< எண்ணாகமம் 15 >

1 யெகோவா மோசேயை நோக்கி:
याहवेह ने मोशेह को आज्ञा दी,
2 “நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் குடியிருக்கும்படி நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு,
“इस्राएल के घराने को यह आज्ञा दो: ‘जब तुम उस देश में प्रवेश करोगे, जहां तुम्हें बस जाना है, जो मैं तुम्हें देने जा रहा हूं,
3 விசேஷித்த பொருத்தனையையோ, உற்சாக பலியையோ, உங்களுடைய பண்டிகைகளில் செலுத்தும் பலியையோ, யெகோவாவுக்கு மாடுகளிலாவது ஆடுகளிலாவது சர்வாங்கதகனபலியையாவது மற்ற ஏதாவது ஒரு பலியையாவது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனமாகப் பலியிடும்போது,
तब तुम वहां याहवेह के लिए अपनी भेड़-बकरियां और गाय-बैलों में से आग के द्वारा बलि चढ़ाना; होमबलि अथवा विशेष मन्नत पूरी करने के लिए या स्वेच्छा बलि या निर्धारित अवसरों से संबंधित बलि, कि यह याहवेह के सामने सुगंध हो जाए.
4 தன்னுடைய படைப்பைக் யெகோவாவுக்குச் செலுத்துகிறவன் சர்வாங்கதகனபலிக்காவது மற்றப் பலிக்காவது ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தவேண்டும்.
वह, जो याहवेह को भेंट बलि अर्पण करेगा, वह डेढ़ किलो मैदे को एक लीटर तेल में मिलाएगा.
5 பானபலியாக காற்படி திராட்சைரசத்தையும் படைக்கவேண்டும்.
हर एक मेमने की बलि अथवा होमबलि के साथ तुम पेय बलि के लिए एक लीटर दाखमधु भेंट करोगे.
6 ஆட்டுக்கடாவாக இருந்ததென்றால், பத்தில் இரண்டு பங்கானதும், ஒரு படியில் மூன்றில் ஒரு பங்காகிய எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லியமாவின் போஜனபலியையும்,
“‘अथवा मेढ़े की बलि चढ़ाने के लिए तुम तीन किलो मैदा, 1.30 लीटर तेल में मिलाओगे.
7 பானபலியாக ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சைரசத்தையும் யெகோவாவுடைய நறுமண வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும்.
पेय बलि के रूप में तुम याहवेह को सुखद-सुगंध के लिए एक लीटर दाखमधु चढ़ाओगे.
8 நீ சர்வாங்கதகனபலிக்காவது, விசேஷித்த பொருத்தனைபலிக்காவது, சமாதானபலிக்காவது, ஒரு காளையைக் யெகோவாவுக்குச் செலுத்த ஆயத்தப்படுத்தும்போது,
“‘जब तुम याहवेह को विशेष मन्नत पूरी करने के रूप में या मेल बलि स्वरूप होमबलि या बलि के लिए बछड़े को तैयार करो,
9 அதனோடு பத்தில் மூன்றுபங்கானதும், அரைப்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும்,
तब तुम उस बछड़े के साथ पांच किलो मैदे के साथ 1.9 लीटर तेल का मिश्रण चढ़ाओगे.
10 ௧0 பானபலியாக அரைப்படி திராட்சைரசத்தையும், யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும்.
इसके अलावा तुम डेढ़ लीटर दाखमधु याहवेह के लिए सुखद-सुगंध चढ़ाओगे.
11 ௧௧ “இந்தவிதமாகவே ஒவ்வொரு மாட்டுக்கும், ஆட்டுக்கடாவுக்கும், செம்மறியாட்டுக் குட்டிக்கும், வெள்ளாட்டுக் குட்டிக்கும் செய்து படைக்கவேண்டும்.
हर एक बछड़े, हर एक मेढ़े, हर एक मेमने अथवा हर एक बकरे के लिए यही विधि ठहराई गई है.
