< நியாயாதிபதிகள் 2 >

1 யெகோவாவுடைய தூதன் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்து, உங்களுடைய பிதாக்களுக்கு வாக்குக்கொடுத்த தேசத்தில் நான் உங்களைக் கொண்டுவந்து விட்டு, உங்களோடு செய்த என்னுடைய உடன்படிக்கையை நான் ஒருபோதும் முறித்துப்போடுவதில்லை என்றும்,
Gospodov angel je prišel gor od Gilgála k Bohímu in rekel: »Primoral sem vas iti gor, ven iz Egipta in vas privedel v deželo, ki sem jo prisegel vašim očetom. Rekel sem: ›Nikoli ne bom prelomil svoje zaveze z vami.
2 நீங்கள் இந்த தேசத்தில் குடியிருக்கிறவர்களோடு உடன்படிக்கைசெய்யாமல், அவர்களுடைய பலிபீடங்களை இடித்துவிடவேண்டும் என்றும் சொன்னேன்; ஆனாலும் என்னுடைய சொல்லைக் கேட்காமல்போனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்?
In vi ne boste sklenili nobene zaveze s prebivalci te dežele; zrušili boste njihove oltarje.‹ Toda niste ubogali mojega glasu. Zakaj ste to storili?‹
3 ஆகவே, நான் அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன்; அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தெய்வங்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார்.
Zato sem tudi rekel: ›Ne bom jih pognal izpred vas, temveč vam bodo kakor trni na vaših straneh in njihovi bogovi vam bodo zanka.‹«
4 யெகோவாவுடைய தூதன் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் மக்கள் அனைவரிடமும் சொல்லும்போது, மக்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்.
Pripetilo se je, ko je Gospodov angel te besede povedal vsem Izraelovim otrokom, da je ljudstvo povzdignilo svoj glas in zajokalo.
5 அந்த இடத்திற்கு போகீம் என்று பெயரிட்டு, அங்கே யெகோவா வுக்குப் பலிசெலுத்தினார்கள்.
Ime tega kraja so imenovali Bohím in tam so darovali Gospodu.
6 யோசுவா இஸ்ரவேல் மக்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள அவரவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாகத்திற்குப் போனார்கள்.
Ko je Józue pustil ljudstvu oditi, so Izraelovi otroci odšli, vsak mož v svojo dediščino, da deželo vzamejo v last.
7 யோசுவாவின் எல்லா நாட்களிலும் யெகோவா இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய செயல்களையெல்லாம் பார்த்தவர்களும், யோசுவாவிற்குப் பின்பு உயிரோடு இருந்தவர்களுமாகிய மூப்பர்களின் எல்லா நாட்களிலும் மக்கள் யெகோவாவைத் தொழுது கொண்டார்கள்.
Ljudstvo je služilo Gospodu vse Józuetove dni in vse dni starešin, ki so preživeli Józueta, ki so videli vsa velika Gospodova dela, ki jih je storil za Izrael.
8 நூனின் மகனான யோசுவா என்னும் யெகோவாவின் ஊழியக்காரன் 110 வயதுள்ளவனாக இறந்துபோனான்.
Nunov sin Józue, Gospodov služabnik, je umrl, star sto deset let.
9 அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கில் இருக்கிற அவனுடைய சுதந்திரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்செய்தார்கள்.
Pokopali so ga na meji njegove dediščine, v Timnát Heresu, na gori Efrájim, na severni strani Gáaševega hriba.
10 ௧0 அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களோடு சேர்க்கப்பட்டப்பின்பு, யெகோவாவையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த செய்கைகளையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின்பு எழும்பியது.
Tudi ves ta rod je bil zbran k svojim očetom in tam je za njimi vstal drug rod, ki ni poznal Gospoda niti še ne del, ki jih je ta storil za Izrael.
11 ௧௧ அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் யெகோவாவின் பார்வைக்கு தீமையானதைச் செய்து, பாகால்களைத் தொழுது,
Izraelovi otroci so počeli zlo v Gospodovih očeh in služili Báalom.
12 ௧௨ தங்களுடைய முற்பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச் செய்த அவர்களுடைய தேவனாகிய யெகோவாவைவிட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற மக்களுடைய தெய்வங்களாகிய அந்நிய தெய்வங்களைப் பின்பற்றிப்போய், அவைகளைத் தொழுதுகொண்டு, யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள்.
Zapustili so Gospoda, Boga svojih očetov, ki jih je privedel iz egiptovske dežele in sledili drugim bogovom, bogovom ljudstev, ki so bili okoli njih, se jim priklanjali in Gospoda izzivali k jezi.
13 ௧௩ அவர்கள் யெகோவாவைவிட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் தொழுதுகொண்டார்கள்.
Zapustili so Gospoda in služili Báalu in Astarti.
