< லேவியராகமம் 12 >

1 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
И Господ говори на Моисея, казвайки:
2 “நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால்: ஒரு பெண் கர்ப்பவதியாகி ஆண்பிள்ளையைப் பெற்றால், அவள் மாதவிடாய் உள்ள பெண் விலக்கமாக இருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழுநாட்கள் தீட்டாயிருப்பாள்.
Говори на израилтяните, като речеш: Ако зачне жена и роди мъжко дете, тя ще бъде нечиста седем дни; както в дните, когато е разлъчана поради месечините си, ще бъде нечиста.
3 எட்டாம் நாளிலே அந்த குழந்தையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படக்கடவது.
А на осмия ден да се обреже краекожието на детето.
4 பின்பு அவள் முப்பத்துமூன்று நாட்கள் தன் இரத்தச் சுத்திகரிப்பு நிலையிலே இருந்து, சுத்திகரிப்பின் நாட்கள் முடியும்வரை பரிசுத்தமான யாதொரு பொருளைத் தொடவும் பரிசுத்த ஸ்தலத்திற்குள் வரவும் கூடாது.
Но тя да остава тридесет и три дена за очистването си от кръвта си; до никоя света вещ да се не допира, и в светилището да не влиза, преди да се свършат дните на очистването й.
5 பெண்குழந்தையைப் பெறுவாளென்றால், அவள், இரண்டு வாரங்கள் மாதவிடாய் உள்ள பெண்ணைப்போலத் தீட்டாயிருந்து, பின்பு அறுபத்தாறு நாட்கள் இரத்தச் சுத்திகரிப்பு நிலையிலே இருப்பாளாக.
Но ако роди женско дете, тя ще бъде нечиста две седмици, както когато е разлъчана; и да остава шестдесет и шест дена за очистването си от кръвта си.
6 “அவள் ஆண்குழந்தையையாவது பெண்குழந்தையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் முடிந்தபின்பு, அவள் ஒருவயதுடைய ஆட்டுக்குட்டியை சர்வாங்கதகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரணபலியாகவும், ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்.
А когато се свършат дните на очистването й, за син или за дъщеря, нека донесе при свещеника едногодишно агне за всеизгаряне, и гълъбче или гургулица в принос за грях, до входа на шатъра за срещане;
7 அதை அவன் யெகோவாவுடைய சந்நிதியில் பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக; அப்பொழுது அவள் தன் இரத்தப்போக்கின் தீட்டு நீங்கிச் சுத்தமாவாள். இது ஆண்குழந்தையையாவது பெண்குழந்தையையாவது பெற்றவளைக்குறித்த விதிமுறைகள்.
и той да го принесе пред Господа и да направи умилостивение за нея, и тя ще бъде чиста от кръвта си. Това е законът за оная, която ражда мъжко или женско дете.
8 ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்கு சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஏதாவது ஒன்றை சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள்; அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவள் சுத்தமாவாள் என்று சொல்” என்றார்.
Но ако не й стига ръка да донесе агне, нека донесе две гургулици или две гълъбчета, едното за всеизгаряне, а другото в принос за грях; и свещеникът да направи умилостивение за нея, и тя ще бъде чиста.

< லேவியராகமம் 12 >