< லூக்கா 23 >

1 அவர்களுடைய கூட்டத்தாரெல்லோரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்:
Then they all rose up and led Him to Pilate.
2 இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டியதில்லையென்றும் சொல்லி, மக்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சுமத்தத் தொடங்கினார்கள்.
And they began to accuse Him, saying, We found this fellow perverting the nation, and forbiding to give tribute to Cesar; saying, that He himself is Christ the king.
3 பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்கு மறுமொழியாக; நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
And Pilate asked Him, saying, Art thou the king of the Jews? And He answered him and said, I am as thou sayest.
4 அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் மக்களையும் பார்த்து: இந்த மனிதனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்.
But Pilate said to the chief priests, and to the people, I find nothing criminal in this man.
5 அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இந்த இடம்வரைக்கும் யூதேயா தேசமெங்கும் உபதேசம் செய்து, மக்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடு சொன்னார்கள்.
Then they were more vehement, saying, He stirreth up the people to sedition, spreading his doctrine throughout all Judea: having begun at Galilee and come even to this place.
6 கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனிதன் கலிலேயனா என்று விசாரித்து,
Now when Pilate heard of Galilee, he asked, if the man were a Galilean:
7 அவர் ஏரோதின் அதிகாரத்திற்குள்ளானவர் என்று அறிந்து, அந்த நாட்களிலே எருசலேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான்.
and understanding that He was of Herod's jurisdiction, he sent Him to Herod, who was also at Jerusalem at that time.
8 ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாக ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைப் பார்த்தபோது, மிகவும் சந்தோஷப்பட்டு,
And Herod, when he saw Jesus, was very glad; for he had of a long time been desirous to see Him, because he had heard much of Him, and he hoped to see some miracle wrought by Him.
9 அநேக காரியங்களைக்குறித்து, அவரிடத்தில் கேள்வி கேட்டான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
And he asked Him many questions; but He answered him nothing:
10 ௧0 பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் அவர்மேல் பிடிவாதமாகக் குற்றஞ்சுமத்திக்கொண்டே நின்றார்கள்.
though the chief priests and scribes stood vehemently accusing Him.
11 ௧௧ அப்பொழுது ஏரோது தன் போர் வீரர்களோடுகூட அவரை நிந்தித்து, கேலிசெய்து மினுக்கான ஆடையை அவருக்கு அணிந்து, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான்.
But Herod with his soldiers set Him at nought and insulted Him, and put on Him a gaudy robe, and sent Him back to Pilate.
12 ௧௨ முன்னே ஒருவருக்கொருவர் விரோதிகளாக இருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையதினம் நண்பர்களானார்கள்.
And on that same day Pilate and Herod became friends with each other: for before they were at enmity one with the other.
13 ௧௩ பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்து,
And Pilate called together the chief priests, and the rulers,
14 ௧௪ அவர்களைப் பார்த்து: மக்களைக் கலகத்திற்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனிதனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.
and the people, and said unto them, Ye have brought to me this man as one that perverteth the people: and behold I have examined Him before you, and found nothing chargeable on Him, of the things you alledge against Him:
15 ௧௫ உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்திற்கு ஏதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.
nor Herod neither; for I sent you to him, and behold nothing worthy of death is proved upon Him.
16 ௧௬ எனவே இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
I will therefore chastise Him, and so release Him.
17 ௧௭ பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது வழக்கமாக இருந்தபடியால் அப்படிச் சொன்னான்.
Now he was obliged to release one to them at the feast.
18 ௧௮ மக்களெல்லோரும் அதைக்கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக்கேட்டார்கள்.
And they all cried out, saying, Away with this man, and release to us Barabbas:
19 ௧௯ அந்த பரபாஸ் என்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலவரத்தினிமித்தமும் கொலை குற்றத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.
(who for a riot in the city, and for murder, was committed to prison: )
20 ௨0 பிலாத்து இயேசுவை விடுதலையாக்க விரும்பி, மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.
Pilate therefore spake to them again, being desirous to release Jesus.
21 ௨௧ அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூச்சலிட்டார்கள்.
But they bawled out, saying, Crucify Him, crucify Him.
22 ௨௨ அவன் மூன்றாம்முறை அவர்களைப் பார்த்து: ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? மரணத்திற்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகவே, நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
And he said to them a third time, what evil hath He done? I have found nothing in Him deserving death: I will therefore chastise Him, and let Him go.
23 ௨௩ அப்படியிருந்தும் அவரை சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியர்களும் இட்ட சத்தம் மேற்கொண்டது.
But they insisted upon it with loud clamours, demanding Him to be crucified: and their voices and those of the chief priests prevailed.
24 ௨௪ அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,
So Pilate gave sentence that what they demanded should be done.
25 ௨௫ கலவரத்தினிமித்தமும் கொலைக் குற்றத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்த பரபாசை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் விருப்பத்திற்கு ஒப்புக்கொடுத்தான்.
And he released to them him that for sedition and murder had been cast into prison, whom they desired; and delivered up Jesus to their will.
26 ௨௬ அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவருக்குப் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.
And when they led Him away, they laid hold on one Simon a Cyrenean coming out of the country, and put the cross on him to bear it behind Jesus.
