< யோவான் 9 >

1 அவர் அப்புறம் போகும்போது பிறவிக் குருடனாகிய ஒரு மனிதனைப் பார்த்தார்.
தத​: பரம்’ யீஸு²ர்க³ச்ச²ந் மார்க³மத்⁴யே ஜந்மாந்த⁴ம்’ நரம் அபஸ்²யத்|
2 அப்பொழுது அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, இவன் குருடனாக பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.
தத​: ஸி²ஷ்யாஸ்தம் அப்ரு’ச்ச²ந் ஹே கு³ரோ நரோயம்’ ஸ்வபாபேந வா ஸ்வபித்ரா​: பாபேநாந்தோ⁴(அ)ஜாயத?
3 இயேசு மறுமொழியாக: அது இவன் செய்த பாவமும் இல்லை, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமும் இல்லை, தேவனுடைய செயல்கள் இவனிடத்தில் வெளிப்படுவதற்கு இப்படிப் பிறந்தான்.
தத​: ஸ ப்ரத்யுதி³தவாந் ஏதஸ்ய வாஸ்ய பித்ரோ​: பாபாத்³ ஏதாத்³ரு’ஸோ²பூ⁴த³ இதி நஹி கிந்த்வநேந யதே²ஸ்²வரஸ்ய கர்ம்ம ப்ரகாஸ்²யதே தத்³தே⁴தோரேவ|
4 பகலாக இருக்கும்வரை நான் என்னை அனுப்பினவருடைய செயல்களைச் செய்யவேண்டும்; ஒருவனும் செயல்கள் செய்யக்கூடாத இரவு நேரம் வருகிறது.
தி³நே திஷ்ட²தி மத்ப்ரேரயிது​: கர்ம்ம மயா கர்த்தவ்யம்’ யதா³ கிமபி கர்ம்ம ந க்ரியதே தாத்³ரு’ஸீ² நிஸா²க³ச்ச²தி|
5 நான் உலகத்தில் இருக்கும்போது உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன் என்றார்.
அஹம்’ யாவத்காலம்’ ஜக³தி திஷ்டா²மி தாவத்காலம்’ ஜக³தோ ஜ்யோதி​: ஸ்வரூபோஸ்மி|
6 இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே உமிழ்ந்து, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:
இத்யுக்த்தா பூ⁴மௌ நிஷ்டீ²வம்’ நிக்ஷிப்ய தேந பங்கம்’ க்ரு’தவாந்
7 நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தம். அப்படியே அவன்போய்க் கழுவி, பார்வை அடைந்தவனாக திரும்பி வந்தான்.
பஸ்²சாத் தத்பங்கேந தஸ்யாந்த⁴ஸ்ய நேத்ரே ப்ரலிப்ய தமித்யாதி³ஸ²த் க³த்வா ஸி²லோஹே (அ)ர்தா²த் ப்ரேரிதநாம்நி ஸரஸி ஸ்நாஹி| ததோந்தோ⁴ க³த்வா தத்ராஸ்நாத் தத​: ப்ரந்நசக்ஷு ர்பூ⁴த்வா வ்யாகு⁴ட்யாகா³த்|
8 அப்பொழுது அருகில் உள்ளவர்களும், அவன் குருடனாக இருக்கும்போது அவனைப் பார்த்திருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவன் அல்லவா என்றார்கள்.
அபரஞ்ச ஸமீபவாஸிநோ லோகா யே ச தம்’ பூர்வ்வமந்த⁴ம் அபஸ்²யந் தே ப³க்த்தும் ஆரப⁴ந்த யோந்த⁴லோகோ வர்த்மந்யுபவிஸ்²யாபி⁴க்ஷத ஸ ஏவாயம்’ ஜந​: கிம்’ ந ப⁴வதி?
9 சிலர்: அவன்தான் என்றார்கள். வேறுசிலர்: அவனைப்போல இருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான்.
கேசித³வத³ந் ஸ ஏவ கேசித³வோசந் தாத்³ரு’ஸோ² ப⁴வதி கிந்து ஸ ஸ்வயமப்³ரவீத் ஸ ஏவாஹம்’ ப⁴வாமி|
10 ௧0 அப்பொழுது அவர்கள் அவனைப் பார்த்து: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள்.
அதஏவ தே (அ)ப்ரு’ச்ச²ந் த்வம்’ கத²ம்’ த்³ரு’ஷ்டிம்’ பாப்தவாந்?
11 ௧௧ அவன் மறுமொழியாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வை அடைந்தேன் என்றான்.
தத​: ஸோவத³த்³ யீஸ²நாமக ஏகோ ஜநோ மம நயநே பங்கேந ப்ரலிப்ய இத்யாஜ்ஞாபயத் ஸி²லோஹகாஸாரம்’ க³த்வா தத்ர ஸ்நாஹி| ததஸ்தத்ர க³த்வா மயி ஸ்நாதே த்³ரு’ஷ்டிமஹம்’ லப்³த⁴வாந்|
12 ௧௨ அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான்.
