< எண்ணாகமம் 2 >

1 யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
上主訓示梅瑟和亞郎說:「
2 “இஸ்ரவேல் சந்ததியார்கள் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தைச் சேர்ந்த தங்கள் தங்கள் கொடியருகில் தங்களுடைய கூடாரங்களைப் போட்டு, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராகச் சுற்றிலும் முகாமிடவேண்டும்.
以色列子民每人應隨自己的旗幟,在自己宗族的標誌下紮營,都向著會幕,在四周稍遠的地方紮營。
3 யூதாவின் முகாமின் கொடியை உடைய இராணுவங்கள் சூரியன் உதிக்கும் கிழக்குப்புறத்திலே முகாமிடவேண்டும்; அம்மினதாபின் மகனாகிய நகசோன் யூதா சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
在前面,即東方,是猶大軍團紮營的旗幟:猶大子孫的首領是阿米納達布的兒子納赫雄;
4 எண்ணப்பட்ட அவனுடைய இராணுவத்தில் இருந்தவர்கள் 74,600 பேர்.
他的部隊登記的,是七萬四千六百。
5 அவன் அருகே இசக்கார் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; சூவாரின் மகன் நெதனெயேல் இசக்கார் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
在其傍紮營的是依撒加爾支派;依撒加爾子孫的首領是族阿爾的兒子乃塔乃耳;
6 எண்ணப்பட்ட அவனுடைய இராணுவத்தில் இருந்தவர்கள் 54,400 பேர்.
他的部隊登記的,是五萬四千四百。
7 அவன் அருகே செபுலோன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஏலோனின் மகனாகிய எலியாப் செபுலோன் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
隨後是則步隆支派;則步隆子孫的首領是赫隆的兒子厄里雅布;
8 அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 57,400 பேர்.
他的部隊登記的,是五萬七千四百。
9 எண்ணப்பட்ட யூதாவின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,86,400 பேர்; இவர்கள் பயணத்தில் முதல் முகாமாகப் போகவேண்டும்.
猶大軍團登記的,共計十八萬六千四百;他們應首先出發。
10 ௧0 “ரூபனுடைய முகாமின் கொடியையுடைய இராணுவங்கள் தென்புறத்தில் முகாமிடவேண்டும்; சேதேயூரின் மகனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
南方是勒烏本軍團紮營的旗幟:勒烏本子孫的首領是舍德烏爾的兒子厄里族爾;
11 ௧௧ அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 46,500 பேர்.
他的部隊登記的,是四萬六千五百。
12 ௧௨ அவன் அருகே சிமியோன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; சூரிஷதாயின் மகனாகிய செலூமியேல் சிமியோன் சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
在其傍紮營的,是西默盎支派;西默盎子孫的首領是族黎沙待的兒子舍路米耳;
13 ௧௩ அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 59,300 பேர்.
他的部隊登記的,是五萬九千三百。
14 ௧௪ அவன் அருகே காத் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ரேகுவேலின் மகனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்கு படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
隨後是加得支派;加得子孫的首領是勒烏本的兒子厄肋雅撒夫;
15 ௧௫ அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பது 45,650 பேர்.
他的部隊登記的,是四萬五千六百五十。
16 ௧௬ எண்ணப்பட்ட ரூபனின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,51,450 பேர்; இவர்கள் பயணத்தில் இரண்டாம் முகாமாகப் போகவேண்டும்.
勒烏本軍團登記的,共計十五萬一千四百五十;他們其次出發。
17 ௧௭ “பின்பு ஆசரிப்புக் கூடாரம் லேவியர்களின் இராணுவத்தோடு முகாம்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படி முகாமிடுகிறார்களோ, அப்படியே அவரவர் தங்களுடைய வரிசையிலே தங்களுடைய கொடிகளோடு பிரயாணமாகப் போகவேண்டும்.
