< லூக்கா 3 >

1 திபேரியு பேரரசர் அரசாண்ட பதினைந்தாம் வருடத்தில், பொந்தியுபிலாத்து யூதேயா நாட்டிற்கு அதிபதியாகவும், ஏரோது கலிலேயாவிற்கு அதிபதியாகவும், அவன் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயா மற்றும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாகவும், லிசானியா அபிலேனேக்கு அதிபதியாகவும்,
அநந்தரம்’ திபி³ரியகைஸரஸ்ய ராஜத்வஸ்ய பஞ்சத³ஸே² வத்ஸரே ஸதி யதா³ பந்தீயபீலாதோ யிஹூதா³தே³ஸா²தி⁴பதி ர்ஹேரோத்³ து கா³லீல்ப்ரதே³ஸ²ஸ்ய ராஜா பி²லிபநாமா தஸ்ய ப்⁴ராதா து யிதூரியாயாஸ்த்ராகோ²நீதியாப்ரதே³ஸ²ஸ்ய ச ராஜாஸீத் லுஷாநீயநாமா அவிலீநீதே³ஸ²ஸ்ய ராஜாஸீத்
2 அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியர்களாகவும் இருந்தகாலத்தில் வனாந்திரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டானது.
ஹாநந் கியபா²ஸ்²சேமௌ ப்ரதா⁴நயாஜாகாவாஸ்தாம்’ ததா³நீம்’ ஸிக²ரியஸ்ய புத்ராய யோஹநே மத்⁴யேப்ராந்தரம் ஈஸ்²வரஸ்ய வாக்யே ப்ரகாஸி²தே ஸதி
3 அப்பொழுது: “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்படுத்துங்கள் என்றும்,
ஸ யர்த்³த³ந உப⁴யதடப்ரதே³ஸா²ந் ஸமேத்ய பாபமோசநார்த²ம்’ மந​: பராவர்த்தநஸ்ய சிஹ்நரூபம்’ யந்மஜ்ஜநம்’ ததீ³யா​: கதா²​: ஸர்வ்வத்ர ப்ரசாரயிதுமாரேபே⁴|
4 பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், எல்லா மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் நேராகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,
யிஸ²யியப⁴விஷ்யத்³வக்த்ரு’க்³ரந்தே² யாத்³ரு’ஸீ² லிபிராஸ்தே யதா², பரமேஸ²ஸ்ய பந்தா²நம்’ பரிஷ்குருத ஸர்வ்வத​: | தஸ்ய ராஜபத²ஞ்சைவ ஸமாநம்’ குருதாது⁴நா|
5 மாம்சமான எல்லோரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்று ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி,
காரிஷ்யந்தே ஸமுச்ச்²ராயா​: ஸகலா நிம்நபூ⁴மய​: | காரிஷ்யந்தே நதா​: ஸர்வ்வே பர்வ்வதாஸ்²சோபபர்வ்வதா​: | காரிஷ்யந்தே ச யா வக்ராஸ்தா​: ஸர்வ்வா​: ஸரலா பு⁴வ​: | காரிஷ்யந்தே ஸமாநாஸ்தா யா உச்சநீசபூ⁴மய​: |
6 அவன் யோர்தான் நதிக்கு அருகில் உள்ள தேசத்திற்குப்போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.
ஈஸ்²வரேண க்ரு’தம்’ த்ராணம்’ த்³ரக்ஷ்யந்தி ஸர்வ்வமாநவா​: | இத்யேதத் ப்ராந்தரே வாக்யம்’ வத³த​: கஸ்யசித்³ ரவ​: ||
7 அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்த மக்கள் கூட்டத்தை நோக்கி: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்?
யே யே லோகா மஜ்ஜநார்த²ம்’ ப³ஹிராயயுஸ்தாந் ஸோவத³த் ரே ரே ஸர்பவம்’ஸா² ஆகா³மிந​: கோபாத் பலாயிதும்’ யுஷ்மாந் கஸ்²சேதயாமாஸ?
8 மனந்திரும்புதலுக்கு தகுந்த கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுடைய தகப்பன் என்று உங்களுக்குள்ளேசொல்லாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினால் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
தஸ்மாத்³ இப்³ராஹீம் அஸ்மாகம்’ பிதா கதா²மீத்³ரு’ஸீ²ம்’ மநோபி⁴ ர்ந கத²யித்வா யூயம்’ மந​: பரிவர்த்தநயோக்³யம்’ ப²லம்’ ப²லத; யுஷ்மாநஹம்’ யதா²ர்த²ம்’ வதா³மி பாஷாணேப்⁴ய ஏதேப்⁴ய ஈஸ்²வர இப்³ராஹீம​: ஸந்தாநோத்பாத³நே ஸமர்த²​: |
9 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும் என்றான்.