ததா³ தே (அ)வத³ந் ஸ புமாந் குத்ர? தேநோக்த்தம்’ நாஹம்’ ஜாநாமி|
13 ௧௩ குருடனாக இருந்த அவனைப் பரிசேயர்களிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
அபரம்’ தஸ்மிந் பூர்வ்வாந்தே⁴ ஜநே பி²ரூஸி²நாம்’ நிகடம் ஆநீதே ஸதி பி²ரூஸி²நோபி தமப்ரு’ச்ச²ந் கத²ம்’ த்³ரு’ஷ்டிம்’ ப்ராப்தோஸி?
14 ௧௪ இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைத் திறந்த நாள் ஓய்வுநாளாக இருந்தது.
தத​: ஸ கதி²தவாந் ஸ பங்கேந மம நேத்ரே (அ)லிம்பத் பஸ்²சாத்³ ஸ்நாத்வா த்³ரு’ஷ்டிமலபே⁴|
15 ௧௫ ஆகவே, பரிசேயர்களும் அவனைப் பார்த்து: நீ எப்படிப் பார்வை அடைந்தாய் என்று மீண்டும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், பார்க்கிறேன் என்றான்.
கிந்து யீஸு² ர்விஸ்²ராமவாரே கர்த்³த³மம்’ க்ரு’த்வா தஸ்ய நயநே ப்ரஸந்நே(அ)கரோத்³ இதிகாரணாத் கதிபயபி²ரூஸி²நோ(அ)வத³ந்
16 ௧௬ அப்பொழுது பரிசேயர்களில் சிலர்: அந்த மனிதன் ஓய்வுநாளைக் கடைபிடிக்காததினால் அவன் தேவனிடத்தில் இருந்து வந்தவன் இல்லை என்றார்கள். வேறுசிலர்: பாவியாக இருக்கிற மனிதன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இந்தவிதமாக அவர்களுக்குள்ளே பிரிவினை ஏற்பட்டது.
ஸ புமாந் ஈஸ்²வராந்ந யத​: ஸ விஸ்²ராமவாரம்’ ந மந்யதே| ததோந்யே கேசித் ப்ரத்யவத³ந் பாபீ புமாந் கிம் ஏதாத்³ரு’ஸ²ம் ஆஸ்²சர்ய்யம்’ கர்ம்ம கர்த்தும்’ ஸ²க்நோதி?
17 ௧௭ மீண்டும் அவர்கள் குருடனைப் பார்த்து: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான்.
இத்த²ம்’ தேஷாம்’ பரஸ்பரம்’ பி⁴ந்நவாக்யத்வம் அப⁴வத்| பஸ்²சாத் தே புநரபி தம்’ பூர்வ்வாந்த⁴ம்’ மாநுஷம் அப்ராக்ஷு​: யோ ஜநஸ்தவ சக்ஷுஷீ ப்ரஸந்நே க்ரு’தவாந் தஸ்மிந் த்வம்’ கிம்’ வத³ஸி? ஸ உக்த்தவாந் ஸ ப⁴விஸ²த்³வாதீ³|
18 ௧௮ அவன் குருடனாக இருந்து பார்வை அடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வை அடைந்தவனுடைய பெற்றோரை அழைத்து,
ஸ த்³ரு’ஷ்டிம் ஆப்தவாந் இதி யிஹூதீ³யாஸ்தஸ்ய த்³ரு’ஷ்டிம்’ ப்ராப்தஸ்ய ஜநஸ்ய பித்ரோ ர்முகா²த்³ அஸ்²ருத்வா ந ப்ரத்யயந்|
19 ௧௯ அவர்களைப் பார்த்து: உங்களுடைய மகன் குருடனாகப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள்.
அதஏவ தே தாவப்ரு’ச்ச²ந் யுவயோ ர்யம்’ புத்ரம்’ ஜந்மாந்த⁴ம்’ வத³த²​: ஸ கிமயம்’? தர்ஹீதா³நீம்’ கத²ம்’ த்³ரஷ்டும்’ ஸ²க்நோதி?
20 ௨0 பெற்றோர் மறுமொழியாக; இவன் எங்களுடைய மகன்தான் என்றும், குருடனாகப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும்.
ததஸ்தஸ்ய பிதரௌ ப்ரத்யவோசதாம் அயம் ஆவயோ​: புத்ர ஆ ஜநேரந்த⁴ஸ்²ச தத³ப்யாவாம்’ ஜாநீவ​:
21 ௨௧ இப்பொழுது இவன் பார்வை அடைந்தது எப்படி என்று எங்களுக்குத் தெரியாது; இவனுடைய கண்களைத் திறந்தவன் யார் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள்.
