< எரேமியா 40 >

1 பாபிலோனுக்குக் கொண்டுபோவதற்கு எருசலேமிலும் யூதாவிலும் சிறைப்பிடித்து வைக்கப்பட்ட மக்களுக்குள் விலங்கிடப்பட்டிருந்த எரேமியாவைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் விடுதலையாக்கி ராமாவிலிருந்து அனுப்பிவிட்டபின்பு, எரேமியாவுக்கு யெகோவாவால் உண்டான வசனம்:
Nga tuh kapir ke sein ac utukla wi mwet Jerusalem ac mwet Judah su ac som mwet sruoh nu Babylonia. LEUM GOD El kaskas nu sik tukun Nebuzaradan, captain fulat lun un mwet mweun, el tuleyula in acn Ramah.
2 காவற்சேனாதிபதி எரேமியாவை வரவழைத்து, அவனை நோக்கி: உன் தேவனாகிய யெகோவா இந்த இடத்திற்கு இந்தத் தீங்கு வருமென்று சொல்லியிருந்தார்.
Captain fulat sac el pangonyu ac fahk nu sik, “LEUM GOD lom El sulkakin tari lah mwe ongoiya inge ac tuku nu fin facl se inge.
3 தாம் சொன்னபடியே யெகோவா நடப்பித்துமிருக்கிறார்; நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்து, அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்காமற்போனீர்கள்; ஆகையால் உங்களுக்கு இந்தக் காரியம் வந்தது.
Na inge El oru oana ma El fahk. Ma inge nukewa sikyak ke sripen mwet lom orekma koluk lain LEUM GOD ac tia aksol.
4 இப்போதும், இதோ, உன் கைகளில் இடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னுடன் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாகத் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன்; என்னுடன் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாகத் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்திற்குப்போக உனக்கு நன்மையும் ஒழுங்குமாகத் தோன்றுகிறதோ அவ்விடத்திற்குப் போ என்றான்.
Inge, nga ac eisla sein liki poum ac aksukosokyekomla. Kom fin lungse, kom ku in wiyu som nu Babylonia, ac nga fah karingin kom. Tusruktu kom fin tia lungse wiyu som, na kom ku in sifacna sulela kutena acn kom lungse muta we in facl se inge nufon.”
5 அவன் இன்னும் போகாமலிருக்கும்போது, அவன் இவனை நோக்கி: நீ பாபிலோன் ராஜா யூதா பட்டணங்களின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானுடைய மகனாகிய அகீக்காமின் மகனான கெதலியாவினிடத்திற்குத் திரும்பிப்போய், அவனுடன் மக்களுக்குள்ளே தங்கியிரு; இல்லாவிட்டால், எவ்விடத்திற்குப் போக உனக்கு சரியென்று தோன்றுகிறதோ, அவ்விடத்திற்குப் போ என்று சொல்லி, காவற்சேனாதிபதி அவனுக்கு வழிச்செலவையும் வெகுமதியையும் கொடுத்து அவனை அனுப்பிவிட்டான்.
Na ke nga pahtlac in topkol, Nebuzaradan el fahk, “Kom fin lungse mutana inge, kom ku in folokla nu yorol Gedaliah, wen natul Ahikam su ma natul Shaphan, su tokosra lun Babylonia el tuh sulella elan governor ke siti lun Judah. Kom ku in muta yorol inmasrlon mwet uh, ku kom ku in som nu kutena acn kom lungse muta we.” Na el se nu sik mwe kite se ac mwe mongo nga in us, ac filiyula in som.
6 அப்படியே எரேமியா மிஸ்பாவுக்கு அகீக்காமின் மகனாகிய கெதலியாவினிடத்தில் போய், தேசத்தில் மீதியான மக்களுக்குள் அவனுடன் தங்கியிருந்தான்.
Na nga folokla nu yorol Gedaliah in acn Mizpah, ac muta inmasrlon mwet ma lula in facl sac.
7 பாபிலோன் ராஜா அகீக்காமின் மகனாகிய கெதலியாவை தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும், பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோகாத குடிமக்களில் ஏழைகளான ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் அவனுடைய கண்காணிப்புக்கு ஒப்புவித்தான் என்றும், வெளியிலிருக்கிற போர் வீரர்கள் அனைவரும் அவர்களுடைய மனிதரும் கேட்டபோது,
Kutu sin mwet fulat ac mwet mweun lun mwet Judah su tia eisalosyang nu inpoun mwet Babylonia, elos lohngak lah tokosra Babylonia el srisrngilya Gedaliah elan governor lun facl Judah, ac sang elan leumi mwet nukewa su tia utukla nu Babylonia. Mwet inge pa sukasrup oemeet in facl sac.
8 அவர்கள் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; யாரெனில், நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலும், கரேயாவின் மகன்களாகிய யோகனானும், யோனத்தானும், தன்கூமேத்தின் மகனாகிய செராயாவும், நெத்தோபாத்தியனாகிய ஏப்பாயின் மகன்களும், மாகாத்தியனான ஒருவனுடைய மகனாகிய யெசனியாவும் ஆகிய இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களுமே.
Ouinge Ishmael wen natul Nathaniah, Johanan wen natul Kareah, Seraiah wen natul Tanhumeth, ac wen ekasr natul Ephai mwet Netophah, ac Jezaniah mwet Maacah, wi mwet lalos elos som nu yorol Gedaliah in acn Mizpah.
