< யோபு 35 >

1 பின்னும் எலிகூ மறுமொழியாக:
以利户又说:
2 “என் நீதி தேவனுடைய நீதியைவிட உயர்ந்ததென்று நீர் சொன்னது நியாயம் என்று நினைக்கிறீரோ?
你以为有理, 或以为你的公义胜于 神的公义,
3 நான் பாவியாக இல்லாததினால் எனக்கு நன்மை என்ன? பலன் என்ன? என்று சொன்னீர்.
才说这与我有什么益处? 我不犯罪比犯罪有什么好处呢?
4 உமக்கும் உம்முடன் இருக்கிற உம்முடைய நண்பனுக்கும் நான் பதில் சொல்லுகிறேன்.
我要回答你和在你这里的朋友。
5 நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து, உம்மைவிட உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும்.
你要向天观看, 瞻望那高于你的穹苍。
6 நீர் பாவம் செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்? உம்முடைய மீறுதல்கள் அதிகமானாலும், அதினாலே அவருக்கு என்ன பாதிப்பு?
你若犯罪,能使 神受何害呢? 你的过犯加增,能使 神受何损呢?
7 நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்? அல்லது அவர் உம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்?
你若是公义,还能加增他什么呢? 他从你手里还接受什么呢?
8 உம்முடைய பாவத்தினால் உம்மைப்போன்ற மனிதனுக்கு நஷ்டமும், உம்முடைய நீதியினால் மனுமக்களுக்கு லாபமும் உண்டாகும்.
你的过恶或能害你这类的人; 你的公义或能叫世人得益处。
9 அநேகரால் பலவந்தமாக ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள்.
人因多受欺压就哀求, 因受能者的辖制便求救,
10 ௧0 பூமியின் மிருகங்களைவிட எங்களைப் புத்திமான்களும், ஆகாயத்துப் பறவைகளைவிட எங்களை ஞானவான்களுமாக்கி,
却无人说:造我的 神在哪里? 他使人夜间歌唱,
11 ௧௧ என்னை உண்டாக்கினவரும், இரவிலும் பாடல்பாட அருள்செய்கிறவருமாகிய என்னை உருவாக்கின கர்த்தராகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை.
教训我们胜于地上的走兽, 使我们有聪明胜于空中的飞鸟。
12 ௧௨ அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினாலே கூப்பிடுகிறார்கள்; அவரோ திரும்ப பதில் கொடுக்கிறதில்லை.
他们在那里, 因恶人的骄傲呼求,却无人答应。
13 ௧௩ தேவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார், சர்வவல்லமையுள்ள தேவன் அதைக் கவனிக்கமாட்டார்.
虚妄的呼求, 神必不垂听; 全能者也必不眷顾。
14 ௧௪ அவருடைய தரிசனம் உமக்குக் கிடைக்கிறதில்லை என்று நீர் சொல்லுகிறீரே; ஆனாலும் நியாயத்தீர்ப்பு அவரிடத்தில் இருக்கிறது; ஆகையால் அவருக்குக் காத்துக்கொண்டிரும்.
何况你说,你不得见他; 你的案件在他面前,你等候他吧。
15 ௧௫ இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரிக்காது; அவர் இன்னும் ஒன்றையும் குறையில்லாத முறையில் தண்டிக்கவில்லை.
但如今因他未曾发怒降罚, 也不甚理会狂傲,
16 ௧௬ ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, அறிவில்லாத வார்த்தைகளை அதிகமாகப் பேசுகிறார்” என்றான்.
所以约伯开口说虚妄的话, 多发无知识的言语。

< யோபு 35 >