< மாற்கு 9 >

1 இயேசு அவர்களைப் பார்த்து: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடு வருவதைப் பார்ப்பதற்குமுன்பு, மரிப்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
И рече им: Заиста вам кажем: имају неки међу овима што стоје овде који неће окусити смрт док не виде царство Божје да дође у сили.
2 ஆறு நாட்களுக்குப்பின்பு, இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார்.
И после шест дана узе Исус Петра и Јакова и Јована и изведе их на високу гору саме; и преобрази се пред њима.
3 அவருடைய உடை உறைந்த மழையைப்போல பூமியிலே எந்தவொரு நபராலும் வெளுக்கக்கூடாத வெண்மையாகப் பிரகாசித்தது.
И хаљине Његове постадоше сјајне и врло беле као снег, као што не може белиља убелити на земљи.
4 அப்பொழுது மோசேயும் எலியாவும் இயேசுவோடு பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.
И указа им се Илија с Мојсијем где се разговараху с Исусом.
5 அப்பொழுது பேதுரு இயேசுவைப் பார்த்து: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.
И Петар одговарајући рече Исусу: Рави! Добро нам је овде бити; и да начинимо три сенице: Теби једну и Мојсију једну и Илији једну.
6 அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால், தான் பேசுகிறது என்ன என்று தெரியாமல் இப்படிச் சொன்னான்.
Јер не знаше шта говори; јер беху врло уплашени.
7 அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவர் சொல்வதைக் கேளுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.
И постаде облак те их заклони; и дође глас из облака говорећи: Ово је Син мој љубазни; Њега послушајте.
8 உடனே அவர்கள் சுற்றிலும் பார்த்தபோது, இயேசுவைத்தவிர வேறுயாரையும் பார்க்கவில்லை.
И уједанпут погледавши, никога не видеше осим Исуса самог са собом.
9 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் பார்த்தவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.
А кад силажаху с горе запрети им да ником не казују шта су видели, док Син човечји не устане из мртвих.
10 ௧0 மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பது என்னவென்று அவர்கள் ஒருவரோடொருவர் விசாரித்து, அந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு:
И реч задржаше у себи питајући један другог: Шта то значи устати из мртвих?
11 ௧௧ எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்களே, அது எப்படி என்று அவரிடம் கேட்டார்கள்.
И питаху Га говорећи: Како говоре књижевници да Илија треба најпре да дође?
12 ௧௨ அவர் மறுமொழியாக: எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது உண்மைதான்; அல்லாமலும், மனிதகுமாரன் பல பாடுகள்பட்டு, அவமதிக்கப்படுவார் என்று, அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என்றார்.
А Он одговарајући рече им: Илија ће доћи најпре, и уредити све; али и Син човечји треба да много пострада и да се понизи, као што је писано.
13 ௧௩ ஆனாலும் எலியா வந்துவிட்டான், அவனைக்குறித்து எழுதியிருக்கிறபடி தங்களுக்கு விருப்பமானபடி அவனுக்குச் செய்தார்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Али вам кажем да је и Илија дошао и учинише с њим шта хтедоше као што је писано за њега.
14 ௧௪ பின்பு அவர் சீடர்களிடம் வந்தபோது, அவர்களைச் சுற்றி மக்கள்கூட்டம் நிற்கிறதையும், அவர்களோடு வேதபண்டிதர்கள் வாக்குவாதம்பண்ணுகிறதையும் பார்த்தார்.
И дошавши к ученицима својим виде народ многи око њих и књижевнике где се препиру с њима.
15 ௧௫ மக்கள்கூட்டத்தினர் அவரைப் பார்த்தவுடன் அதிக ஆச்சரியப்பட்டு, ஓடிவந்து, அவரை வாழ்த்தினார்கள்.
И одмах видевши Га сав народ уплаши се и притрчавши поздрављаху Га.
16 ௧௬ அவர் வேதபண்டிதர்களைப் பார்த்து: நீங்கள் இவர்களோடு எதைக்குறித்து வாக்குவாதம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார்.
И упита књижевнике: Шта се препирете с њима?
17 ௧௭ அப்பொழுது மக்கள்கூட்டத்தில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன்.