12 ௧௨ நீங்கள் படைக்கிறவைகளின் எண்ணிக்கைக்குத்தகுந்தபடி, ஒவ்வொன்றிற்காகவும் இந்த முறையில் செய்யவேண்டும்.
हर एक पशु की संख्या के अनुसार हर एक के लिए यही किया जाना ज़रूरी है.
13 ௧௩ சொந்ததேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இந்த விதமாகவே செய்யவேண்டும்.
“‘हर एक, जो देश का निवासी है, इस विधि के अनुसार यह किया करेगा, कि आग के द्वारा भेंट यह याहवेह के लिए सुखद-सुगंध हो जाए.
14 ௧௪ “உங்களிடத்திலே தங்கியிருக்கிற அந்நியனாவது, உங்கள் நடுவிலே உங்களுடைய தலைமுறைதோறும் குடியிருக்கிறவனோ, யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி செலுத்தவேண்டுமானால், நீங்கள் செய்கிறபடியே அவனும் செய்யவேண்டும்.
यदि तुम्हारे बीच कोई परदेशी है, चाहे थोड़े समय से या स्थायी रूप से, पीढ़ी-पीढ़ी से, और वह अग्निबलि भेंट करना चाहता है, कि यह याहवेह के लिए सुखद-सुगंध हो जाए, वह भी ठीक यही करेगा.
15 ௧௫ சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்களுடைய தலைமுறைகளில் நிரந்தர கட்டளையாக இருக்கவேண்டும்; யெகோவாவுக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்கவேண்டும்.
पूरी सभा के लिए, चाहे तुम हो अथवा कोई परदेशी, एक ही विधि लागू होगी. यही तुम्हारी सारी पीढ़ियों के लिए स्थायी विधि होगी. याहवेह के सामने तुम सब परदेशी के समान हो.
16 ௧௬ உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே கட்டளையும் இருக்கவேண்டும் என்று சொல்” என்றார்.
तुम्हारे लिए तथा उस परदेशी के लिए एक ही नियम तथा एक ही विधि होनी ज़रूरी है.’”
17 ௧௭ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
फिर याहवेह ने मोशेह को यह आज्ञा दी,
18 ௧௮ நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: “நான் உங்களை அழைத்துக்கொண்டுபோகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து,
“इस्राएल के घराने को संबोधित कर उन्हें आदेश दो, ‘जब तुम उस देश में प्रवेश करो, जहां मैं तुम्हें ले जा रहा हूं,
19 ௧௯ தேசத்தின் ஆகாரத்தை சாப்பிடும்போது, யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையைச் செலுத்தவேண்டும்.
और जब तुम उस देश की उपज को खाने लगो, उसका एक अंश तुम याहवेह को भेंट करोगे.
20 ௨0 நீங்கள் பிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசத்தை ஏறெடுத்துப் படைக்கவேண்டும்; போரடிக்கிற களத்தின் படைப்பை படைக்கிறதுபோல அதையும் ஏறெடுத்துப் படைக்கவேண்டும்.
यह खलिहान का अर्पित किया हुआ अंश होगा. यह तुम याहवेह को चढ़ाओगे.
21 ௨௧ இப்படி உங்களுடைய தலைமுறைதோறும் உங்களுடைய பிசைந்த மாவின் முதற்பலனிலே யெகோவாவுக்குப் படைப்பை ஏறெடுத்துப் படைக்கவேண்டும்.
अपने पहले गूंधे हुए आटे के अंश को तुम अपनी सारी पीढ़ियों में याहवेह को भेंट करते रहोगे.