அபரஞ்ச தருமூலே(அ)து⁴நாபி பரஸு²​: ஸம்’லக்³நோஸ்தி யஸ்தருருத்தமம்’ ப²லம்’ ந ப²லதி ஸ சி²த்³யதே(அ)க்³நௌ நிக்ஷிப்யதே ச|
10 ௧0 அப்பொழுது மக்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
ததா³நீம்’ லோகாஸ்தம்’ பப்ரச்சு²ஸ்தர்ஹி கிம்’ கர்த்தவ்யமஸ்மாபி⁴​: ?
11 ௧௧ அவர்களுக்கு அவன் மறுமொழியாக: இரண்டு மேலாடையை வைத்திருக்கிறவன், ஒன்றும் இல்லாதவனுக்கு அதில் ஒன்றைக் கொடுக்கவேண்டும்; உணவு வைத்திருப்பவனும் அப்படியே செய்யவேண்டும்” என்றான்.
தத​: ஸோவாதீ³த் யஸ்ய த்³வே வஸநே வித்³யேதே ஸ வஸ்த்ரஹீநாயைகம்’ விதரது கிம்’ஞ்ச யஸ்ய கா²த்³யத்³ரவ்யம்’ வித்³யதே ஸோபி ததை²வ கரோது|
12 ௧௨ வரி வசூலிப்பவர்களும் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்து, அவனை நோக்கி: “போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள்.
தத​: பரம்’ கரஸஞ்சாயிநோ மஜ்ஜநார்த²ம் ஆக³த்ய பப்ரச்சு²​: ஹே கு³ரோ கிம்’ கர்த்தவ்யமஸ்மாபி⁴​: ?
13 ௧௩ அதற்கு அவன்: “உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதற்குமேல் அதிகமாக ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.
தத​: ஸோகத²யத் நிரூபிதாத³தி⁴கம்’ ந க்³ரு’ஹ்லித|
14 ௧௪ போர்வீரர்களும் அவனை நோக்கி: “நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு அவன்: “நீங்கள் யாரிடமும் கட்டாயப்படுத்தி பணம் வாங்காமலும், ஒருவன் மேலும் பொய்யாக குற்றஞ்சாட்டாமலும், உங்களுடைய சம்பளமே போதும் என்று இருங்கள்” என்றான்.
அநந்தரம்’ ஸேநாக³ண ஏத்ய பப்ரச்ச² கிமஸ்மாபி⁴ ர்வா கர்த்தவ்யம்? தத​: ஸோபி⁴த³தே⁴ கஸ்ய காமபி ஹாநிம்’ மா கார்ஷ்ட ததா² ம்ரு’ஷாபவாத³ம்’ மா குருத நிஜவேதநேந ச ஸந்துஷ்ய திஷ்ட²த|
15 ௧௫ யோவானைப்பற்றி: இவன்தான் கிறிஸ்துவோ என்று மக்களெல்லோரும் நினைத்துக்கொண்டு, தங்களுடைய இருதயங்களில் யோசித்துக்கொண்டிருக்கும்போது,
அபரஞ்ச லோகா அபேக்ஷயா ஸ்தி²த்வா ஸர்வ்வேபீதி மநோபி⁴ ர்விதர்கயாஞ்சக்ரு​: , யோஹநயம் அபி⁴ஷிக்தஸ்த்ராதா ந வேதி?
16 ௧௬ யோவான் எல்லோருக்கும் மறுமொழியாக: “நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன், என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய காலணிகளின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை, அவர் பரிசுத்த ஆவியானவராலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
ததா³ யோஹந் ஸர்வ்வாந் வ்யாஜஹார, ஜலே(அ)ஹம்’ யுஷ்மாந் மஜ்ஜயாமி ஸத்யம்’ கிந்து யஸ்ய பாது³காப³ந்த⁴நம்’ மோசயிதுமபி ந யோக்³யோஸ்மி தாத்³ரு’ஸ² ஏகோ மத்தோ கு³ருதர​: புமாந் ஏதி, ஸ யுஷ்மாந் வஹ்நிரூபே பவித்ர ஆத்மநி மஜ்ஜயிஷ்யதி|
17 ௧௭ தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.
அபரஞ்ச தஸ்ய ஹஸ்தே ஸூ²ர்ப ஆஸ்தே ஸ ஸ்வஸ²ஸ்யாநி ஸு²த்³த⁴ரூபம்’ ப்ரஸ்போ²ட்ய கோ³தூ⁴மாந் ஸர்வ்வாந் பா⁴ண்டா³கா³ரே ஸம்’க்³ரஹீஷ்யதி கிந்து பூ³ஷாணி ஸர்வ்வாண்யநிர்வ்வாணவஹ்நிநா தா³ஹயிஷ்யதி|
18 ௧௮ வேறு அநேக புத்திமதிகளையும் அவன் மக்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.