И одговарајући један од народа рече: Учитељу! Доведох к Теби сина свог у коме је дух неми.
18 ௧௮ அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களிடம் கேட்டேன்; அவர்களால் முடியவில்லை என்றான்.
И сваки пут кад га ухвати ломи га, и пену баца и шкргуће зубима; и суши се. И рекох ученицима Твојим да га истерају; и не могоше.
19 ௧௯ அவர் மறுமொழியாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார்.
А Он одговарајући му рече: О роде неверни! Докле ћу с вама бити? Докле ћу вас трпети? Доведите га к мени.
20 ௨0 அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைப் பார்த்தவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான்.
И доведоше га к Њему; и кад Га виде одмах га дух стаде ломити; и паднувши на земљу ваљаше се бацајући пену.
21 ௨௧ இயேசு அவனுடைய தகப்பனைப் பார்த்து: எவ்வளவு காலங்களாக இப்படி இருக்கிறது? என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயதிலிருந்தே இப்படி இருக்கிறது;
И упита оца његовог: Колико има времена како му се то догодило? А он рече: Из детињства.
22 ௨௨ இவனைக் கொல்லுவதற்காக அந்த ஆவி அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் தள்ளியது. நீர் ஏதாவது செய்யமுடியுமானால், எங்கள்மேல் மனமிறங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான்.
И много пута баца га у ватру и у воду да га погуби; него ако шта можеш помози нам, смилуј се на нас.
23 ௨௩ இயேசு அவனைப் பார்த்து: நீ விசுவாசித்தால் நடக்கும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் சாத்தியமாகும் என்றார்.
А Исус рече му: Ако можеш веровати: све је могуће ономе који верује.
24 ௨௪ உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடு சத்தமிட்டுச் சொன்னான்.
И одмах повикавши отац детињи са сузама говораше: Верујем, Господе! Помози мом неверју.
25 ௨௫ அப்பொழுது மக்கள் கூட்டமாக ஓடிவருகிறதை இயேசு பார்த்து, அந்த அசுத்தஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனைவிட்டு வெளியே போ, இனி இவனுக்குள் மீண்டும் போகக்கூடாது என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார்.
А Исус видећи да се стиче народ, запрети духу нечистом говорећи му: Душе неми и глуви! Ја ти заповедам, изађи из њега и више не улази у њега.
26 ௨௬ அப்பொழுது அந்த ஆவி சத்தமிட்டு, அவனை அதிகமாக அலைக்கழித்து வெளியேபோனது. அவன் மரித்துப்போனான் என்று மக்கள் சொல்லத்தக்கதாக மரித்தவன்போல கிடந்தான்.
И повикавши и изломивши га врло изађе; и учини се као мртав тако да многи говораху: Умре.
27 ௨௭ இயேசு அவன் கையைப் பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான்.
А Исус узевши га за руку подиже га: и уста.
28 ௨௮ அவர் வீட்டிற்கு வந்தபொழுது, அவருடைய சீடர்கள்: அந்த ஆவியைத் துரத்திவிட எங்களால் ஏன் முடியவில்லை என்று அவரிடம் கேட்டார்கள்.
И кад уђе у кућу, питаху Га ученици Његови насамо: Зашто га ми нисмо могли истерати?
29 ௨௯ அதற்கு அவர்: இந்தவகைப் பிசாசை ஜெபத்தினாலும் உபவாசத்தினாலும்தவிர மற்ற எந்தவிதத்திலும் துரத்தமுடியாது என்றார்.
И рече им: Овај се род ничим не може истерати до молитвом и постом.
30 ௩0 பின்பு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அது யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பினார்.
И изашавши оданде иђаху кроз Галилеју; и не хтеше да ко дозна.
31 ௩௧ ஏனென்றால், மனிதகுமாரன் மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம்நாளிலே உயிரோடு எழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீடர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார்.
Јер учаше ученике своје, и говораше им да ће се Син човечји предати у руке људске, и убиће Га, и пошто Га убију устаће трећи дан.
32 ௩௨ அவர்களோ அந்த வார்த்தையைப் புரிந்துகொள்ளவில்லை, அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள்.
