< மத்தேயு 9 >

1 அப்பொழுது, அவர் படகில் ஏறி, இக்கரையில் உள்ள தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.
И ушавши у лађу пређе и дође у свој град.
2 அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு பக்கவாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
И гле, донесоше Му узета који лежаше на одру. И видевши Исус веру њихову рече узетом: Не бој се, синко, опраштају ти се греси твоји.
3 அப்பொழுது, வேதபண்டிதர்களில் சிலர்: இவன் தேவனை அவமதித்துப் பேசுகிறான் என்று தங்களுடைய உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.
И гле, неки од књижевника рекоше у себи: Овај хули на Бога.
4 இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?
И видећи Исус помисли њихове рече: Зашто зло мислите у срцима својим?
5 உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது?
Јер шта је лакше рећи: Опраштају ти се греси; или рећи: Устани и ходи?
6 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்றார்.
Али да знате да власт има Син човечији на земљи опраштати грехе (тада рече узетом): Устани, узми одар свој и иди дома.
7 உடனே அவன் எழுந்து, தன் வீட்டிற்குப்போனான்.
И уставши отиде дома.
8 மக்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனிதர்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
А људи видећи чудише се, и хвалише Бога, који је дао власт такву људима.
9 இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, வரிவசூல் மையத்தில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனிதனைக் கண்டு: எனக்குப் பின்னே வா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான்.
И одлазећи Исус оданде виде човека где седи на царини, по имену Матеја, и рече му: Хајде за мном. И уставши отиде за Њим.
10 ௧0 பின்பு அவர் வீட்டிலே உணவுப் பந்தியிருக்கும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள்.
И кад јеђаше у кући, гле, многи цариници и грешници дођоше и јеђаху с Исусом и с ученицима Његовим.
11 ௧௧ பரிசேயர்கள் அதைக் கண்டு, அவருடைய சீடர்களைப் பார்த்து: உங்களுடைய போதகர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உணவு சாப்பிடுகிறது ஏன் என்று கேட்டார்கள்.
И видевши то фарисеји говораху ученицима Његовим: Зашто с цариницима и грешницима учитељ ваш једе и пије?
12 ௧௨ இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
А Исус чувши то рече им: Не требају здрави лекара него болесни.
13 ௧௩ பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
Него идите и научите се шта значи: Милости хоћу, а не прилога. Јер ја нисам дошао да зовем праведнике но грешнике на покајање.
14 ௧௪ அப்பொழுது, யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து: நாங்களும் பரிசேயர்களும் அநேகமுறை உபவாசிக்கிறோமே; உம்முடைய சீடர்கள் உபவாசிக்காமல் இருக்கிறது ஏன் என்று கேட்டார்கள்.
Тада приступише к Њему ученици Јованови говорећи: Зашто ми и фарисеји постимо много, а ученици твоји не посте?
15 ௧௫ அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.
А Исус рече им: Еда ли могу сватови плакати док је с њима женик? Него ће доћи време кад ће се отети од њих женик, и онда ће постити.
16 ௧௬ ஒருவனும் புதிய துணியை பழைய ஆடையோடு இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடு இணைத்த பழைய ஆடையை அது அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும்.
Јер нико не меће нову закрпу на стару хаљину; јер ће се закрпа одадрети од хаљине, и гора ће рупа бити.
17 ௧௭ புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றிவைக்கிறதும் இல்லை; ஊற்றிவைத்தால், தோல் பைகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றிவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.
Нити се лије вино ново у мехове старе; иначе мехови продру се и вино се пролије, и мехови пропадну. Него се лије вино ново у мехове нове, и обоје се сачува.
18 ௧௮ அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, தலைவன் ஒருவன் வந்து அவரை வணங்கி: என் மகள் இப்பொழுதுதான் இறந்துபோனாள்; ஆனாலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.
Док Он тако говораше њима, гле, кнез некакав дође и клањаше Му се говорећи: Кћи моја сад умре; него дођи и метни на њу руку своју, и оживеће.
19 ௧௯ இயேசு எழுந்து, தம்முடைய சீடர்களோடுகூட அவன் பின்னே போனார்.
