ka misanawk mah na thuih ih loknawk pahnet o ving boeh pongah, poekhaih tha ang zok o sak sut boeh.
140 ௧௪0 உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.
Na lok loe ciim parai; to pongah na tamna mah palung.
141 ௧௪௧ நான் சிறியவனும் அசட்டை செய்யப்பட்டவனுமாக இருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.
Kai loe takpum thoengkae moe, hnap han koi kami ah ka oh; toe nang paek ih loknawk to ka pahnet ai.
142 ௧௪௨ உம்முடைய நீதி நிரந்தர நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.
Na toenghaih loe dungzan khoek to oh, na lok loe loktang ah oh.
143 ௧௪௩ துயரமும் வேதனையும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என்னுடைய மனமகிழ்ச்சி.
Raihaih hoi patanghaih mah kai ang khuk khoep boeh; toe nang paek ih loknawk loe kang hoehaih ah oh.
144 ௧௪௪ உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.
Na thuih ih katoeng loknawk loe dungzan khoek to cak; ka hinghaih hanah, panoekthaihaih to na paek ah.
145 ௧௪௫ கோப். முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.
Palungthin boih hoiah ka hangh, Aw Angraeng, na tahngai pae ah! Nang thuitaekhaih loknawk to ka pazui han.
146 ௧௪௬ உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னைக் காப்பாற்றும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.
Nang khaeah kang hang; na thuih ih loknawk pazui thai hanah, na pahlong ah.
147 ௧௪௭ அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.
Akhawnbang khawnthaw ah nang khaeah kang hangh; na lok ah oephaih ka tawnh.
148 ௧௪௮ உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த இரவு நேரங்களுக்கு முன்னே என்னுடைய கண்கள் விழித்துக்கொள்ளும்.
Na lok ka poek hanah, qum taning ah kang lawt.
149 ௧௪௯ உம்முடைய கிருபையின்படி என்னுடைய சத்தத்தைக் கேளும்; யெகோவாவே, உம்முடைய நியாயத்தீர்ப்பின்படி என்னை உயிர்ப்பியும்.
Nam lunghaih baktih toengah ka hanghaih lok hae na tahngai pae ah; Aw Angraeng, na lokcaekhaih baktih toengah, na pathawk ah.
150 ௧௫0 தீமையைப் பின்பற்றுகிறவர்கள் நெருங்கி இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்திற்குத் தூரமாக இருக்கிறார்கள்.
Kasae poekhaih pazui kaminawk loe kasae sak hanah kai khaeah anghnaih o aep; toe nihcae loe na kaalok hoiah angthla o.
151 ௧௫௧ யெகோவாவே, நீர் அருகில் இருக்கிறீர்; உமது கற்பனைகளெல்லாம் உண்மை.
Aw Angraeng, nang loe na zoi, nang paek ih loknawk boih loe loktang lok ah oh.
152 ௧௫௨ நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க நிறுவினீர் என்பதை, அவைகளால் நான் நெடுநாளாக அறிந்திருக்கிறேன்.
Na thuih ih loknawk loe dungzan khoek to na caksak boeh, tito canghnii hoi ni ka panoek boeh.
153 ௧௫௩ ரேஷ். என்னுடைய உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; உமது வேதத்தை மறக்கமாட்டேன்.
Na kaalok to ka pahnet ai pongah, patang ka khanghaih hae na poek pae ah loe, na pahlong ah.
154 ௧௫௪ எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.
Kai hae angsak haih ah loe, na krang ah; na lok baktih toengah na hingsak ah.
155 ௧௫௫ இரட்சிப்பு துன்மார்க்கர்களுக்குத் தூரமாக இருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடமாட்டார்கள்.
Kasae kaminawk loe na thuitaekhaih loknawk to pakrong o ai pongah, pahlonghaih hoiah angthla o.
156 ௧௫௬ யெகோவாவே, உம்முடைய இரக்கங்கள் பெரியவைகளாக இருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.
Aw Angraeng, na palungnathaih loe len parai; na lokcaekhaihnawk baktih toengah kai hae na hingsak ah.
157 ௧௫௭ என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டுவிலகமாட்டேன்.