А они не разумеваху реч, и не смеху да Га запитају.
33 ௩௩ அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களைப் பார்த்து: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள் வாக்குவாதம்பண்ணினீர்கள் என்று கேட்டார்.
И дође у Капернаум, и кад беше у кући запита их: Шта се препирасте путем међу собом?
34 ௩௪ அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள்; ஏனென்றால், அவர்கள் தங்களுக்குள் எவன் பெரியவன் என்று வழியில் வாக்குவாதம்பண்ணினார்கள்.
А они ћутаху; јер се путем препираше међу собом ко је највећи.
35 ௩௫ அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிரண்டுபேரையும் அழைத்து: யாராவது முதல்வனாக இருக்கவிரும்பினால் அவன் எல்லோருக்கும் கீழானவனும், எல்லோருக்கும் ஊழியக்காரனுமாக இருக்கவேண்டும் என்று சொல்லி;
И седавши дозва дванаесторицу и рече им: Који хоће да буде први нека буде од свих најзадњи и свима слуга.
36 ௩௬ ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு:
И узевши дете метну га међу њих и загрливши га рече им:
37 ௩௭ இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்.
Ко једно овакво дете прими у име моје, мене прима; а ко мене прими, не прима мене него Оног који је мене послао.
38 ௩௮ அப்பொழுது யோவான் அவரைப் பார்த்து: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைப் பார்த்தோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவன், எனவே நாங்கள் அவனைத் தடுத்தோம் என்றான்.
Одговори Му Јован говорећи: Учитељу! Видесмо једног где именом Твојим изгони ђаволе који не иде за нама: и забранисмо му, јер не иде за нама.
39 ௩௯ அதற்கு இயேசு: அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதம் செய்கிறவன் எளிதாக என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான்.
А Исус рече: Не браните му; јер нема никога који би именом мојим чудо чинио да може брзо зло говорити за мном.
40 ௪0 நமக்கு விரோதமாக இல்லாதவன் நம்மோடு இருக்கிறான்.
Јер ко није против вас с вама је.
41 ௪௧ நீங்கள் கிறிஸ்துவை உடையவர்களாக இருக்கிறதினாலே, என் நாமத்தினாலே உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை பெறாமல் போவதில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Јер ко вас напоји чашом воде у име моје, зато што сте Христови, заиста вам кажем: неће му пропасти плата.
42 ௪௨ என்னிடம் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி, கடலில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாக இருக்கும்.
А који саблазни једног од ових малих који верују мене, боље би му било да обеси камен воденични о врат свој и да се баци у море.
43 ௪௩ உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட, ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
И ако те рука твоја саблажњава, одсеци је: боље ти је без руке у живот ући, неголи с обе руке ући у пакао, у огањ вечни, (Geenna g1067)
44 ௪௪ அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும்.
Где црв њихов не умире, и огањ се не гаси.
45 ௪௫ உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கால்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, கால்கள் நடக்கமுடியாதவனாக ஜீவனுக்குள் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
И ако те нога твоја саблажњава, одсеци је: боље ти је ући у живот хром, неголи с две ноге да те баце у пакао, у огањ вечни, (Geenna g1067)
46 ௪௬ அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும்.
Где црв њихов не умире, и огањ се не гаси.
47 ௪௭ உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
Ако те и око твоје саблажњава, ископај га: боље ти је с једним оком ући у царство Божје, неголи с два ока да те баце у пакао огњени, (Geenna g1067)
48 ௪௮ அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும்.
Где црв њихов не умире, и огањ се не гаси.
49 ௪௯ எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனிதனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்.
Јер ће се сваки огњем посолити, и свака ће се жртва сољу посолити.
50 ௫0 உப்பு நல்லதுதான், உப்பு சாரமில்லாமல் போனால், அதை எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாக இருங்கள், ஒருவரோடொருவர் சமாதானம் உள்ளவர்களாக இருங்கள் என்றார்.
Добра је со; али ако со буде неслана, чим ће се осолити? Имајте со у себи, и мир имајте међу собом.

< மாற்கு 9 >