22 ௨௨ “யெகோவா மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும்,
“‘किंतु भूल से तुम इन आदेशों के पालन में असफल हो जाते हो, जो याहवेह ने मोशेह को बताए हैं,
23 ௨௩ யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளைகொடுத்த நாள்முதற்கொண்டு அவர் உங்களுக்கும் உங்களுடைய சந்ததிகளுக்கும் நியமித்த எல்லாவற்றின்படியேயும் நீங்கள் செய்யாமல்,
अर्थात् वह सभी, जो याहवेह ने तुम्हें मोशेह के द्वारा आज्ञा देकर पालन करने का आदेश दिया है, उस दिन से ले, जब ये आदेश दिए गए थे, तुम्हारी सारी पीढ़ियों तक,
24 ௨௪ அறியாமல் தவறி நடந்தாலும், சபையாருக்குத் தெரியாமல் யாதொரு தப்பிதம் செய்தாலும், சபையார் எல்லோரும் யெகோவாவுக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு காளையையும், கட்டளையின்படி அதற்கேற்ற உணவுபலியையும், பானபலியையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
यदि यह भूल से किया गया हो तथा जिसके विषय में सारी इस्राएली सभा को कोई जानकारी नहीं हो पाई है, तब सारी सभा गाय-बैलों से होमबलि के लिए एक बछड़ा भेंट करेगी, इसकी अन्‍नबलि तथा पेय बलि के साथ यह याहवेह के लिए नियम के अनुसार एक सुखद-सुगंध हो जाएगा.
25 ௨௫ அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் மக்களின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்; அது அறியாமையினால் செய்யப்பட்டதாலும், அதற்காக அவர்கள் யெகோவாவுக்குத் தகனபலியையும் பாவநிவாரணபலியையும் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
फिर पुरोहित सारे इस्राएल के घराने की ओर से प्रायश्चित बलि भेंट करेगा और इससे उन्हें क्षमा दी जाएगी; क्योंकि यह अनजाने में की गई भूल थी; इसलिये उन्होंने यह भेंट चढ़ाई है. आग के द्वारा याहवेह को अर्पित बलि तथा अपनी भूल के लिए भेंट पापबलि.
26 ௨௬ அது அறியாமையினாலே மக்கள் யாவருக்கும் வந்தபடியால், அது இஸ்ரவேல் மக்களின் சபையனைத்திற்கும் அவர்களுக்குள்ளே தங்குகிற அந்நியனுக்கும் மன்னிக்கப்படும்.
इस प्रकार इस्राएल के घराने की सारी सभा को क्षमा दे दी जाएगी-इसमें वह परदेशी भी शामिल होगा, जो उनके बीच रह रहा होगा, क्योंकि सभी इस्राएलियों में यह अनजाने में हुआ कार्य था.
27 ௨௭ “ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தால், ஒருவயதுடைய வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத்தவேண்டும்.
“‘इसके अलावा यदि कोई व्यक्ति भूल से पाप कर बैठता है, वह एक वर्षीय बकरी पापबलि के लिए भेंट करे.
28 ௨௮ அப்பொழுது அறியாமையினால் பாவம்செய்தவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யும்படி யெகோவாவுடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்; அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும்.
पुरोहित याहवेह के सामने जाकर उस व्यक्ति के लिए प्रायश्चित करे, जो भूल से पाप कर बैठता है, जो रास्ते से भटक जाता है, पुरोहित ऐसे व्यक्ति के लिए प्रायश्चित करे, कि उस व्यक्ति को क्षमा प्राप्‍त हो जाए.
29 ௨௯ இஸ்ரவேல் மக்களாகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும், அறியாமையினால் பாவம்செய்தவனுக்கும், ஒரே பிரமாணம் இருக்கவேண்டும்.
कोई भी व्यक्ति, जो भूल से कोई भी पाप कर बैठता है, उस पर एक ही नियम लागू किया जाए; वह, जो स्वदेशी है, और वह जो तुम्हारे बीच रह रहा विदेशी है.
30 ௩0 “அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலோ அந்நியர்களிலோ எவனாவது துணிகரமாக ஏதாவது ஒன்றைச்செய்தால், அவன் யெகோவாவை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன்னுடைய மக்களில் இல்லாதபடி துண்டிக்கப்படவேண்டும்.
“‘किंतु वह व्यक्ति, जो ढिठाई करता है, चाहे वह स्वदेशी हो या तुम्हारे बीच रह रहा विदेशी, वह यह करते हुए याहवेह की निंदा कर रहा होता है, ऐसा व्यक्ति अपने लोगों के बीच से नाश कर दिया जाए.