27 ௨௭ திரள்கூட்டமான மக்களும் அவருக்காகப் கதறி அழுகிற பெண்களும் அவருக்குப் பின்னே சென்றார்கள்.
And there followed Him a great multitude of people, and of women, who also bewailed and lamented Him: but Jesus turning to them said,
28 ௨௮ இயேசு அவர்கள் பக்கமாகத் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்களுடைய பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
Daughters of Jerusalem, weep not for me, but weep for yourselves, and for your children.
29 ௨௯ இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத மார்பகங்களும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.
For behold the days are coming in which they shall say, happy are the barren, and the wombs that never bare, and the breasts that never gave suck.
30 ௩0 அப்பொழுது மலைகளைப் பார்த்து: எங்களின்மேல் விழுங்களென்றும், குன்றுகளைப் பார்த்து: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
Then shall they say to the mountains, Fall on us; and to the hills, Cover us:
31 ௩௧ பச்சைமரத்திற்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்திற்கு என்ன செய்யமாட்டார்கள்” என்றார்.
for if they do these things to the green wood, what shall be done to the dry?
32 ௩௨ குற்றவாளிகளாகிய வேறு இரண்டுபேரும் அவரோடுகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.
And there were also two other malefactors led with Him to be put to death.
33 ௩௩ கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.
And when they were come to the place which is called Calvary, there they crucified Him and the malefactors: one on his right hand and the other on his left.
34 ௩௪ அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய ஆடைகளை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
And Jesus said, Father, forgive them; for they know not what they do. And they parted his garments, and cast lots for them.
35 ௩௫ மக்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு அதிகாரிகளும் அவரை ஏளனம்செய்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.
And the people stood looking on, and even the rulers also with them derided Him, saying, He saved others, let Him save Himself, if He be the Christ the chosen of God.
36 ௩௬ போர்வீரர்களும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:
And the soldiers too insulted Him, coming to Him and offering Him vinegar, saying,
37 ௩௭ நீ யூதர்களின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைக் கேலிசெய்தார்கள்.
If thou art the king of the Jews, save thyself.
38 ௩௮ இவன் யூதர்களுடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
And there was a superscription written over Him in Greek, and Latin and Hebrew letters, THIS IS THE KING OF THE JEWS.
39 ௩௯ அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இழிவாகப் பேசினான்.
And one of the malefactors that were executed with Him reviled Him, saying, If thou be the Messiah, save thyself and us.
40 ௪0 மற்றவன் அவனைப் பார்த்து: நீ இந்த தண்டனைக்குட்பட்டவனாக இருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
But the other answered and rebuked him, saying, Dost not thou fear God neither, when thou thyself art in the same condemnation?
41 ௪௧ நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் செய்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் செய்யவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
And we indeed justly; for we receive the due rewards of our deeds, but this man hath done nothing amiss.
42 ௪௨ இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
And he said unto Jesus, Lord, remember me when thou comest into thy kingdom.
43 ௪௩ இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
And Jesus answered him, I assure thee, thou shalt be with me this day in paradise.
44 ௪௪ அப்பொழுது ஏறக்குறைய பகல் பன்னிரண்டு மணியாக இருந்தது; மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருளுண்டானது.
Now it was about the sixth hour, and there was darkness over the whole land till the ninth hour.
45 ௪௫ சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.
And the sun was darkened, and the veil of the temple was rent in the midst.
46 ௪௬ இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
And Jesus cried with a loud voice and said, Father, into thy hands I commit my spirit. And when He had said thus, He expired.
47 ௪௭ நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனிதன் நீதிமானாக இருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
And when the centurion saw what was done, he glorified God, saying, Certainly this man was righteous.
48 ௪௮ இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த மக்களெல்லோரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்களுடைய மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
And all the multitudes that came together to this affecting sight, seeing what happened, smote on their breasts and returned.
49 ௪௯ அவருக்கு அறிமுகமானவர்களெல்லோரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்னே சென்ற பெண்களும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
And all his acquaintance stood at a distance, and the women that followed Him from Galilee, beholding these things.
50 ௫0 யோசேப்பு என்னும் பெயர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாக இருந்தான்.
And behold there was a man of Arimathea, a city of the Jews, named Joseph, a counsellor, a good man and a just:
51 ௫௧ அவன் யூதர்களுடைய பட்டணங்களில் ஒன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்திற்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதிக்காதவனுமாக இருந்தான்.
(who had not consented to their counsel nor their action; and who was also himself in expectation of the kingdom of God: )
52 ௫௨ அவன் பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,
he came to Pilate, and begged the body of Jesus:
53 ௫௩ அதை இறக்கி, மெல்லிய துணியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதும் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்படாததுமாக இருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.
and he took it down and wrapped it in linen, and laid it in a sepulchre hewn in stone, where no one had ever yet been laid.
54 ௫௪ அந்த நாள் ஆயத்தநாளாக இருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமானது.
Now that day was the preparation, and the sabbath was coming on:
55 ௫௫ கலிலேயாவிலிருந்து அவருடன் வந்திருந்த பெண்களும் பின்னேசென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,
wherefore the women, that came with Him from Galilee, followed Joseph, and saw the sepulchre, and how the body was laid:
56 ௫௬ திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கட்டளையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
but returned and prepared spices and perfumes; and then rested on the sabbath-day, according to the commandment.

< லூக்கா 23 >