< யோபு 22 >

1 அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக:
提幔人以利法回答说:
2 “ஒரு மனிதன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் நன்மையாக இருக்கிறதினால் தேவனுக்கு நன்மையாக இருப்பானோ?
人岂能使 神有益呢? 智慧人但能有益于己。
3 நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது அவருக்கு ஆதாயமாயிருக்குமோ?
你为人公义,岂叫全能者喜悦呢? 你行为完全,岂能使他得利呢?
4 அவர் உமக்குப் பயந்து உம்முடன் வழக்காடி, உம்முடன் நியாயத்திற்கு வருவாரோ?
岂是因你敬畏他 就责备你、审判你吗?
5 உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாக இருக்கிறதல்லவோ?
你的罪恶岂不是大吗? 你的罪孽也没有穷尽;
6 காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி, ஏழைகளின் ஆடைகளைப் பறித்துக்கொண்டீர்.
因你无故强取弟兄的物为当头, 剥去贫寒人的衣服。
7 மிகுந்த தாகமுள்ளவனுக்கு தண்ணீர் கொடுக்காமலும், பசித்தவனுக்கு ஆகாரம் கொடுக்காமலும் போனீர்.
困乏的人,你没有给他水喝; 饥饿的人,你没有给他食物。
8 பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிருக்கிறது; கனவான் அதில் குடியேறினான்.
有能力的人就得地土; 尊贵的人也住在其中。
9 விதவைகளை வெறுமையாக அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் கைகள் முறிக்கப்பட்டது.
你打发寡妇空手回去, 折断孤儿的膀臂。
10 ௧0 ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; திடீரென்று உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கச் செய்கிறது.
因此,有网罗环绕你, 有恐惧忽然使你惊惶;
11 ௧௧ நீர் பார்க்க முடியாமலிருக்க இருள் வந்தது, பெருவெள்ளம் உம்மை மூடுகிறது.
或有黑暗蒙蔽你, 并有洪水淹没你。
12 ௧௨ தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.
神岂不是在高天吗? 你看星宿何其高呢!
13 ௧௩ நீர்: தேவன் எப்படி அறிவார், இருளுக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?
你说: 神知道什么? 他岂能看透幽暗施行审判呢?
14 ௧௪ அவர் பார்க்காமலிருக்க மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; வானமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.
密云将他遮盖,使他不能看见; 他周游穹苍。
15 ௧௫ அக்கிரம மனிதர்கள் ஆரம்பகாலத்தில் நடந்த பாதையை கவனித்துப் பார்த்தீரோ?
你要依从上古的道吗? 这道是恶人所行的。
16 ௧௬ காலம் வருமுன்னே அவர்கள் இறந்துபோனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
他们未到死期,忽然除灭; 根基毁坏,好像被江河冲去。
17 ௧௭ தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.
他们向 神说:离开我们吧! 又说:全能者能把我们怎么样呢?
18 ௧௮ ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
哪知 神以美物充满他们的房屋; 但恶人所谋定的离我好远。
19 ௧௯ எங்கள் நிலைமை அழியாமல், அவர்களுக்கு மீதியானதையோ நெருப்பு எரித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
义人看见他们的结局就欢喜; 无辜的人嗤笑他们,
20 ௨0 குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான்.
说:那起来攻击我们的果然被剪除, 其余的都被火烧灭。
21 ௨௧ நீர் அவருடன் பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மைவரும்.
你要认识 神,就得平安; 福气也必临到你。
22 ௨௨ அவர் வாயிலிருந்து பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
你当领受他口中的教训, 将他的言语存在心里。
23 ௨௩ நீர் சர்வவல்லமையுள்ள தேவனிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அநீதியை உமது கூடாரத்திற்குத் தூரமாக்குவீர்.
你若归向全能者,从你帐棚中远除不义, 就必得建立。
24 ௨௪ அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர்.
要将你的珍宝丢在尘土里, 将俄斐的黄金丢在溪河石头之间;
25 ௨௫ அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சுத்தவெள்ளியுமாயிருப்பார்.
全能者就必为你的珍宝, 作你的宝银。
26 ௨௬ அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.
你就要以全能者为喜乐, 向 神仰起脸来。
27 ௨௭ நீர் அவரை நோக்கி விண்ணப்பம்செய்ய, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.
你要祷告他,他就听你; 你也要还你的愿。
28 ௨௮ நீர் ஒரு காரியத்தை தீர்மானித்தால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.
你定意要做何事,必然给你成就; 亮光也必照耀你的路。
29 ௨௯ மனிதர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் காப்பாற்றப்படுவார்கள்.
人使你降卑,你仍可说:必得高升; 谦卑的人, 神必然拯救。
30 ௩0 குற்றமில்லாதவனையுங்கூட விடுவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினால் அவன் விடுவிக்கப்படுவான்” என்றான்.
人非无辜, 神且要搭救他; 他因你手中清洁,必蒙拯救。

< யோபு 22 >