< நீதிமொழிகள் 25 >

1 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனிதர்கள் பெயர்த்து எழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்:
גם-אלה משלי שלמה-- אשר העתיקו אנשי חזקיה מלך-יהודה
2 காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.
כבד אלהים הסתר דבר וכבד מלכים חקר דבר
3 வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.
שמים לרום וארץ לעמק ולב מלכים אין חקר
4 வெள்ளியிலிருந்து கழிவை நீக்கிவிடு, அப்பொழுது கொல்லனால் நல்ல பாத்திரம் வெளிப்படும்.
הגו סיגים מכסף ויצא לצרף כלי
5 ராஜாவின் முன்னின்று துன்மார்க்கர்களை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும்.
הגו רשע לפני-מלך ויכון בצדק כסאו
6 ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய இடத்தில் நிற்காதே.
אל-תתהדר לפני-מלך ובמקום גדלים אל-תעמד
7 உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; அவன் உன்னைப் பார்த்து: மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை.
כי טוב אמר-לך עלה-הנה מהשפילך לפני נדיב--אשר ראו עיניך
8 வழக்காடப் வேகமாகமாகப் போகாதே; முடிவிலே உன்னுடைய அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.
אל-תצא לרב מהר פן מה-תעשה באחריתה--בהכלים אתך רעך
9 நீ உன்னுடைய அயலானுடனேமட்டும் உன்னுடைய வழக்கைக்குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.
ריבך ריב את-רעך וסוד אחר אל-תגל
10 ௧0 மற்றப்படி அதைக் கேட்கிறவன் உன்னை நிந்திப்பான்; உன்னுடைய அவமானம் உன்னைவிட்டு நீங்காது.
פן-יחסדך שמע ודבתך לא תשוב
11 ௧௧ ஏற்ற நேரத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமம்.
תפוחי זהב במשכיות כסף-- דבר דבר על-אפניו
12 ௧௨ கேட்கிற காதுக்கு, ஞானமாகக் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் தங்க மோதிரத்திற்கும் சமம்.
נזם זהב וחלי-כתם-- מוכיח חכם על-אזן שמעת
13 ௧௩ அறுவடைக்காலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான தூதுவனும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன்னுடைய எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரச்செய்வான்.
כצנת שלג ביום קציר--ציר נאמן לשלחיו ונפש אדניו ישיב
14 ௧௪ கொடுப்பேன் என்று சொல்லியும் கொடுக்காமல் இருக்கிற வஞ்சகன் மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சமம்.
נשיאים ורוח וגשם אין-- איש מתהלל במתת-שקר
15 ௧௫ நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கச்செய்யலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.
בארך אפים יפתה קצין ולשון רכה תשבר-גרם
16 ௧௬ தேனைக் கண்டுபிடித்தால் அளவாகச் சாப்பிடு; அதிகமாக சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய்.
דבש מצאת אכל דיך פן-תשבענו והקאתו
17 ௧௭ உன்னுடைய அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடி, அடிக்கடி அவனுடைய வீட்டில் கால்வைக்காதே.
הקר רגלך מבית רעך פן-ישבעך ושנאך
18 ௧௮ பிறனுக்கு விரோதமாகப் பொய்சாட்சி சொல்லுகிற மனிதன் தண்டாயுதத்திற்கும் வாளிற்கும் கூர்மையான அம்பிற்கும் ஒப்பானவன்.
מפיץ וחרב וחץ שנון-- איש ענה ברעהו עד שקר
19 ௧௯ ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மூட்டு விலகிய காலுக்கும் சமம்.
שן רעה ורגל מועדת-- מבטח בוגד ביום צרה
20 ௨0 மனதுக்கமுள்ளவனுக்குப் பாடல்களைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் ஆடையை களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் ஊற்றிய காடியைப்போலவும் இருப்பான்.
מעדה-בגד ביום קרה--חמץ על-נתר ושר בשרים על לב-רע
21 ௨௧ உன்னுடைய எதிரிகள் பசியாக இருந்தால், அவனுக்கு சாப்பிட உணவு கொடு; அவன் தாகமாக இருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.
אם-רעב שנאך האכלהו לחם ואם-צמא השקהו מים
22 ௨௨ அதினால் அவனை வெட்கப்படுத்துவாய்; யெகோவா உனக்குப் பலனளிப்பார்.
כי גחלים--אתה חתה על-ראשו ויהוה ישלם-לך
23 ௨௩ வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.
רוח צפון תחולל גשם ופנים נזעמים לשון סתר
24 ௨௪ சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.
טוב שבת על-פנת-גג-- מאשת מדונים (מדינים) ובית חבר
25 ௨௫ தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி தாகம் மிகுந்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமம்.
מים קרים על-נפש עיפה ושמועה טובה מארץ מרחק
26 ௨௬ துன்மார்க்கர்களுக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன நீரூற்றுக்கும் ஒப்பாகும்.
מעין נרפש ומקור משחת-- צדיק מט לפני-רשע
27 ௨௭ தேனை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல.
אכל דבש הרבות לא-טוב וחקר כבדם כבוד
28 ௨௮ தன்னுடைய ஆவியை அடக்காத மனிதன் மதில் இடிந்த பாழான பட்டணம்போல இருக்கிறான்.
עיר פרוצה אין חומה-- איש אשר אין מעצר לרוחו

< நீதிமொழிகள் 25 >