< மாற்கு 4 >

1 இயேசு மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். அநேக மக்கள் அவரிடம் கூடிவந்ததினால், அவர் கடலிலே நின்ற ஒரு படகில் ஏறி உட்கார்ந்தார்; மக்களெல்லோரும் கடற்கரையில் நின்றார்கள்.
KADEKADEO a pil kotin tapiada kawewe liman jed o. Pokon kalaimun eu ap ko pena re a. A ap kotidan pon jop pot kotikot pon jed o. A pokon o mi nan jap pon oror.
2 அவர் அநேக காரியங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்:
A kotin kawewe on irail me toto ni i karajeraj akan, majani on irail ni a padak:
3 கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதை விதைக்கப் புறப்பட்டான்.
Ron! Kilan, jaunkamor o kolan kamorok.
4 அவன் விதைக்கும்போது, சில விதைகள் வழியருகே விழுந்தன; வானத்துப் பறவைகள் வந்து அந்த விதைகளைத் தின்றுபோட்டது.
Ni a kamokamorok akai ap moridi on pon kailan al, manpir ap pirido nam ir ala.
5 சில விதைகள் அதிக மண் இல்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தன; அதற்கு ஆழமான மண் இல்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது;
A akai moredi on waja takain, waja pwel petepet; irail ari madan wojada, pweki jota pwel lole.
6 வெயில் ஏறினபோதோ, கருகிப்போய், வேர் இல்லாததினால் உலர்ந்துபோனது.
Ni en katipin dakarada, re ap monela o mela pweki jota kalau ar.
7 சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, விதை பலன் கொடுக்காதபடி, அதை நெருக்கிப்போட்டது.
A akai moredi nan tuka teketek; o tuka teketek wojada, kajokiala, re ap jota wa.
8 சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து, உயர்ந்து வளருகிற பயிராகி, ஒன்று முப்பதுமடங்காகவும், ஒன்று அறுபதுமடங்காகவும், ஒன்று நூறுமடங்காகவும் பலன் தந்தது.
A akai moredi nan pwel mau o pwaida wa; akai pan me jileijok; a akai me woneijok, a akai me epuki.
9 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கட்டும் என்று அவர்களுக்குச் சொன்னார்.
A kotin majani: Me jalon a mia men ron, i en ron!
10 ௧0 அவர் தனிமையாக இருக்கிறபோது, பன்னிரண்டுபேரும், அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களும் இந்த உவமையைக்குறித்து அவரிடம் கேட்டார்கள்.
A lao kotin kalapukela, men imp a ianaki ekriamen ap kalelapok re a duen karajeraj pukat.
11 ௧௧ அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தைத் தெரிந்துகொள்ளும்படி உங்களுக்கு அருளப்பட்டது; வெளியே இருக்கிறவர்களுக்கோ இவைகள் எல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
A ap kotin majani on irail: A muei on komail, en aja duen me rir en wein Kot. A men liki re pan aja meakaroj jan ni karajeraj akan.
12 ௧௨ “அவர்கள் குணமாகாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது” என்றார்.
Pwe re kilan, ari jota kilan, o roneron, ap jota dedeki; pwe re de pan wukila o dip ar lapwa jan irail.
13 ௧௩ பின்பு அவர் அவர்களைப் பார்த்து: “இந்த உவமையை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? புரியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வீர்கள்?
A ap kotin majani on irail: Komail jota dedeki karajeraj pot et? A iaduen, omail pan aja karajeraj tei ko?
14 ௧௪ விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.
Jaunkamor me kamorok jili majan.
15 ௧௫ வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வழியருகே விதைக்கப்பட்டவர்கள்.
A mepukat me mi pon kailan al, waja majan moredi on, a re lao ronadar, Jatan ap madanado, ki jan majan, me kamoremoredi on nan monion arail.
16 ௧௬ அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும்,
O mepukat mo moredi on waja takain, re lao ronadar majan o ap madan peren kida ale.
17 ௧௭ தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினால் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்.
A jota kalaua re rail apdadaur eta ekij, lao jonejon o kamakam wiaui pweki majan o, re ap madan makar kida.
18 ௧௮ வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். (aiōn g165)
A mepukat me moredi on nan tuka teketek, me ronada majan.
19 ௧௯ இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்.
A anan en pai en jappa o inon kapwa, o norok en okotme pweida, kajokela majan, ap jota wa. (aiōn g165)
20 ௨0 வசனத்தைக்கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதுமடங்கும், ஒன்று அறுபதுமடங்கும், ஒன்று நூறுமடங்காகவும் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்” என்றார்.
A mepukat irail, me moredi on nan pwel mau, me ronada majan o, ale o wa, akai pan me jlei ijok, a akai me woneijok, a akai me epuki.
21 ௨௧ பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: விளக்கு விளக்குத்தண்டின்மேல் வைக்கிறதற்குத்தானேதவிர, பாத்திரத்தின் கீழோ, கட்டிலின் கீழோ, வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?
A kotin majani on irail: Kandel pan wijikedo, pwen ko on pan kajak de pan men wendi? A Jote koda won nin deun kandel.
