< யாக்கோபு 4 >

1 உங்களுக்குள்ளே வாக்குவாதங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்களுடைய அவயவங்களிலே போர்செய்கிற ஆசைகளினாலல்லவா?
あなた方の間の争いや闘いはどこから来るのですか。あなた方の肢体の中で戦う,快楽に対する欲情から来るのではありませんか。
2 நீங்கள் ஆசைப்பட்டும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாக இருந்தும், அடையக்கூடாமல் போகிறீர்கள்; நீங்கள் சண்டையும், யுத்தமும் செய்தும், நீங்கள் விண்ணப்பம்செய்யாமல் இருக்கிறதினாலே, உங்களுக்குக் கிடைப்பதில்லை.
あなた方は渇望しますが,持っていません。人殺しをし,むやみに欲しがりますが,獲得できません。闘ったり争ったりします。あなた方が持っていないのは,求めないからです。
3 நீங்கள் விண்ணப்பம்செய்தும், உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டும் என்று தவறான நோக்கத்தோடு விண்ணப்பம்செய்கிறதினால், பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்.
求めても受けていないのは,それを自分の快楽のために使おうとして,間違った動機で求めるからです。
4 விபசாரக்காரர்களே, விபசாரிகளே, உலக நட்பு தேவனுக்கு விரோதமான பகையென்று உங்களுக்குத் தெரியாதா? ஆகவே, உலகத்திற்கு நண்பனாக இருக்கவிரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.
姦淫を犯す者たち,また姦淫を犯す女たちよ,あなた方は世との交友が神との敵対であることを知らないのですか。それゆえ,だれでもこの世の友になりたいと思っている人は,自分を神の敵としているのです。
5 நம்மில் வாசமாக இருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாக இருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாகச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?
それともあなた方は,「わたしたちのうちに住んでいる霊は,ねたむほどに慕っている」と聖書が述べているのは,無意味なことだと思っているのですか。
6 அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.
しかし,その方はさらに豊かな恵みを与えてくださるのです。それゆえ,こう言われています。「神は高慢な者に立ち向かい,謙そんな者に恵みをお与えになる」。
7 ஆகவே, தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
ですから,神に服しなさい。しかし悪魔に立ち向かいなさい。そうすればあなた方から逃げ去るでしょう。
8 தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடம் சேருவார். பாவிகளே, உங்களுடைய கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்களுடைய இருதயங்களைப் பரிசுத்தம் செய்யுங்கள்.
神に近づきなさい。そうすればあなた方に近づいてくださるでしょう。罪人たちよ,あなた方の手を清めなさい。二心の者たちよ,あなた方の心を清めなさい。
9 நீங்கள் துயரப்பட்டுப் புலம்பி அழுங்கள்; உங்களுடைய சிரிப்பு புலம்பலாகவும், உங்களுடைய சந்தோஷம் துயரமாகவும் மாறட்டும்.
嘆き,悲しみ,泣きなさい。あなた方の笑いを悲しみに,あなた方の喜びを憂いに変えなさい。
10 ௧0 கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.
主のみ前で自分を低くしなさい。そうすればあなた方を高くしてくださるでしょう。
11 ௧௧ சகோதரர்களே, ஒருவருக்கொருவர் விரோதமாகப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாகப் பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்தினால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாக இல்லாமல், அதற்கு நியாயாதிபதியாக இருப்பாய்.
兄弟たち,互いを悪く言ってはいけません。兄弟を悪く言ったり,自分の兄弟を裁いたりする者は,律法を悪く言い,律法を裁いているのです。そして,もし律法を裁いているなら,あなたは律法の実行者ではなく,裁き手です。
12 ௧௨ நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தவரும் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?
立法者はただひとり,救うことも滅ぼすこともできる方です。それなのに,ほかの人を裁こうとするあなたは,いったい何者なのですか。
13 ௧௩ மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இந்த பட்டணத்திற்குச் சென்று, அங்கே ஒரு வருடம் தங்கி, வியாபாரம் செய்து, பணம் சம்பாதிப்போம் என்று சொல்லுகிறவர்களே, கேளுங்கள்.
さあ,「今日か明日,あの町へ行き,一年間そこで過ごして,商売をし,金もうけをしよう」と言っている者たちよ。
14 ௧௪ நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்களுடைய ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலம்தோன்றி, பின்பு காணாமற்போகிற புகையைப்போல இருக்கிறதே.
一方では,あなた方は明日自分の命がどうなるかを知らないのです。というのは,あなた方の命はどんなものなのですか。あなた方は,少しの間現われて,やがて消え去ってしまう霧にすぎないのです。
15 ௧௫ ஆதலால்: தேவனுக்கு விருப்பமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.
あなた方は,「もし主のご意志であれば,わたしたちは生きていて,あのことやこのことをするでしょう」と言うべきなのです。
16 ௧௬ இப்பொழுது உங்களுடைய பிடிவாதங்களில் பெருமைகொள்கிறீர்கள்; இப்படிப்பட்ட பெருமையெல்லாம் தீமையாக இருக்கிறது.
しかし今,あなた方は自分の自慢を誇りとしています。そうした自慢はすべて悪いことです。
17 ௧௭ ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாக இருந்தும், அதைச் செய்யாமல்போனால், அது அவனுக்குப் பாவமாக இருக்கும்.
それゆえ,善をなすことを知っていながら,それを行なわないなら,それはその人にとって罪なのです。

< யாக்கோபு 4 >