< நீதிமொழிகள் 11 >

1 கள்ளத்தராசு யெகோவாவுக்கு அருவருப்பானது; சரியான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.
上主深惡假秤,卻喜愛法碼準確。
2 அகந்தை வந்தால் அவமானமும் வரும்; தாழ்ந்த சிந்தை உள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.
傲慢來到,恥辱隨後而至;智慧只與謙遜人相處。
3 செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.
正直的人,以正義為領導;背義的人,必為邪惡所毀滅。
4 கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.
在上主盛怒之日,財富毫無用途;只有正義,能救人免於死亡。
5 உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன்னுடைய துன்மார்க்கத்தினால் விழுவான்.
完人的正義,為他修平道路;惡人必因自己的邪惡而顛仆。
6 செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்களுடைய தீவினையிலே பிடிபடுவார்கள்.
正直的人,將因自己的正義而獲救;奸詐的人,反為自己的惡計所連累。
7 துன்மார்க்கன் மரணமடையும்போது அவனுடைய நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு கெட்டுப்போகும்.
惡人一死,他的希望盡成泡影;同樣,奸匪的期待也全然消失。
8 நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.
義人得免患難,惡人反來頂替。
9 மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதிமானோ அறிவினால் தப்புகிறான்.
假善人以口舌,傷害自己的近人;義人因有知識,卻得以保全。
10 ௧0 நீதிமான்கள் நன்றாக இருந்தால் பட்டணம் சந்தோஷமாக இருக்கும்; துன்மார்க்கர்கள் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும்.
幾時義人幸運,全城歡騰;幾時惡人滅亡,歡聲四起。
11 ௧௧ செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்று ஓங்கும்; துன்மார்க்கர்களுடைய வாயினால் அது இடிந்துவிழும்.
義人的祝福,使城市興隆;惡人的口舌,使城市傾覆。
12 ௧௨ மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன்னுடைய வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான்.
嘲弄自己朋友的人,毫無識趣;有見識的人,必沉默寡言。
13 ௧௩ புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.
往來傳話的人,必洩露秘密;心地誠樸的人,方能不露實情。
14 ௧௪ ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும்.
人民缺乏領導,勢必衰弱;人民的得救,正在於謀士眾多。
15 ௧௫ அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாக இருப்பான்.
為外人作保的,必自討苦吃;厭惡作保的,必自享安全。
16 ௧௬ நல்லொழுக்கமுள்ள பெண் மானத்தைக் காப்பாள்; பலசாலிகள் செல்வத்தைக் காப்பார்கள்.
淑德的婦女,必為丈夫取得光榮;惱恨正義的婦女,正是一恥辱的寶座;懶散的人失落自己的財物,勤謹的人反取得財富。
17 ௧௭ தயவுள்ள மனிதன் தன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; கொடூரனோ தன்னுடைய உடலை அலைக்கழிக்கிறான்.
為人慈善,是造福己身;殘酷的人,反自傷己命。
18 ௧௮ துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.
惡人所賺得的工資,是空虛的;播種正義者的報酬,纔是真實的。
19 ௧௯ நீதி வாழ்வுக்கு ஏதுவாகிறதுபோல, தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்திற்கு ஏதுவாகிறான்.
恒行正義,必走向生命;追求邪惡,必自趨喪亡。
20 ௨0 மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்; உத்தம வழியில் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள்.
上主憎惡心邪的人,喜悅舉止無瑕的人。
21 ௨௧ கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.
惡人始終不能逃避懲罰,義人的後裔必獲得拯救。
22 ௨௨ மதிகேடாக நடக்கிற அழகுள்ள பெண், பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமம்.
女人美麗而不精明,猶如套在豬鼻上的金環。
23 ௨௩ நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கர்களுடைய நம்பிக்கையோ கோபத்தின் தண்டனையாக முடியும்.
義人的心願必獲善報;惡人的希望終歸破滅。
24 ௨௪ வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு; அதிகமாக தனக்கென்று மட்டும் வைத்துக்கொண்டும் வறுமையடைபவர்களும் உண்டு.
有人慷慨好施,反更富有;有人過於吝嗇,反更貧窮。
25 ௨௫ உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.
慈善為懷的人,必得富裕;施惠於人的人,必蒙施惠。
26 ௨௬ தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.
屯積糧食的人,必受人民咀咒;祝福卻降在賣糧食者的頭上。
27 ௨௭ நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.
慕求美善的,必求得恩寵;追求邪惡的,邪惡必臨其身。
28 ௨௮ தன்னுடைய செல்வத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போல தழைப்பார்கள்.
信賴自己財富的人,必至衰落;義人卻茂盛有如綠葉。
29 ௨௯ தன்னுடைய வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்.
危害自己家庭的,必承受虛幻;愚昧的人,必作心智者的奴隸。
30 ௩0 நீதிமானுடைய பலன் ஜீவமரம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.
義人的果實是生命樹,智慧的人能奪取人心。
31 ௩௧ இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.
看義人在地上還遭受報復,惡人和罪人更將如何﹖

< நீதிமொழிகள் 11 >