கிந்த்வது⁴நா கத²ம்’ த்³ரு’ஷ்டிம்’ ப்ராப்தவாந் ததா³வாம்’ ந் ஜாநீவ​: கோஸ்ய சக்ஷுஷீ ப்ரஸந்நே க்ரு’தவாந் தத³பி ந ஜாநீவ ஏஷ வய​: ப்ராப்த ஏநம்’ ப்ரு’ச்ச²த ஸ்வகதா²ம்’ ஸ்வயம்’ வக்ஷ்யதி|
22 ௨௨ அவனுடைய பெற்றோர்கள் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனென்றால், இயேசுவைக் கிறிஸ்து என்று யாராவது அறிக்கை செய்தால் அவனை ஜெப ஆலயத்திற்குப் வெளியாக்க வேண்டும் என்று யூதர்கள் அதற்கு ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள்.
யிஹூதீ³யாநாம்’ ப⁴யாத் தஸ்ய பிதரௌ வாக்யமித³ம் அவத³தாம்’ யத​: கோபி மநுஷ்யோ யதி³ யீஸு²ம் அபி⁴ஷிக்தம்’ வத³தி தர்ஹி ஸ ப⁴ஜநக்³ரு’ஹாத்³ தூ³ரீகாரிஷ்யதே யிஹூதீ³யா இதி மந்த்ரணாம் அகுர்வ்வந்
23 ௨௩ அதினிமித்தம்: இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவனுடைய பெற்றோர்கள் சொன்னார்கள்.
அதஸ்தஸ்ய பிதரௌ வ்யாஹரதாம் ஏஷ வய​: ப்ராப்த ஏநம்’ ப்ரு’ச்ச²த|
24 ௨௪ ஆதலால் அவர்கள் குருடனாக இருந்த மனிதனை இரண்டாம்முறை அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனிதன் பாவி என்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள்.
ததா³ தே புநஸ்²ச தம்’ பூர்வ்வாந்த⁴ம் ஆஹூய வ்யாஹரந் ஈஸ்²வரஸ்ய கு³ணாந் வத³ ஏஷ மநுஷ்ய​: பாபீதி வயம்’ ஜாநீம​: |
25 ௨௫ அவன் மறுமொழியாக: அவர் பாவியா இல்லையா என்று எனக்குத் தெரியாது; நான் குருடனாக இருந்தேன், இப்பொழுது பார்க்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான்.
ததா³ ஸ உக்த்தவாந் ஸ பாபீ ந வேதி நாஹம்’ ஜாநே பூர்வாமந்த⁴ ஆஸமஹம் அது⁴நா பஸ்²யாமீதி மாத்ரம்’ ஜாநாமி|
26 ௨௬ அவர்கள் மறுபடியும் அவனைப் பார்த்து: உனக்கு என்ன செய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்.
தே புநரப்ரு’ச்ச²ந் ஸ த்வாம்’ ப்ரதி கிமகரோத்? கத²ம்’ நேத்ரே ப்ரஸந்நே (அ)கரோத்?
27 ௨௭ அவன் மறுமொழியாக: ஏற்கனவே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேட்காமல் போனீர்கள்; மறுபடியும் ஏன் கேட்கிறீர்கள்? அவருக்குச் சீடராக உங்களுக்கும் விருப்பம் இருக்கிறதா என்றான்.
தத​: ஸோவாதீ³த்³ ஏகக்ரு’த்வோகத²யம்’ யூயம்’ ந ஸ்²ரு’ணுத² தர்ஹி குத​: புந​: ஸ்²ரோதும் இச்ச²த²? யூயமபி கிம்’ தஸ்ய ஸி²ஷ்யா ப⁴விதும் இச்ச²த²?
28 ௨௮ அப்பொழுது அவர்கள் அவனைத் திட்டி: நீ அவனுடைய சீடன், நாங்கள் மோசேயினுடைய சீடர்.
ததா³ தே தம்’ திரஸ்க்ரு’த்ய வ்யாஹரந் த்வம்’ தஸ்ய ஸி²ஷ்யோ வயம்’ மூஸா​: ஸி²ஷ்யா​: |
29 ௨௯ மோசேயுடனே தேவன் பேசினார் என்று தெரியும், இவன் எங்கே இருந்து வந்தவன் என்று எங்களுக்குத் தெரியாது என்றார்கள்.
மூஸாவக்த்ரேணேஸ்²வரோ ஜகா³த³ தஜ்ஜாநீம​: கிந்த்வேஷ குத்ரத்யலோக இதி ந ஜாநீம​: |
30 ௩0 அதற்கு அந்த மனிதன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கிருந்து வந்தவர் என்று நீங்கள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமான காரியம்.