யோஹந் உபதே³ஸே²நேத்த²ம்’ நாநாகதா² லோகாநாம்’ ஸமக்ஷம்’ ப்ரசாரயாமாஸ|
19 ௧௯ தேசத்தின் அதிபதியாகிய ஏரோது, அவன் சகோதரன் பிலிப்புவின் மனைவியாகிய ஏரோதியாளைத் திருமணம் செய்ததாலும், அவன் செய்த மற்றப் பொல்லாங்குகளுக்காகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,
அபரஞ்ச ஹேரோத்³ ராஜா பி²லிப்நாம்ந​: ஸஹோத³ரஸ்ய பா⁴ர்ய்யாம்’ ஹேரோதி³யாமதி⁴ ததா²ந்யாநி யாநி யாநி குகர்ம்மாணி க்ரு’தவாந் தத³தி⁴ ச
20 ௨0 ஏரோது தான் செய்த மற்ற எல்லாப் பொல்லாங்குகளும் போதாதென்று, யோவானைப் பிடித்து சிறையில் அடைத்துவைத்தான்.
யோஹநா திரஸ்க்ரு’தோ பூ⁴த்வா காராகா³ரே தஸ்ய ப³ந்த⁴நாத்³ அபரமபி குகர்ம்ம சகார|
21 ௨௧ மக்களெல்லோரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணும்போது, வானம் திறக்கப்பட்டது;
இத​: பூர்வ்வம்’ யஸ்மிந் ஸமயே ஸர்வ்வே யோஹநா மஜ்ஜிதாஸ்ததா³நீம்’ யீஸு²ரப்யாக³த்ய மஜ்ஜித​: |
22 ௨௨ பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: “நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன்” என்று உரைத்தது.
தத³நந்தரம்’ தேந ப்ரார்தி²தே மேக⁴த்³வாரம்’ முக்தம்’ தஸ்மாச்ச பவித்ர ஆத்மா மூர்த்திமாந் பூ⁴த்வா கபோதவத் தது³பர்ய்யவருரோஹ; ததா³ த்வம்’ மம ப்ரிய​: புத்ரஸ்த்வயி மம பரம​: ஸந்தோஷ இத்யாகாஸ²வாணீ ப³பூ⁴வ|
23 ௨௩ அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவராக இருந்தார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;
ததா³நீம்’ யீஸு²​: ப்ராயேண த்ரிம்’ஸ²த்³வர்ஷவயஸ்க ஆஸீத்| லௌகிகஜ்ஞாநே து ஸ யூஷப²​: புத்ர​: ,
24 ௨௪ ஏலி மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்; லேவி மெல்கியின் குமாரன்; மெல்கி யன்னாவின் குமாரன்; யன்னா யோசேப்பின் குமாரன்;
யூஷப்² ஏலே​: புத்ர​: , ஏலிர்மத்தத​: புத்ர​: , மத்தத் லேவே​: புத்ர​: , லேவி ர்மல்கே​: புத்ர​: , மல்கிர்யாந்நஸ்ய புத்ர​: ; யாந்நோ யூஷப²​: புத்ர​: |
25 ௨௫ யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா ஆமோசின் குமாரன்; ஆமோஸ் நாகூமின் குமாரன்; நாகூம் எஸ்லியின் குமாரன்; எஸ்லி நங்காயின் குமாரன்.
யூஷப்² மத்ததி²யஸ்ய புத்ர​: , மத்ததி²ய ஆமோஸ​: புத்ர​: , ஆமோஸ் நஹூம​: புத்ர​: , நஹூம் இஷ்லே​: புத்ர​: இஷ்லிர்நகே³​: புத்ர​: |
26 ௨௬ நங்காய் மாகாத்தின் குமாரன்; மாகாத் மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா சேமேயின் குமாரன்; சேமேய் யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யூதாவின் குமாரன்; யூதா யோவன்னாவின் குமாரன்.
நகி³ர்மாட​: புத்ர​: , மாட் மத்ததி²யஸ்ய புத்ர​: , மத்ததி²ய​: ஸி²மியே​: புத்ர​: , ஸி²மியிர்யூஷப²​: புத்ர​: , யூஷப்² யிஹூதா³​: புத்ர​: |
27 ௨௭ யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா செருபாபேலின் குமாரன்; செருபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன்.