Kai pacaekthlaek kami hoi ka misanawk loe pop o parai; toe kai loe na thuih ih loknawk hoiah kam khraeng ai.
158 ௧௫௮ உமது வசனத்தைக் கைக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாக இருந்தது.
Nihcae loe na lok pazui o ai pongah, oep om ai kaminawk to ka khet naah ka panuet.
159 ௧௫௯ இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; யெகோவாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.
Nang patuk ih loknawk kawkruk maw ka palung, tito panoek ah; Aw Angraeng, nam lunghaih ah na hingsak ah.
160 ௧௬0 உம்முடைய வசனம் முழுவதும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.
Na lok loe tangsuek na hoi boeh ni loktang ah oh; katoeng lok na caekhaihnawk boih loe dungzan khoek to cak.
161 ௧௬௧ ஷீன். அதிகாரிகளும் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், ஆனாலும் என்னுடைய இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது.
Takung om ai ah angraegnawk mah kai ang pacaekthlaek o; toe ka palungthin mah loe na lok to zit.
162 ௧௬௨ மிகுந்த கொள்ளைப்பொருட்களைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின் பெயரில் மகிழுகிறேன்.
Pop parai hmuenmae hnu kami baktih toengah, kai loe na lok pongah ni anghoehaih ka tawnh.
163 ௧௬௩ பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.
Kai loe amsawnlok to ka hnukma moe, ka panuet, toe na kaalok loe ka palung.
164 ௧௬௪ உமது நீதிநியாயங்களுக்காக, ஒருநாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.
Na caek ih katoeng lok pongah, nito naah vai sarihto nang kang pakoeh.
165 ௧௬௫ உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு தடைகள் இல்லை.
Na kaalok palung kaminawk loe kalen parai monghaih to tawnh o; nihcae to tih mah doeh pakha mak ai.
166 ௧௬௬ யெகோவாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்.
Aw Angraeng, na pahlonghaih to ka zing moe, nang paek ih loknawk to ka pazui boeh.
167 ௧௬௭ என்னுடைய ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.
Na thuih ih loknawk to palungthin boih, ka hinghaih boih mah pazui boeh.
168 ௧௬௮ உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என்னுடைய வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது.
Nang patuk ih loknawk hoi na thuih ih loknawk to ka pazui boeh; ka loklamnawk boih loe na hmaa ah oh.
169 ௧௬௯ தெள. யெகோவாவே, என்னுடைய கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.
Aw Angraeng, ka hanghaih lok hae na hmaa ah pha nasoe; na lok baktih toengah panoekhaih na paek ah.
170 ௧௭0 என்னுடைய விண்ணப்பம் உமது சந்நிதியில் வரட்டும்; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும்.
Tahmen kang hnikhaih lok hae na hmaa ah pha nasoe; na thuih ih lok baktih toengah na loisak ah.
171 ௧௭௧ உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என்னுடைய உதடுகள் உமது துதியைப் பிரபலப்படுத்தும்.
Nang thuitaekhaih loknawk to nang patuk naah, ka pahni mah pakoehhaih lok to thui tih.
172 ௧௭௨ உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என்னுடைய நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.
Nang paek ih loknawk boih loe toeng pongah, ka palai mah na lok to laa ah sah tih.
173 ௧௭௩ நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாக இருக்கட்டும்.
Nang patuk ih loknawk to ka qoih boeh pongah, na ban mah kai na bomh nasoe.
174 ௧௭௪ யெகோவாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாக இருக்கிறேன்; உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி.
Aw Angraeng, na pahlonghaih hnuk han ka koeh phi boeh; na kaalok loe kang hoehaih ah oh.
175 ௧௭௫ என்னுடைய ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கட்டும்; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாக இருக்கட்டும்.
Nang kang pakoeh thai hanah, ka pakhra hae na pathawk ah; na lokcaekhaihnawk mah na bomh nasoe.
176 ௧௭௬ காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடும்; உமது கற்பனைகளை நான் மறக்கமாட்டேன்.
Kai loe tuu kanghmaa baktiah loklam kang hmang sut boeh; na tamna to pakrong ah; nang paek ih loknawk to ka pahnet ai.

< சங்கீதம் 119 >