14 ௧௪ அப்பொழுது யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபம்கொண்டவராகி, அவர்கள் அதற்குப்பின்பு தங்கள் எதிரிகளுக்கு முன்பாக நிற்கமுடியாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர்களுடைய கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்களுடைய எதிரிகளின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
Gospodova jeza je bila vroča zoper Izrael in izročil jih je v roke plenilcev, ki so jih oplenili in jih prodal v roke njihovih sovražnikov naokoli, tako da ne bi mogli več obstati pred svojimi sovražniki.
15 ௧௫ யெகோவா அவர்களுக்கு வாக்கு செய்தபடி, அவர்கள் புறப்பட்டுப்போகிற இடங்களெல்லாம் யெகோவாவுடைய கரம் தீமைக்கென்றே அவர்களுக்கு எதிராக இருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
Kamorkoli so odšli, je bila zoper njih Gospodova roka za zlo, kakor je Gospod rekel in kakor jim je Gospod prisegel. Bili so silno stiskani.
16 ௧௬ யெகோவா நியாயாதிபதிகளை எழும்பச்செய்தார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை விலக்கி காப்பாற்றினார்கள்.
Kljub temu je Gospod dvignil sodnike, ki so jih osvobajali iz roke tistih, ki so jih plenili.
17 ௧௭ அவர்கள் தங்களுடைய நியாயாதிபதிகளின் சொல்லைக் கேட்காமல், அந்நிய தெய்வங்களுக்குத் தங்களை விலைமாதர்களைப்போல ஒப்புக்கொடுத்து, அவைகளைத் தொழுதுகொண்டார்கள்; தங்களுடைய பிதாக்கள் யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகி, பிதாக்கள் செய்தபடி செய்யாமற்போனார்கள்.
Vendar niso hoteli prisluhniti svojim sodnikom, temveč so se odšli vlačugat za drugimi bogovi in se jim priklanjali. Hitro so se obrnili iz poti, po kateri so hodili njihovi očetje z uboganjem Gospodovih zapovedi, toda oni niso tako storili.
18 ௧௮ யெகோவா அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பச்செய்கிறபோது, யெகோவா நியாயாதிபதியோடு இருந்து அந்த நியாயாதிபதி வாழ்ந்த நாட்களிலெல்லாம் அவர்களுடைய எதிரிகளின் கைக்கு அவர்களை விலக்கி காப்பாற்றிவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினால் தவிக்கிறதினாலே, யெகோவா துக்கப்படுவார்.
Ko jim je Gospod dvignil sodnike, potem je bil Gospod s sodnikom in jih vse sodnikove dni osvobajal iz roke njihovih sovražnikov, kajti to je pokesalo Gospoda zaradi njihovega stokanja, zaradi razloga tistih, ki so jih zatirali in jih slabili.
19 ௧௯ நியாயாதிபதி மரித்தவுடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி, பணிவிடை செய்யவும், தொழுதுகொள்ளவும், தங்களுடைய பிதாக்களைவிட இழிவாக நடந்து, தங்களுடைய தீய செய்கைகளையும் தங்களுடைய முரட்டாட்டமான வழிகளையும் விடாதிருப்பார்கள்.
Pripetilo pa se je, ko je bil sodnik mrtev, da so se vrnili in se izpridili bolj kakor njihovi očetje v sledenju drugim bogovom, da jim služijo in se jim priklanjajo. Niso odnehali od svojih lastnih početij niti od svoje trmoglave poti.
20 ௨0 ஆகையால் யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபம்கொண்டவராகி: இந்த மக்கள் தங்களுடைய பிதாக்களுக்கு நான் கற்பித்த என்னுடைய உடன்படிக்கையை மீறி என்னுடைய சொல்லைக் கேட்காமல் போனதினால்,
Gospodova jeza je bila vroča zoper Izrael in rekel je: »Zato, ker je to ljudstvo prekršilo mojo zavezo, ki sem jo zapovedal njihovim očetom in niso prisluhnili mojemu glasu,
21 ௨௧ யோசுவா இறந்தபின்பு விட்டுப்போன தேசங்களில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிடாதிருப்பேன்.
odslej tudi jaz pred njimi ne bom podil kateregakoli izmed narodov, ki jih je pustil Józue, ko je umrl,
22 ௨௨ அவர்களுடைய பிதாக்கள் யெகோவாவின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படி, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலை சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார்.
da bom lahko po njih preizkusil Izraela, če se bodo držali Gospodove poti, da hodijo po njej, kakor so se je držali njihovi očetje ali ne.«
23 ௨௩ அதற்காகக் யெகோவா அந்த தேசங்களை யோசுவாவுடைய கையில் ஒப்புக்கொடுக்காமலும், அவைகளை சீக்கிரமாகத் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.
Zato je Gospod pustil tiste narode, ne da bi jih naglo pognal ven niti jih ni izročil v Józuetovo roko.

< நியாயாதிபதிகள் 2 >