யிஹூதா³ யோஹாநா​: புத்ர​: , யோஹாநா ரீஷா​: புத்ர​: , ரீஷா​: ஸிருப்³பா³பி³ல​: புத்ர​: , ஸிருப்³பா³பி³ல் ஸ²ல்தீயேல​: புத்ர​: , ஸ²ல்தீயேல் நேரே​: புத்ர​: |
28 ௨௮ நேரி மெல்கியின் குமாரன்; மெல்கி அத்தியின் குமாரன்; அத்தி கோசாமின் குமாரன்; கோசாம் எல்மோதாமின் குமாரன்; எல்மோதாம் ஏரின் குமாரன்; ஏர் யோசேயின் குமாரன்.
நேரிர்மல்கே​: புத்ர​: , மல்கி​: அத்³ய​: புத்ர​: , அத்³தீ³ கோஷம​: புத்ர​: , கோஷம் இல்மோத³த³​: புத்ர​: , இல்மோத³த்³ ஏர​: புத்ர​: |
29 ௨௯ யோசே எலியேசரின் குமாரன்; எலியேசர் யோரீமின் குமாரன்; யோரீம் மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்.
ஏர் யோஸே²​: புத்ர​: , யோஸி²​: இலீயேஷர​: புத்ர​: , இலீயேஷர் யோரீம​: புத்ர​: , யோரீம் மத்தத​: புத்ர​: , மத்தத லேவே​: புத்ர​: |
30 ௩0 லேவி சிமியோனின் குமாரன்; சிமியோன் யூதாவின் குமாரன்; யூதா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யோனானின் குமாரன்; யோனாம் எலியாக்கீமின் குமாரன்.
லேவி​: ஸி²மியோந​: புத்ர​: , ஸி²மியோந் யிஹூதா³​: புத்ர​: , யிஹூதா³ யூஷுப²​: புத்ர​: , யூஷுப்² யோநந​: புத்ர​: , யாநந் இலீயாகீம​: புத்ர​: |
31 ௩௧ எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன்.
இலியாகீம்​: மிலேயா​: புத்ர​: , மிலேயா மைநந​: புத்ர​: , மைநந் மத்தத்தஸ்ய புத்ர​: , மத்தத்தோ நாத²ந​: புத்ர​: , நாத²ந் தா³யூத³​: புத்ர​: |
32 ௩௨ தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேத்தின் குமாரன்; ஓபேத் போவாஸின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.
தா³யூத்³ யிஸ²ய​: புத்ர​: , யிஸ²ய ஓபே³த³​: புத்ர, ஓபே³த்³ போ³யஸ​: புத்ர​: , போ³யஸ் ஸல்மோந​: புத்ர​: , ஸல்மோந் நஹஸோ²ந​: புத்ர​: |
33 ௩௩ நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன்.
நஹஸோ²ந் அம்மீநாத³ப³​: புத்ர​: , அம்மீநாத³ப்³ அராம​: புத்ர​: , அராம் ஹிஷ்ரோண​: புத்ர​: , ஹிஷ்ரோண் பேரஸ​: புத்ர​: , பேரஸ் யிஹூதா³​: புத்ர​: |
34 ௩௪ யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்; ஆபிரகாம் தேராவின் குமாரன்; தேரா நாகோரின் குமாரன்.
யிஹூதா³ யாகூப³​: புத்ர​: , யாகூப்³ இஸ்ஹாக​: புத்ர​: , இஸ்ஹாக் இப்³ராஹீம​: புத்ர​: , இப்³ராஹீம் தேரஹ​: புத்ர​: , தேரஹ் நாஹோர​: புத்ர​: |
35 ௩௫ நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன்.
நாஹோர் ஸிருக³​: புத்ர​: , ஸிருக்³ ரிய்வ​: புத்ர​: , ரியூ​: பேலக³​: புத்ர​: , பேலக்³ ஏவர​: புத்ர​: , ஏவர் ஸே²லஹ​: புத்ர​: |
36 ௩௬ சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன்.
ஸே²லஹ் கைநந​: புத்ர​: , கைநந் அர்ப²க்ஷத³​: புத்ர​: , அர்ப²க்ஷத்³ ஸா²ம​: புத்ர​: , ஸா²ம் நோஹ​: புத்ர​: , நோஹோ லேமக​: புத்ர​: |
37 ௩௭ லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேத்தின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கெய்னான் ஏனோசின் குமாரன்.
லேமக் மிதூ²ஸே²லஹ​: புத்ர​: , மிதூ²ஸே²லஹ் ஹநோக​: புத்ர​: , ஹநோக் யேரத³​: புத்ர​: , யேரத்³ மஹலலேல​: புத்ர​: , மஹலலேல் கைநந​: புத்ர​: |
38 ௩௮ ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.
கைநந் இநோஸ²​: புத்ர​: , இநோஸ்² ஸே²த​: புத்ர​: , ஸே²த் ஆத³ம​: புத்ர, ஆத³ம் ஈஸ்²வரஸ்ய புத்ர​: |

< லூக்கா 3 >