< சங்கீதம் 111 >

1 அல்லேலூயா, செம்மையானவர்களுடைய கூட்டத்திலும் சபையிலும் யெகோவாவை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.
Аллилуия. Славлю Тебя, Господи, всем сердцем моим в совете праведных и в собрании.
2 யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது.
Велики дела Господни, вожделенны для всех, любящих оные.
3 அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.
Дело Его - слава и красота, и правда Его пребывает вовек.
4 அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார், யெகோவா இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர்.
Памятными соделал Он чудеса Свои; милостив и щедр Господь.
5 தமக்குப் பயந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.
Пищу дает боящимся Его; вечно помнит завет Свой.
6 தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால், தமது செயல்களின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.
Силу дел Своих явил Он народу Своему, чтобы дать ему наследие язычников.
7 அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.
Дела рук Его - истина и суд; все заповеди Его верны,
8 அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாகச் செய்யப்பட்டவைகள்.
тверды на веки и веки, основаны на истине и правоте.
9 அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நிரந்தர உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய பெயர் பரிசுத்தமும் பயங்கரமுமானது.
Избавление послал Он народу Своему; заповедал на веки завет Свой. Свято и страшно имя Его!
10 ௧0 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.
Начало мудрости - страх Господень; разум верный у всех, исполняющих заповеди Его. Хвала Ему пребудет вовек

< சங்கீதம் 111 >