ஸோவத³த்³ ஏஷ மம லோசநே ப்ரஸந்நே (அ)கரோத் ததா²பி குத்ரத்யலோக இதி யூயம்’ ந ஜாநீத² ஏதத்³ ஆஸ்²சர்ய்யம்’ ப⁴வதி|
31 ௩௧ பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறது இல்லை என்று தெரிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தி உள்ளவனாக இருந்து அவருக்கு பிரியமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
ஈஸ்²வர​: பாபிநாம்’ கதா²ம்’ ந ஸ்²ரு’ணோதி கிந்து யோ ஜநஸ்தஸ்மிந் ப⁴க்திம்’ க்ரு’த்வா ததி³ஷ்டக்ரியாம்’ கரோதி தஸ்யைவ கதா²ம்’ ஸ்²ரு’ணோதி ஏதத்³ வயம்’ ஜாநீம​: |
32 ௩௨ பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே. (aiōn g165)
கோபி மநுஷ்யோ ஜந்மாந்தா⁴ய சக்ஷுஷீ அத³தா³த் ஜக³தா³ரம்பா⁴த்³ ஏதாத்³ரு’ஸீ²ம்’ கதா²ம்’ கோபி கதா³பி நாஸ்²ரு’ணோத்| (aiōn g165)
33 ௩௩ அவர் தேவனிடத்தில் இருந்து வராமல் இருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.
அஸ்மாத்³ ஏஷ மநுஷ்யோ யதீ³ஸ்²வராந்நாஜாயத தர்ஹி கிஞ்சித³பீத்³ரு’ஸ²ம்’ கர்ம்ம கர்த்தும்’ நாஸ²க்நோத்|
34 ௩௪ அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் வெளியே தள்ளிவிட்டார்கள்.
தே வ்யாஹரந் த்வம்’ பாபாத்³ அஜாயதா²​: கிமஸ்மாந் த்வம்’ ஸி²க்ஷயஸி? பஸ்²சாத்தே தம்’ ப³ஹிரகுர்வ்வந்|
35 ௩௫ அவனை அவர்கள் வெளியே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைப் பார்த்தபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறாயா என்றார்.
தத³நந்தரம்’ யிஹூதீ³யை​: ஸ ப³ஹிரக்ரியத யீஸு²ரிதி வார்த்தாம்’ ஸ்²ருத்வா தம்’ ஸாக்ஷாத் ப்ராப்ய ப்ரு’ஷ்டவாந் ஈஸ்²வரஸ்ய புத்ரே த்வம்’ விஸ்²வஸிஷி?
36 ௩௬ அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாக இருக்கும்படிக்கு அவர் யார் என்றான்.
ததா³ ஸ ப்ரத்யவோசத் ஹே ப்ரபோ⁴ ஸ கோ யத் தஸ்மிந்நஹம்’ விஸ்²வஸிமி?
37 ௩௭ இயேசு அவனைப் பார்த்து: நீ அவரைப் பார்த்திருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார்.
ததோ யீஸு²​: கதி²தவாந் த்வம்’ தம்’ த்³ரு’ஷ்டவாந் த்வயா ஸாகம்’ ய​: கத²ம்’ கத²யதி ஸஏவ ஸ​: |
38 ௩௮ உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.
ததா³ ஹே ப்ரபோ⁴ விஸ்²வஸிமீத்யுக்த்வா ஸ தம்’ ப்ரணாமத்|
39 ௩௯ அப்பொழுது இயேசு: பார்க்காதவர்கள் பார்க்கும்படியாகவும், பார்க்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார்.
பஸ்²சாத்³ யீஸு²​: கதி²தவாந் நயநஹீநா நயநாநி ப்ராப்நுவந்தி நயநவந்தஸ்²சாந்தா⁴ ப⁴வந்தீத்யபி⁴ப்ராயேண ஜக³தா³ஹம் ஆக³ச்ச²ம்|
40 ௪0 அவரோடு இருந்த பரிசேயர்களில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.
ஏதத் ஸ்²ருத்வா நிகடஸ்தா²​: கதிபயா​: பி²ரூஸி²நோ வ்யாஹரந் வயமபி கிமந்தா⁴​: ?
41 ௪௧ இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் குருடராக இருந்தால் உங்களுக்குப் பாவம் இருக்காது; நீங்கள் பார்க்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்களுடைய பாவம் நிலைநிற்கிறது என்றார்.
ததா³ யீஸு²ரவாதீ³த்³ யத்³யந்தா⁴ அப⁴வத தர்ஹி பாபாநி நாதிஷ்ட²ந் கிந்து பஸ்²யாமீதி வாக்யவத³நாத்³ யுஷ்மாகம்’ பாபாநி திஷ்ட²ந்தி|

< யோவான் 9 >