< யோபு 40 >

1 பின்னும் யெகோவா யோபுக்கு பதிலாக:
И продолжал Господь и сказал Иову:
2 “சர்வவல்லமையுள்ள தேவனுடன் வழக்காடி அவருக்குப் புத்தி சொல்லுகிறவன் யார்? தேவன் பேரில் குற்றம் கண்டுபிடிக்கிறவன் இவைகளுக்குப் பதில் சொல்லட்டும் என்றார்.
будет ли состязающийся со Вседержителем еще учить? Обличающий Бога пусть отвечает Ему.
3 அப்பொழுது யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக:
И отвечал Иов Господу и сказал:
4 இதோ, நான் எளியவன்; நான் உமக்கு என்ன பதில் சொல்லுவேன்; என் கையால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.
вот, я ничтожен; что буду я отвечать Тебе? Руку мою полагаю на уста мои.
5 நான் இரண்டொருமுறை பேசினேன்; இனி நான் மறுமொழி கொடுக்காமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.
Однажды я говорил, - теперь отвечать не буду, даже дважды, но более не буду.
6 அப்பொழுது யெகோவா பெருங்காற்றில் இருந்து யோபுக்கு பதில் சொன்னார்.
И отвечал Господь Иову из бури и сказал:
7 இப்போதும் மனிதனைப்போல நீ ஆடையைக்கட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு பதில் சொல்.
препояшь, как муж, чресла твои: Я буду спрашивать тебя, а ты объясняй Мне.
8 நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்வதற்காக என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?
Ты хочешь ниспровергнуть суд Мой, обвинить Меня, чтобы оправдать себя?
9 தேவனுடைய பலத்த கைகளைப்போல உனக்கு கைகளுண்டோ? அவரைப்போல இடிமுழக்கமாகச் சத்தமிடமுடியுமோ?
Такая ли у тебя мышца, как у Бога? И можешь ли возгреметь голосом, как Он?
10 ௧0 இப்போதும் நீ முக்கியத்துவத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து, மகிமையையும் கனத்தையும் அணிந்துகொண்டு,
Укрась же себя величием и славою, облекись в блеск и великолепие;
11 ௧௧ நீ உன் கோபத்தின் கடுமையை வீசி, அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்து தாழ்த்திவிட்டு,
излей ярость гнева твоего, посмотри на все гордое и смири его;
12 ௧௨ பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து, அவனைப் பணியவைத்து, துன்மார்க்கரை அவர்கள் இருக்கிற இடத்திலே மிதித்துவிடு.
взгляни на всех высокомерных и унизь их, и сокруши нечестивых на местах их;
13 ௧௩ நீ அவர்களை ஏகமாகப் புழுதியிலே புதைத்து, அவர்கள் முகங்களை மறைவான இடத்திலே கட்டிப்போடு.
зарой всех их в землю и лица их покрой тьмою.
14 ௧௪ அப்பொழுது உன் வலதுகை உனக்கு பாதுகாப்பைக் கொடுக்கும் என்று சொல்லி நான் உன்னைப் புகழுவேன்.
Тогда и Я признаю, что десница твоя может спасать тебя.
15 ௧௫ இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும்.
Вот бегемот, которого Я создал, как и тебя; он ест траву, как вол;
16 ௧௬ இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது.
вот, его сила в чреслах его и крепость его в мускулах чрева его;
17 ௧௭ அது தன் வாலைக் கேதுரு மரத்தைப்போல் நீட்டுகிறது; அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது.
поворачивает хвостом своим, как кедром; жилы же на бедрах его переплетены;
18 ௧௮ அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், அதின் கால்கள் இரும்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது.
ноги у него, как медные трубы; кости у него, как железные прутья;
19 ௧௯ அது தேவனுடைய படைப்புகளில் முதன்மையான ஒரு படைப்பு, அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார்.
это - верх путей Божиих; только Сотворивший его может приблизить к нему меч Свой;
20 ௨0 காட்டுமிருகங்கள் அனைத்தும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும்.
горы приносят ему пищу, и там все звери полевые играют;
21 ௨௧ அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், சேற்றிலும் படுத்துக்கொள்ளும்.
он ложится под тенистыми деревьями, под кровом тростника и в болотах;
22 ௨௨ தழைகளின் நிழல் அதை மூடி, நதியின் தண்ணீர்கள் அதைச் சூழ்ந்துகொள்ளும்.
тенистые дерева покрывают его своею тенью; ивы при ручьях окружают его;
23 ௨௩ இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியளவு தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்.
вот, он пьет из реки и не торопится; остается спокоен, хотя бы Иордан устремился ко рту его.
24 ௨௪ அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கமுடியும்? மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தமுடியும்?
Возьмет ли кто его в глазах его и проколет ли ему нос багром?

< யோபு 40 >