< நியாயாதிபதிகள் 17 >

1 எப்பிராயீம் மலைத்தேசத்தானாகிய மீகா என்னும் பெயருள்ள ஒரு மனிதன் இருந்தான்.
A bijaše jedan èovjek iz gore Jefremove po imenu Miha.
2 அவன் தன்னுடைய தாயை நோக்கி: உன்னிடத்திலிருந்த 1,100 வெள்ளிக்காசு திருட்டுபோனதே, அதைக்குறித்து என்னுடைய காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே, அந்தப் பணம், இதோ, என்னிடத்தில் இருக்கிறது; அதை எடுத்தவன் நான்தான் என்றான். அதற்கு அவன் தாய்: என் மகனே, நீ யெகோவாவால் ஆசீர்வதிக்கப்படுவாய் என்றாள்.
On reèe materi svojoj: tisuæa i sto srebrnika, što su ti ukradeni, za koje si klela i govorila preda mnom, evo, to je srebro u mene, ja sam ga uzeo. A mati mu reèe: Gospod da te blagoslovi, sine!
3 அவன் அந்த 1,100 வெள்ளிக்காசைத் தன்னுடைய தாயினிடத்தில் திரும்பக் கொடுத்தான்; அவள்: செதுக்கப்பட்ட ஒரு சிலையையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் உண்டாக்க, நான் என்னுடைய கையிலிருந்த இந்த வெள்ளியை என் மகனுக்காக முழுவதும் யெகோவாக்கென்று நியமித்தேன்; இப்போதும் இதை உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன் என்றாள்.
A kad vrati tisuæu i sto srebrnika materi svojoj, reèe mati njegova: to sam srebro posvetila Gospodu iz svoje ruke za tebe, sine moj, da se naèini od njega lik rezan i liven; zato ti ga sada dajem natrag.
4 அவன் அந்த வெள்ளியைத் தன்னுடைய தாய்க்குத் திரும்பக் கொடுத்தான்; அப்பொழுது அவன் தாய் 200 வெள்ளிக்காசை எடுத்து, கொல்லன் கையிலே கொடுத்தாள்; அவன் அதினாலே, செதுக்கப்பட்ட ஒரு சிலையையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் செய்தான்; அவைகள் மீகாவின் வீட்டில் இருந்தது.
Ali on opet dade srebro materi svojoj, a mati uze dvjesta srebrnika i dade zlataru, a on naèini od njega lik rezan i liven, te bijaše u kuæi Mišinoj.
5 மீகா, சிலைகளுக்கு ஒரு வீட்டை அறையை ஏற்படுத்தி வைத்திருந்தான்; அவன் ஒரு ஏபோத்தையும், சிலைகளையும் உண்டாக்கி, தன்னுடைய மகன்களில் ஒருவனை அர்ப்பணம் செய்தான்; இவன் அவனுக்கு ஆசாரியனானான்.
I taj Miha imaše kuæu za bogove, i naèini opleæak i likove, i posveti jednoga izmeðu sinova svojih da mu bude sveštenik.
6 அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானபடி செய்துவந்தான்.
U to vrijeme ne bješe cara u Izrailju: svaki èinjaše što mu bijaše drago.
7 யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊர்க்காரனும் லேவியனுமான ஒரு வாலிபன் அங்கே தங்கியிருந்தான்;
A bješe jedan mladiæ iz Vitlejema Judina, od porodice Judine, koji bješe Levit i ondje boravljaše.
8 அந்த மனிதன் எங்கேயாவது போய்த் தங்கும்படி, யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைவிட்டுப் புறப்பட்டுப் பயணம்போகும்போது, எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீட்டில் வந்து சேர்ந்தான்.
On otide iz toga grada, Vitlejema Judina, da se nastani gdje može; i iduæi svojim putem doðe u goru Jefremovu do kuæe Mišine.
9 எங்கே இருந்து வந்தாய் என்று மீகா அவனைக் கேட்டதற்கு, அவன்: நான் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய லேவியன், எங்கேயாவது போய்த் தங்கப்போகிறேன் என்றான்.
A Miha mu reèe: otkuda ideš? Odgovori mu Levit: iz Vitlejema Judina, idem da se nastanim gdje mogu.
10 ௧0 அப்பொழுது மீகா: நீ என்னிடத்தில் இரு, நீ எனக்குத் தகப்பனும் ஆசாரியனுமாக இருப்பாய்; நான் உனக்கு வருடத்திலே 10 வெள்ளிக்காசையும், மாற்று ஆடைகளையும், உனக்கு வேண்டிய ஆகாரத்தையும் கொடுப்பேன் என்று அவனிடத்தில் சொன்னான்; அப்படியே லேவியன் உள்ளே போனான்.
A Miha mu reèe: ostani kod mene, i budi mi otac i sveštenik, a ja æu ti dati deset srebrnika na godinu i dvoje haljine i hranu. I otide Levit k njemu.
11 ௧௧ அந்த லேவியன் அந்த மனிதனிடத்தில் இருக்கச் சம்மதித்தான்; அந்த வாலிபன் அவனுக்கு அவனுடைய மகன்களில் ஒருவனைப்போல் இருந்தான்.
I Levitu bi po volji da ostane kod njega, i bi mu taj mladiæ kao da mu je sin.
12 ௧௨ மீகா அந்த லேவியனைப் புனிதமான வேலைக்கு அர்ப்பணம் செய்தான்; அந்த வாலிபன் அவனுக்கு ஆசாரியனாகி, மீகாவின் வீட்டில் இருந்தான்.
I Miha posveti Levita da mu je sveštenik taj mladiæ, i osta u kuæi Mišinoj.
13 ௧௩ அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், யெகோவா எனக்கு நன்மை செய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.
Tada reèe Miha: sada znam da æe mi Gospod uèiniti dobro zato što imam Levita sveštenika.

< நியாயாதிபதிகள் 17 >