< சங்கீதம் 10 >

1 யெகோவாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? துன்பம் நேரிடுகிற நேரங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?
யெகோவாவே, நீர் ஏன் தூரத்தில் நிற்கிறீர்? துன்ப நேரங்களில் நீர் ஏன் மறைந்துகொள்கிறீர்?
2 துன்மார்க்கன் தன்னுடைய பெருமையினால் ஏழ்மையானவனை கொடூரமாகத் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.
கொடுமையானவன் பெருமையினால் பலவீனமானவர்களை வேட்டையாடுகிறான்; அவன் தீட்டுகிற சதித்திட்டங்களில் அவர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.
3 துன்மார்க்கன் தன்னுடைய உள்ளத்தின் ஆசையில் பெருமை பாராட்டுகிறான், பொருளை அபகரிக்கிறவன் யெகோவாவைச் சபித்து அசட்டைசெய்கிறான்.
அவன் தன் இருதயத்தின் பேராசைகளைக் குறித்துப் பெருமைகொள்கிறான்; அவன் பேராசைக்காரரை வாழ்த்தி யெகோவாவை நிந்திக்கிறான்.
4 துன்மார்க்கன் தன்னுடைய கர்வத்தினால் தேவனைத் தேடமாட்டான்; அவனுடைய நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே.
கொடுமையானவன் தன் பெருமையின் நிமித்தம் இறைவனைத் தேடுவதில்லை; அவனுடைய சிந்தனைகளிலெல்லாம் அவருக்கு இடமேயில்லை.
5 அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாக இருக்கின்றன; தன்னுடைய எதிராளிகள் எல்லோர்மேலும் சீறுகிறான்.
அவனுடைய வழிகள் எப்பொழுதுமே செழிப்பாயிருக்கின்றன; உமது நீதிநெறிகளை அவன் ஒதுக்கி வைத்துள்ளான்; தன் பகைவர் அனைவரையும் ஏளனம் செய்கிறான்.
6 நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லை என்று தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.
அவன் தனக்குள்ளே, “என்னை ஒன்றும் அசைக்கப்படுவதில்லை, எனக்குத் தலைமுறை தலைமுறைதோறும் கஷ்டம் வராது” என்று சொல்லிக்கொள்கிறான்.
7 அவன் வாய் சபிப்பினாலும், கபடத்தினாலும், கொடுமையினாலும், நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.
அவனுடைய வாய் சாபமும் பொய்யும் கொடுமையும் நிறைந்தது; அவனுடைய நாவின்கீழே பிரச்சனையும் தீமையும் இருக்கின்றன.
8 கிராமங்களின் மறைவான இடங்களிலே மறைந்திருந்து, மறைவான இடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவனுடைய கண்கள் நோக்கிக்கொண்டிருக்கின்றன.
அவன் கிராமங்களின் அருகே பதுங்கிக் காத்திருக்கிறான்; பதுங்கியிருந்து குற்றமற்றவனைக் கொலைசெய்கிறான். திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே கண்ணோக்கமாயிருந்து,
9 தன்னுடைய கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் மறைந்திருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் மறைந்திருந்து, அவனைத் தன்னுடைய வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.
பதுங்கியிருக்கும் சிங்கத்தைப்போல் காத்திருக்கிறான். அவன் ஆதரவற்றோரைப் பிடிப்பதற்காக காத்திருக்கிறான்; அவன் உதவியற்றோரைப் பிடித்து தன் வலையில் இழுத்துக்கொள்கிறான்.
10 ௧0 திக்கற்றவர்கள் தன்னுடைய பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான்.
அவனிடம் அகப்பட்டவர்கள் நசுக்கப்பட்டு நிலைகுலைந்து போகிறார்கள்; அவனுடைய பெலத்தினால் அவர்கள் வீழ்ந்துபோகிறார்கள்.
11 ௧௧ தேவன் அதை மறந்தார் என்று அவர் தம்முடைய முகத்தை மறைத்து, எப்போதும் அதைக் காணமாட்டார் என்றும்; தன்னுடைய இருதயத்திலே சொல்லிகொள்ளுகிறான்.
“இறைவன் கண்டுகொள்ளமாட்டார்; அவர் தமது முகத்தை மறைத்து, ஒருபோதும் அதைக் காண்பதில்லை” என்று கொடுமையானவன் தனக்குள் சொல்லிக்கொள்கிறான்.
12 ௧௨ யெகோவாவே, எழுந்தருளும்; தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறக்காமலிரும்.
யெகோவாவே, எழுந்தருளும்; இறைவனே, உமது கரத்தை உயர்த்தும்; ஆதரவற்றோரை மறவாதிரும்.
13 ௧௩ துன்மார்க்கன் தேவனை அசட்டைசெய்து, நீர் கேட்டு விசாரிப்பதில்லை; என்று தன்னுடைய இருதயத்தில் ஏன் சொல்லிக்கொள்ளவேண்டும்?
கொடுமையானவன் இறைவனை நிந்திப்பது ஏன்? “அவர் என்னிடம் கணக்குக் கேட்பதில்லை” என்று அவன் தனக்குள்ளேயே சொல்லிக்கொள்வது ஏன்?
14 ௧௪ அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும், துக்கத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.
ஆனாலும் இறைவனே, நீரோ பாதிக்கப்பட்டோரின் பிரச்சனையைக் காண்கிறீர்; நீர் அவர்களின் துயரங்களைக் கவனித்து, அவர்களுக்கு உதவிசெய்யக் கருத்தாய் இருக்கிறீர். பாதிக்கப்பட்டோர்கள் தம்மை உம்மிடம் ஒப்படைக்கிறார்கள்; திக்கற்றவர்களுக்கு நீரே துணையாய் இருக்கிறீர்.
15 ௧௫ துன்மார்க்கனும் பொல்லாதவனுமாக இருக்கிறவனுடைய கையை முறித்துவிடும்; அவனுடைய துன்மார்க்கம் காணாமற்போகும்வரை அதைத் தேடி விசாரியும்.
கொடுமையுள்ள மனிதனின் கரங்களை முறியும். தீயவனுடைய கொடுமையைக் குறித்து அவனிடம் கணக்குக் கேளும். இல்லையெனில் அதைக் கண்டுபிடிக்க முடியாது.
16 ௧௬ யெகோவா எல்லாக் காலங்களுக்கும் இராஜாவாக இருக்கிறார்; அந்நியமக்கள் அவருடைய தேசத்திலிருந்து அழிந்து போவார்கள்.
யெகோவா என்றென்றைக்கும் அரசராயிருக்கிறார்; அவருடைய நாட்டிலிருந்து பிற மக்கள் அழிந்துபோவார்கள்.
17 ௧௭ யெகோவாவே, ஏழைகளுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை உறுதிப்படுத்துவீர்.
யெகோவாவே, நீர் துன்பப்பட்டோரின் வாஞ்சையைக் கேட்கிறீர்; அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுடைய கதறுதலைக் கேட்கிறார்.
18 ௧௮ மண்ணான மனிதன் இனிப் பலவந்தம்செய்யத் தொடராமல், தேவனே நீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளுவீர்.
பூமிக்குரிய மனிதன் இனி ஒருபோதும் மற்றவர்களுக்கு திகிலூட்டுபவனாய் இராதபடி, நீர் திக்கற்றவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கிறீர்.

< சங்கீதம் 10 >