< பிலிப்பியர் 1 >

1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களாகிய பவுலும், தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவிற்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரர்களுக்கும் எழுதுகிறதாவது:
Од Павла и Тимотија, слугу Исуса Христа, свима светима у Христу Исусу који су у Филиби, с владикама и ђаконима:
2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
Благодат вам и мир од Бога Оца нашег и Господа Исуса Христа.
3 நற்செய்தி உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் எங்களோடு ஊழியத்தில் ஐக்கியப்பட்டிருப்பதால்,
Захваљујем Богу свом кад се год опоменем вас,
4 நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் சந்தோஷத்தோடு ஜெபம்பண்ணி,
Свагда у свакој молитви својој за све вас с радошћу молећи се,
5 உங்களில் நல்லசெயல்களைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்வரை நடத்திவருவார் என்று நம்பி,
Што ви постадосте заједничари у јеванђељу, од првог дана и до данас;
6 நான் உங்களை நினைக்கும்போதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
Уздајући се у ово исто да ће Онај који је почео добро дело у вама довршити га тја до дана Исуса Христа.
7 என் சிறைச்சாலையின் கட்டுகளிலும், நான் நற்செய்தியைப் போதித்து அதைத் உறுதிப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் வைத்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்கள் எல்லோரையும்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாக இருக்கிறது.
Као што је право да ја ово мислим за све вас, јер вас имам у срцу у оковима својим и у одговору и потврђивању јеванђеља, као све заједничаре са мном у благодати.
8 இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பினாலே உங்களெல்லோரையும் காண எவ்வளவோ ஆவலாக இருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி.
Јер Бог ми је сведок да вас љубим љубављу Исуса Христа,
9 மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்களுடைய அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாகப் பெருகவும்,
И зато се молим Богу да љубав ваша још више и више изобилује у разуму и свакој вољи,
10 ௧0 தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,
Да кушате шта је боље, да будете чисти и без спотицања на дан Христов,
11 ௧௧ நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று நேர்மையானவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.
Напуњени плодова правде кроз Исуса Христа, на славу и хвалу Божију.
12 ௧௨ சகோதரர்களே, எனக்கு சம்பவித்தவைகள் நற்செய்தி பரவுவதற்கு ஏதுவானது என்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.
Хоћу, пак, да знате, браћо, да ово што се ради са мном изиђе за напредак јеванђеља,
13 ௧௩ அரண்மனையில் உள்ளவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவிற்குள்ளான கட்டுகள் என்று தெரிந்து,
Тако да се разгласи у свој судници и код свих осталих да су моји окови за Христа.
14 ௧௪ சகோதரர்களில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் தைரியம்கொண்டு பயம் இல்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாகத் துணிந்திருக்கிறார்கள்.
И многа браћа у Господу ослободивши се оковима мојим већма смеју говорити реч Божију без страха.
15 ௧௫ சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்ல மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.
Истина, једни из зависти и свађе, а једни од добре воље Христа проповедају.
16 ௧௬ சிலர் என் கட்டுகளோடு உபத்திரவத்தையும் சேர்க்க நினைத்து, சுத்த மனதோடு கிறிஸ்துவை அறிவிக்காமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.
Тако ови, упркос, Христа објављују нечисто, мислећи да ће нанети жалост мојим оковима;
17 ௧௭ நற்செய்திக்காக நான் உத்தரவுசொல்ல நியமிக்கப்பட்டவன் என்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.
А ови из љубави, знајући да за одбрану јеванђеља лежим у тамници.
18 ௧௮ இதனால் என்ன? ஏமாற்றுவதினாலோ, உண்மையினாலோ, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இனிமேலும் சந்தோஷப்படுவேன்.
Шта дакле? Било како му драго, дволичењем или истином, Христос се проповеда; и зато се радујем, а и радоваћу се;
19 ௧௯ அது உங்களுடைய வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியும் என்று அறிவேன்.
Јер знам да ће ми се ово збити на спасење вашом молитвом и помоћу Духа Исуса Христа.
20 ௨0 நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடு ஜீவனாலாவது, மரணத்தினாலாவது, கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவார் என்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தகுந்ததாக அப்படி முடியும்.
Као што чекам и надам се да се ни у чему нећу постидети, него да ће се и сад као свагда са сваком слободом Христос величати у телу мом, било животом или смрћу.
21 ௨௧ கிறிஸ்து எனக்கு ஜீவன், மரணம் எனக்கு ஆதாயம்.
Јер је мени живот Христос, а смрт добитак.
22 ௨௨ ஆனாலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் செய்கைக்குப் பலன் கிடைத்திருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்று தெரியாது.
А кад ми живљење у телу плод доноси, то не знам шта ћу изабрати.
23 ௨௩ ஏனென்றால், இந்த இரண்டிற்கும் இடையே நான் நெருக்கப்படுகிறேன்; சரீரத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவோடு இருக்க எனக்கு ஆசை உண்டு, அது அதிக நன்மையாக இருக்கும்;
А обоје ми је мило, имајући жељу отићи и с Христом бити, које би много боље било;
24 ௨௪ அப்படியிருந்தும், நான் சரீரத்தில் வாழ்ந்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.
Али остати у телу потребније је вас ради.
25 ௨௫ இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மீண்டும் உங்களிடம் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவிற்குள் பெருகுவதற்காக,
И ово знам јамачно да ћу бити и остати код свих вас на ваш напредак и радост вере,
26 ௨௬ உங்களுடைய விசுவாசத்தின் வளர்ச்சிக்காகவும் சந்தோஷத்திற்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடும் இருப்பேன் என்று அறிந்திருக்கிறேன்.
Да хвала ваша мноме изобилује у Христу Исусу кад вам опет дођем.
27 ௨௭ நான் வந்து உங்களைப் பார்த்தாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாக நின்று, ஒரே ஆத்துமாவினாலே நற்செய்தியின் விசுவாசத்திற்காகப் போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றுக்கும் பயப்படாமல் இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எந்தவிதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்திற்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள்.
Само живите као што се пристоји јеванђељу Христовом, да вас видим кад дођем или ако вам не дођем да чујем за вас да стојите у једном духу и једнодушно борите се за веру јеванђеља,
28 ௨௮ நீங்கள் பயப்படாமலிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அடையாளமாக இருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.
И ни у чем да се не плашите од противника; које је њима знак погибли а вама спасења, и то од Бога;
29 ௨௯ ஏனென்றால், கிறிஸ்துவை விசுவாசிக்கிறதற்குமட்டும் இல்லை, அவருக்காகப் பாடுகள்படுகிறதற்கும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
Јер се вама дарова, Христа ради, не само да Га верујете него и да страдате за Њ,
30 ௩0 நீங்கள் என்னிடம் பார்த்ததும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.
Имајући ону исту борбу какву у мени видесте и сад чујете за мене.

< பிலிப்பியர் 1 >