31 ௩௧ அவன் யெகோவாவின் வார்த்தையை அசட்டைசெய்து, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா துண்டிக்கப்பட வேண்டும்; அவனுடைய அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல்” என்றார்.
उसने याहवेह के आदेश को तुच्छ समझा और उनके आदेश को टाला है. उसे पूरी तरह नाश कर दिया जाए; इसके लिए वह स्वयं ही दोषी होगा.’”
32 ௩௨ இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் இருக்கும்போது, ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.
जब इस्राएली निर्जन प्रदेश में रहते थे, एक ऐसे व्यक्ति से उनकी भेंट हुई, जो शब्बाथ के दिन ईंधन-लकड़ी इकट्ठी कर रहा था.
33 ௩௩ விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்திற்கும் சபையார் அனைவரிடத்திற்கும் கொண்டுவந்தார்கள்.
जिन्होंने उसे यह करते देखा, वे उसे मोशेह, अहरोन तथा सारी सभा के सामने ले आए.
34 ௩௪ அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று சரியான தீர்ப்பு இல்லாதபடியால், அவனைக் காவலில் வைத்தார்கள்.
जब तक उसके विषय में कोई निर्णय नहीं लिया गया, तब तक उसे बंदी बनाकर रखा गया.
35 ௩௫ “யெகோவா மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லோரும் அவனை முகாமிற்குப் புறம்பே கல்லெறியவேண்டும் என்றார்.
याहवेह ने मोशेह को यह आज्ञा दी: “अवश्य है कि उस व्यक्ति को निश्चित ही मृत्यु दंड दिया जाए. छावनी के बाहर ले जाकर सारी सभा उस पर पत्थराव करे.”
36 ௩௬ அப்பொழுது சபையார் எல்லோரும் யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனை முகாமிற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.
तब सारी सभा ने उसे छावनी से दूर ले जाकर पत्थराव कर दिया, जैसा याहवेह ने मोशेह को आज्ञा दी थी.
37 ௩௭ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
याहवेह ने मोशेह को यह आज्ञा भी दी,
38 ௩௮ “நீ இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் பேசி, அவர்கள் தங்களுடைய தலைமுறைதோறும் தங்களுடைய ஆடைகளின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்டவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்.
“सारे इस्राएल को आज्ञा दो कि वे अपने-अपने वस्त्रों के किनारों पर पीढ़ी से पीढ़ी फुंदने लगाया करें तथा फुन्दनों के कोनों पर नीली डोरी हो.
39 ௩௯ நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்களுடைய இருதயத்திற்கும் உங்களுடைய கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப் பார்த்து, யெகோவாவின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படி, அது உங்களுக்குத் தொங்கலாக இருக்கவேண்டும்.
यह फुंदना तुम्हारे लिए याहवेह की आज्ञा का चिन्ह होगा, कि तुम अपनी-अपनी मान्यताओं के अनुसार चलने न लगो, जैसा करके तुमने परमेश्वर के साथ दाम्पत्य विश्वासघात के समान काम किया था.
40 ௪0 நீங்கள் என்னுடைய கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்களுடைய தேவனுக்குப் பரிசுத்தராக இருக்கும்படி அதைப் பார்க்கவேண்டும்.
तुम्हें मेरी सारी आज्ञाओं का पालन करना याद रहे, और तुम अपने परमेश्वर के सामने पवित्र बने रहो.
41 ௪௧ நான் உங்களுக்கு தேவனாக இருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உங்களுடைய தேவனாகிய யெகோவா; நானே உங்களுடைய தேவனாகிய யெகோவா என்று சொல்” என்றார்.
मैं तुम्हारा वही परमेश्वर, याहवेह हूं, मैंने तुम्हें मिस्र देश से इसलिये निकाला है, कि मैं तुम्हारा परमेश्वर ठहरूं. मैं ही तुम्हारा वह याहवेह परमेश्वर हूं!”

< எண்ணாகமம் 15 >