И уставши Исус за њим пође и ученици Његови.
20 ௨0 அப்பொழுது, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே கஷ்டப்படும் ஒரு பெண்:
И гле, жена која је дванаест година боловала од течења крви приступи састраг и дохвати Му се скута од хаљине Његове.
21 ௨௧ நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்.
Јер говораше у себи: Само ако се дотакнем хаљине Његове, оздравићу.
22 ௨௨ இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்தநேரத்திலேயே அந்தப் பெண் சுகமானாள்.
А Исус обазревши се и видевши је рече: Не бој се, кћери; вера твоја помогла ти је. И оздрави жена од тог часа.
23 ௨௩ இயேசுவானவர் அந்தத் தலைவனுடைய வீட்டிற்கு வந்து, சங்கு ஊதுகிறவர்களையும், ஒப்பாரி வைக்கிற மக்களையும் கண்டு:
И дошавши Исус у дом кнежев и видевши свираче и људе забуњене
24 ௨௪ விலகுங்கள், இந்த சிறுபெண் இறக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து ஏளனம் செய்தார்கள்.
Рече им: Одступите, јер девојка није умрла, него спава. И подсмеваху Му се.
25 ௨௫ மக்கள் வெளியே அனுப்பப்பட்டப்பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.
А кад истера људе, уђе, и ухвати је за руку, и уста девојка.
26 ௨௬ இந்தச் செய்தி அந்த நாடெங்கும் பிரசித்தமானது.
И отиде глас овај по свој земљи оној.
27 ௨௭ இயேசு அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, இரண்டு குருடர்கள் அவருக்குப் பின்னேசென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
А кад је Исус одлазио оданде, за Њим иђаху два слепца вичући и говорећи: Помилуј нас, сине Давидов!
28 ௨௮ அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர்கள் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: இதைச்செய்ய எனக்கு வல்லமை உண்டு என்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம் ஆண்டவரே! என்றார்கள்.
А кад дође у кућу, приступише к Њему слепци, и рече им Исус: Верујете ли да могу то учинити? А они Му рекоше: Да Господе.
29 ௨௯ அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்களுடைய விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.
Тада дохвати се очију њихових говорећи: По вери вашој нека вам буде.
30 ௩0 உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
И отворише им се очи. И запрети им Исус говорећи: Гледајте да нико не дозна.
31 ௩௧ அவர்களோ புறப்பட்டு, அந்த நாடெங்கும் அவருடைய புகழைப் பிரசித்தப்படுத்தினார்கள்.
А они изишавши разгласише Га по свој земљи оној.
32 ௩௨ அவர்கள் புறப்பட்டுப்போகும்போது, பிசாசு பிடித்த ஊமையான ஒரு மனிதனை அவரிடம் கொண்டுவந்தார்கள்.
Кад они пак изиђоше, гле, доведоше к Њему човека немог и бесног.
33 ௩௩ பிசாசு துரத்தப்பட்டப்பின்பு ஊமையன் பேசினான். மக்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருபோதும் காணப்படவில்லை என்றார்கள்.
И пошто изгна ђавола, проговори неми. И дивљаше се народ говорећи: Никада се тога није видело у Израиљу.
34 ௩௪ பரிசேயர்களோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
А фарисеји говораху: Помоћу кнеза ђаволског изгони ђаволе.
35 ௩௫ பின்பு, இயேசு எல்லாப் பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி, அவர்களைச் சுகமாக்கினார்.
И прохођаше Исус по свим градовима и селима учећи по зборницама њиховим и проповедајући јеванђеље о царству, и исцељујући сваку болест и сваку немоћ по људима.
36 ௩௬ அவர் திரளான மக்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல சோர்ந்துபோனவர்களும் திக்கற்றவர்களுமாக இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,
А гледајући људе сажали Му се, јер беху сметени и расејани као овце без пастира.
37 ௩௭ தம்முடைய சீடர்களைப் பார்த்து: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்;
Тада рече ученицима својим: Жетве је много, а посленика мало.
38 ௩௮ ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.
Молите се, дакле, Господару од жетве да изведе посленике на жетву своју.

< மத்தேயு 9 >