隨後,會幕與肋未營在各營中心啟程前行;各營怎樣紮營,就怎樣出發前行,各依自己的位置,各隨自己的旗幟。
18 ௧௮ “எப்பிராயீமுடைய முகாமின் கொடியையுடைய இராணுவங்கள் மேற்கு புறத்தில் இறங்கவேண்டும், அம்மியூதின் மகனாகிய எலிஷாமா எப்பிராயீமின் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
西方是厄弗辣因軍團紮營的旗幟:厄弗辣因子孫的首領是阿米胡得的兒子厄里沙瑪;
19 ௧௯ அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 40,500 பேர்.
他的部隊登記的,是四萬五百。
20 ௨0 அவன் அருகே மனாசே கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; பெதாசூரின் மகனாகிய கமாலியேல் மனாசே சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
在其傍是默納協支派;默納協子孫的首領是培達族爾的兒子加默里耳;
21 ௨௧ அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 32,200 பேர்.
他的部隊登記的,是三萬二千二百。
22 ௨௨ அவன் அருகே பென்யமீன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; கீதெயோனின் மகனாகிய அபீதான் பென்யமீன் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
隨後是本雅明支派;本雅明子孫的首領是基德敖尼的兒子阿彼丹;
23 ௨௩ அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 35,400 பேர்.
他的部隊登記的,是三萬五千四百。
24 ௨௪ எண்ணப்பட்ட எப்பிராயீமின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,08,100 பேர்; இவர்கள் பயணத்தில் மூன்றாம் முகாமாகப் போகவேண்டும்.
厄弗辣因軍團登記的,共計十萬八千一百;他們作第三隊出發。
25 ௨௫ “தாணுடைய முகாமின் கொடியையுடைய இராணுவங்கள் வடபுறத்தில் இறங்கவேண்டும்; அம்மிஷதாயின் மகனாகிய அகியேசேர் தாண் வம்சத்திற்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
北方是丹軍團紮營的旗幟:丹子孫的首領是阿米沙待的兒子阿希厄則爾;
26 ௨௬ அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 62,700 பேர்.
他的部隊登記的,是六萬二千七百。
27 ௨௭ அவன் அருகே ஆசேர் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஓகிரானின் மகனாகிய பாகியேல் ஆசேர் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
在其傍紮營的是阿協爾支派;阿協爾子孫的首領是敖革蘭的兒子帕革厄耳;
28 ௨௮ அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 41,500 பேர்.
他的部隊登記的,是四萬一千五百。
29 ௨௯ அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஏனானின் மகனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
隨後是納斐塔里支派;納斐榙里子孫的首領是厄南的兒子阿希辣;
30 ௩0 அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 53,400 பேர்.
他的部隊登記的,是五萬三千四百。
31 ௩௧ எண்ணப்பட்ட தாணின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் 1,57,600 பேர்; இவர்கள் தங்களுடைய கொடிகளோடு கடைசியிலும் போகவேண்டும்”.
丹軍團登記的,共計十五萬七千六百;他們隨著自己的旗幟,最後出發。」
32 ௩௨ இவர்களே தங்கள் தங்கள் முன்னோர்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் மக்களில் எண்ணப்பட்டவர்கள். முகாம்களிலே தங்கள் தங்கள் இராணுவங்களின்படியே எண்ணப்பட்டவர்கள் எல்லோரும் 6,03,550 பேராயிருந்தார்கள்.
這就是以色列子民依照家系登記的數目;各營的部隊登記的總數,共六十萬三千五百五十。
33 ௩௩ லேவியர்களோ, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் மக்களுக்குள்ளே எண்ணப்படவில்லை.
照上主對梅瑟所吩咐的,肋未人沒有在以色列子民中登記。
34 ௩௪ யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் செய்து, தங்கள் தங்கள் கொடிகளின்கீழ் முகாமிட்டு, தங்கள் தங்கள் முன்னோர்களின் வம்சங்களின்படியே பயணப்பட்டுப் போனார்கள்.
以色列子民全照上主吩咐梅瑟的做了,都隨著自己的旗幟紮營,各隨宗族和家系出發進行。

< எண்ணாகமம் 2 >