9 அப்பொழுது சாப்பானுடைய மகனாகிய அகீக்காமின் மகன் கெதலியா அவர்களையும் அவர்கள் மனிதரையும் நோக்கி: நீங்கள் கல்தேயரை பணிய பயப்படவேண்டாம், நீங்கள் தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவை பணியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும்.
Na Gedaliah el fahk nu selos, “Nga fahk na pwaye nu suwos lah kowos tia enenu in sangeng in filikowosyang nu sin mwet Babylonia. Kowos in oakwuki in facl se inge ac orekma nu sin tokosra lun Babylonia, ac ma nukewa ac fah wo nu suwos.
10 ௧0 நானோவெனில், இதோ, நம்மிடத்தில் வருகிற கல்தேயரிடத்தில் பணியும்படி மிஸ்பாவிலே குடியிருக்கிறேன்; நீங்களோ போய், திராட்சைரசத்தையும் பழங்களையும் எண்ணெயையும் சேர்த்து, உங்கள் பாண்டங்களில் வைத்து, உங்கள் வசமாயிருக்கிற ஊர்களில் குடியிருங்கள் என்று வாக்குக்கொடுத்துச் சொன்னான்.
Ac funu nga, nga ac mutana Mizpah, ac nga fah aol kowos in sramsram nu sin mwet Babylonia ke pacl elos ac tuku nu yen uh. Na kowos in folokla nu in acn kowos muta we, ac orani kosrani lowos ke wain, fokinsak, ac oil in olive, ac karinganang ke nien filma lowos.”
11 ௧௧ மோவாபிலும் அம்மோன் மக்களிடத்திலும் ஏதோமிலும் எல்லா தேசங்களிலும் இருக்கிற யூதரும், பாபிலோன் ராஜா யூதாவில் சிலர் மீதியாயிருக்கக் கட்டளையிட்டானென்றும், சாப்பானுடைய மகனாகிய அகீக்காமின் மகனான கெதலியாவை அவர்கள்மேல் அதிகாரியாக்கினான் என்றும், கேட்டபோது,
In pacl sac pacna, mwet Israel nukewa su muta Moab, Ammon, Edom ac kutu pac facl saya, lohngak lah tokosra lun Babylonia el lela kutu sin mwet Israel in mutana in facl Judah, ac el srisrngilya Gedaliah elan governor lalos.
12 ௧௨ எல்லா யூதரும் தாங்கள் துரத்தப்பட்ட எல்லா இடங்களிலுமிருந்து, யூதா தேசத்தில் கெதலியாவினிடத்தில் மிஸ்பாவுக்கு வந்து, திராட்சைரசத்தையும் பழங்களையும் அதிகமாகச் சேர்த்து வைத்தார்கள்.
Ke ma inge elos tuku liki acn elos fahsrelik muta we, ac folokla nu Judah. Elos som nu yorol Gedaliah in acn Mizpah, na elos usani wain ac fokinsak puspis.
13 ௧௩ அப்பொழுது கரேயாவின் மகனாகிய யோகனானும் வெளியில் இருந்த எல்லா போர் வீரர்களும் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்து,
Tukun ma inge, Johanan ac mwet kol lun mwet mweun su tia wi srasrapo nu sin mwet Babylonia elos tuku nu yorol Gedaliah in acn Mizpah
14 ௧௪ உம்மைக் கொன்றுபோடுவதற்கு, அம்மோன் மக்களின் ராஜாவாகிய பாலிஸ் என்பவன், நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலை அனுப்பினானென்பதை நீர் அறியவில்லையோ என்றார்கள்; ஆனாலும் அகீக்காமின் மகனாகிய கெதலியா அவர்கள் வார்த்தையை நம்பவில்லை.
ac fahk nu sel, “Ya kom etu lah Tokosra Baalis lun Ammon el supwalma Ishmael elan akmusekomi?” Tusruktu Gedaliah el tiana lulalfongi.
15 ௧௫ பின்னும் கரேயாவின் மகனாகிய யோகனான் மிஸ்பாவிலே கெதலியாவோடே இரகசியமாகப் பேசி: நான் போய் ஒருவரும் அறியாமல் நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலை வெட்டிப்போட அனுமதிக்கவேண்டும்; உம்மிடத்தில் சேர்ந்த யூதரெல்லாரும் சிதறுண்டுபோகவும் யூதாவில் மீதியானவர்கள் அழியவும் அவன் உம்மை ஏன் கொன்றுபோடவேண்டும் என்றான்.
Na Johanan el tuku nu yorol in lukma ac fahk nu sel, “Lela nga in som unilya Ishmael, ac wangin mwet ac etu lah su orala. Efu ku in filfilla elan akmusekomi? Ac oru mwet Jew nukewa su tukeni muta raunikomla inge in kaingelik, ac ma se inge ac pwanang ongoiya nu fin mwet nukewa su lula muta in acn Judah.”
16 ௧௬ ஆனாலும் அகீக்காமின் மகனாகிய கெதலியா கரேயாவின் மகனாகிய யோகனானை நோக்கி: நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே; இஸ்மவேலின்மேல் நீ பொய் சொல்லுகிறாய் என்றான்.
Tusruktu Gedaliah el topuk, “Nimet oru ma sacn! Tia pwaye ma kom fahk kacl Ishmael!”

< எரேமியா 40 >