22 ௨௨ வெளியரங்கமாகாத அந்தரங்கமும் இல்லை, வெளிக்குவராத மறைபொருளும் இல்லை.
Pwe jota me rir kot, me jo pan janjalada, pil jota me okiok kot, me jota pan lok jili.
23 ௨௩ கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாக இருந்தால் அவன் கேட்கட்டும் என்றார்.
Meamen me jalon a mia men ron, i en ron!
24 ௨௪ பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள். எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்; கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும்.
A ap kotin majani on irail: komail kalaka, me komail ron! pwe men jon, me komail jonki iduen a pil pan jon, on komail.
25 ௨௫ உள்ளவன் எவனோ, அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவன் எவனோ, அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
Pwe me a mia, ekij pan ko on, a me jota a mia, me ekij mie, me ekij mi re a pan katia san.
26 ௨௬ பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனிதன் நிலத்தில் விதையை விதைத்து;
A kotin majani: let duen wein Kot, raj on aramaj amen, me kamoredi on nan pwel war en tuka.
27 ௨௭ இரவில் தூங்கி, பகலில் விழிக்க, அவனுக்குத் தெரியாமலேயே, விதை முளைத்துப் பயிராவதற்கு ஒப்பாக இருக்கிறது.
Ap mairela, pirida, pon ran; a war o wojada ap kakairida a ap jota aja due.
28 ௨௮ எப்படியென்றால், நிலமானது முதலில் முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாகக் கொடுக்கும்.
Pwe pwel kin pein kawojada tuka. Maj katoka, mur mpok, mur war en korn nan mpok ap pwarada.
29 ௨௯ பயிர் விளைந்து அறுவடைக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார்.
A ni wa ma, a ap madan ki on men lepukedi, pwe rak mier.
30 ௩0 பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதை விளக்கிச் சொல்லமுடியும்?
A pil kotin majani: Da me kitail en karajai on wein Kot? De da me kitail en kajojon on?
31 ௩௧ அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியில் உள்ள எல்லாவிதைகளையும்விட மிக சிறியதாக இருக்கிறது;
A raj on wan tuka, me pan kamoremoredi on nan pwel, me tikitik jan war karoj, me mi nan jap.
32 ௩௨ விதைக்கப்பட்டப் பின்போ, அது வளர்ந்து, எல்லாப் பூண்டுகளையும்விட மிக பெரிதாக வளர்ந்து, ஆகாயத்துப் பறவைகள் அதின் நிழலின்கீழ் வந்து கூடுகளைக்கட்டத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்.
A lao kamoredi, ap wojada laude jan dip karoj, ap kajan pajan laud; manpir en pan lan ap kin wendi pan mot a.
33 ௩௩ அவர்கள் கேட்டுப் புரிந்துகொள்வதற்கு ஏற்றபடி, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.
I jon en karajeraj akan toto a kotiki on irail ni a kawewe on irail majan o duen ar weweki.
34 ௩௪ உவமைகள் இல்லாமல் அவர்களுக்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீடர்களோடு தனிமையாக இருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கிச்சொன்னார்.
Jota a majan, ma jo karajeraj. Ni arail kelepala, a ap kotin kadede on japwilim a tounpadak kan meakan.
35 ௩௫ அன்று மாலைநேரத்தில், அவர் அவர்களைப் பார்த்து: அக்கரைக்குப் போகலாம் வாருங்கள் என்றார்.
Ni ran ota, lao jautik penaer, a kotin majani on irail: Kitail daulul won palio!
36 ௩௬ அவர்கள் மக்களை அனுப்பிவிட்டு, அவர் படகில் இருந்தபடியே அவரைக்கொண்டுபோனார்கள். வேறு படகுகளும் அவரோடு இருந்தது.
Ari, ni ar kadar pajan pokon o, re kamajalada nin jop o. Pil akai kijin jop mi re a.
37 ௩௭ அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படகு நிரம்பும் அளவிற்கு, அலைகள் படகின்மேல் மோதியது.
Melimel ap koda, iluk ap punedi on nan jop o kadirela.
38 ௩௮ இயேசு, கப்பலின் பின்பக்கத்தில் தலையணையை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மரித்துப்போவதைப்பற்றி உமக்குக் கவலை இல்லையா? என்றார்கள்.
A a kotikot nan murin jop o, jaijaimok pon uluna. Irail ap kaopada. potoan on i: Jaunpadak, kom jota kupurai kit, pweki at pan mela?
39 ௩௯ அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: சீராதே, அமைதியாக இரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதி உண்டானது.
I ari kotin kipada, anianida melimel, o kotin majani on jed o: Moledi! An ap dukedi o molela kaualap.
40 ௪0 அவர் அவர்களைப் பார்த்து: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போனது என்றார்.
A ap kotin majani on irail: Da me komail majapwekeki? Iadue, jota omail pojon?
41 ௪௧ அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
Irail majapwekada kaualap, ap indada nan pun arail: Iaduen ol men et, me an o jed peiki on?

< மாற்கு 4 >