< நீதிமொழிகள் 4 >

1 பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.
Oíd hijos la enseñanza del padre; y estád atentos, para que sepáis inteligencia.
2 நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை விடாதிருங்கள்.
Porque os doy buen enseñamiento: no desamparéis mi ley.
3 நான் என்னுடைய தகப்பனுக்குப் பிரியமான மகனும், என்னுடைய தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.
Porque yo fui hijo de mi padre, delicado y único delante de mi madre:
4 அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன்னுடைய இருதயம் என்னுடைய வார்த்தைகளைக் காத்துக்கொள்வதாக; என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
Y enseñábame, y me decía: Sustente mis razones tu corazón: guarda mis mandamientos, y vivirás.
5 ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என்னுடைய வாயின் வார்த்தைகளை மறக்காமலும் விட்டு விலகாமலும் இரு.
Adquiere sabiduría, adquiere inteligencia: no te olvides, ni te apartes de las razones de mi boca.
6 அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாக இரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.
No la dejes, y ella te guardará; ámala, y conservarte ha.
7 ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
Primeramente sabiduría: adquiere sabiduría, y ante toda tu posesión adquiere inteligencia.
8 நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உனக்கு மரியாதை செலுத்தும்.
Engrandécela, y ella te engrandecerá; ella te honrará, cuando tú la hubieres abrazado.
9 அது உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடத்தைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.
Dará a tu cabeza aumento de gracia: corona de hermosura te entregará.
10 ௧0 என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன்னுடைய ஆயுளின் வருடங்கள் அதிகமாகும்.
Oye, hijo mío, y recibe mis razones; y multiplicársete han años de vida.
11 ௧௧ ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.
Por el camino de la sabiduría te he encaminado; y por veredas derechas te he hecho andar.
12 ௧௨ நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.
Cuando por ellas anduvieres, no se estrecharán tus pasos; y si corrieres, no tropezarás.
13 ௧௩ புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு உயிர்.
Ten asida la instrucción, no la dejes: guárdala, porque ella es tu vida.
14 ௧௪ துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே; தீயோர்களுடைய வழியில் நடக்காதே.
No entres por la vereda de los impíos: ni vayas por el camino de los malos:
15 ௧௫ அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்துபோ.
Desampárala; no pases por ella: apártate de ella, y pasa.
16 ௧௬ தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது; அவர்கள் யாரையாவது விழச்செய்யாமல் இருந்தால் அவர்களுடைய தூக்கம் கலைந்துபோகும்.
Porque no duermen, si no hicieren mal; y pierden su sueño, si no han hecho caer.
17 ௧௭ அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.
Porque comen pan de maldad, y beben vino de robos.
18 ௧௮ நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போல இருக்கும்.
Mas la vereda de los justos es como la luz del lucero: auméntase, y alumbra hasta que el día es perfecto.
19 ௧௯ துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்; தாங்கள் எதினால் இடறுகிறோம் என்பதை அறியமாட்டார்கள்.
El camino de los impíos es como la oscuridad: no saben en qué tropiezan.
20 ௨0 என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி; என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய்.
Hijo mío, está atento a mis palabras; y a mis razones inclina tu oreja:
21 ௨௧ அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; அவைகளை உன்னுடைய இருதயத்திற்குள்ளே காத்துக்கொள்.
No se aparten de tus ojos: mas guárdalas en medio de tu corazón;
22 ௨௨ அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும், அவர்களுடைய உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.
Porque son vida a los que las hallan; y medicina a toda su carne.
23 ௨௩ எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள், அதிலிருந்து ஜீவஊற்று புறப்படும்.
Sobre toda cosa guardada, guarda tu corazón; porque de él mana la vida.
24 ௨௪ வாயின் தாறுமாறுகளை உன்னைவிட்டு அகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.
Aparta de ti la perversidad de la boca; y la iniquidad de labios aleja de ti.
25 ௨௫ உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக; உன்னுடைய கண்ணின் இமைகள் உனக்கு முன்னே செவ்வையாகப் பார்க்கட்டும்.
Tus ojos miren lo recto; y tus párpados enderecen tu camino delante de ti.
26 ௨௬ உன்னுடைய நடைகளைச் சீர்தூக்கிப்பார்; உன்னுடைய வழிகளெல்லாம் பத்திரப்பட்டிருக்கட்டும்.
Pesa la vereda de tus pies; y todos tus caminos sean ordenados.
27 ௨௭ வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே; உன்னுடைய காலைத் தீமைக்கு விலக்கு.
No te apartes a diestra, ni a siniestra: aparta tu pie del mal.

< நீதிமொழிகள் 4 >