< ஏசாயா 43 >

1 இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய யெகோவா சொல்கிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பெயர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.
And now thus says the Lord who created you, O Jacob, and who formed you, O Israel: Do not be afraid. For I have redeemed you, and I have called you by your name. You are mine.
2 நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ நெருப்பில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; நெருப்புத்தழல் உன்னை சுட்டெரிக்காது.
When you pass through the waters, I will be with you, and the rivers will not cover you. When you walk through fire, you will not be burned, and the flames will not scorch you.
3 நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய யெகோவா; உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன்.
For I am the Lord your God, the Holy One of Israel, your Savior. I have presented Egypt as your atonement, Ethiopia and Seba on your behalf.
4 நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனிதர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக மக்களையும் கொடுப்பேன்.
Since then, you have become honorable in my eyes, and glorious. I have loved you, and I will present men on behalf of you, and people on behalf of your life.
5 பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரச்செய்து, உன்னை மேற்கிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பேன்.
Fear not, for I am with you. I will lead your offspring from the East, and I will gather you from the West.
6 நான் வடக்கை நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் மகன்களையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் மகள்களையும்,
I will say to the North, “Release him,” and to the South, “Do not turn him away.” Bring my sons from far away, and my daughters from the ends of the earth.
7 நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் பெயர் சூட்டப்பட்ட அனைவரையும் கொண்டுவா என்பேன்.
And each one who calls upon my name, I have created for my glory. I have formed him, and I have made him.
8 கண்களிருந்தும் குருடர்களாயிருக்கிற மக்களையும், காதுகளிருந்தும் செவிடர்களாயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரச்செய்யுங்கள்.
Lead forth the people who are blind and have eyes, who are deaf and have ears.
9 சகல தேசங்களும் ஏகமாகச் சேர்ந்துகொண்டு, சகல மக்களும் கூடிவரட்டும்; இதை அறிவித்து, முந்தி சம்பவிப்பவைகளை நமக்குத் தெரிவிக்கிறவன் யார்? கேட்டு உண்மையென்று சொல்லக்கூடும்படிக்கு, அவர்கள் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவந்து நேர்மையானவர்களாக விளங்கட்டும்.
All the nations have been assembled together, and the tribes have been collected. Who among you will announce this, and who will cause us to listen to the things that are first? Let them present their witnesses. Let them act justly, and listen, and say: “It is true.”
10 ௧0 நானே அவரென்று நீங்கள் உணர்ந்து என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் ஊழியக்காரனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று யெகோவா சொல்கிறார்; எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை.
You are my witnesses, says the Lord, and you are my servant, whom I have chosen, so that you may know, and may believe in me, and so that you may understand that I am the same. Before me, there was no god formed, and after me there will be none.
11 ௧௧ நான், நானே யெகோவா; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை.
I am. I am the Lord. And there is no savior apart from me.
12 ௧௨ நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கச்செய்தேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று யெகோவா சொல்கிறார்.
I have announced, and I have saved. I have caused it to be heard. And there was no stranger among you. You are my witnesses, says the Lord, and I am God.
13 ௧௩ நாள் உண்டாகாததற்குமுன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?
And from the beginning, I am the same. And there is no one who can rescue from my hand. I act, and who can turn it aside?
14 ௧௪ நான் உங்களுக்காக அரண்களெல்லாம் இடிந்துவிழவும், கல்தேயர்கள் படகுகளிலிருந்து அலறவும் செய்யத்தக்கவர்களைப் பாபிலோனுக்கு அனுப்பினேனென்று, உங்கள் மீட்பரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய யெகோவா சொல்கிறார்.
Thus says the Lord, your Redeemer, the Holy One of Israel: For your sake, I sent to Babylon, and tore down all their bars, with the Chaldeans who glory in their ships.
15 ௧௫ நானே உங்கள் பரிசுத்தராகிய யெகோவாவும், இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர்.
I am the Lord, your Holy One, the Creator of Israel, your King.
16 ௧௬ கடலிலே வழியையும் திரளான தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்கி,
Thus says the Lord, who gave you a way through the sea and a path through the torrent of waters,
17 ௧௭ இரதங்களையும் குதிரைகளையும் படைகளையும் பராக்கிரமசாலிகளையும் புறப்படச்செய்து, அவைகள் எழுந்திராதபடிக்கு ஒருமித்து விழுந்துகிடக்கவும், ஒரு திரி அணைகிறதுபோல் அவைகள் அணைந்துபோகவும்செய்கிற யெகோவா சொல்கிறதாவது:
who led out the chariot and the horse, the column of robust troops. They went to sleep together, and they will not arise. They have been crushed like flax, and they have been extinguished.
18 ௧௮ முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; முந்தினமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்.
You need not call to mind the past, nor consider the things of antiquity.
19 ௧௯ இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்திரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
Behold, I am accomplishing new things. And presently, they will spring forth. With certainty, you will know them. I will make a way in the desert, and rivers in an impassible place.
20 ௨0 நான் தெரிந்துகொண்ட என் மக்களின் தாகத்திற்கு வனாந்திரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், ஆந்தைக் குஞ்சுகளும் என்னைக் கனப்படுத்தும்.
The wild beasts of the field will glorify me, with the serpents and the ostriches. For I have brought waters to the desert, rivers to inaccessible places, in order to give drink to my people, to my elect.
21 ௨௧ இந்த மக்களை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.
This is the people whom I have formed for myself. They will speak my praise.
22 ௨௨ ஆனாலும் யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை; இஸ்ரவேலே, நீ என்னைக்குறித்து மனம்சலித்துப்போனாய்.
But you have not called upon me, O Jacob, nor have you struggled for me, O Israel.
23 ௨௩ உன் ஆடுகளைத் தகனபலிகளாக நீ எனக்குச் செலுத்தவில்லை; உன் பலிகளாலே நீ என்னைக் கனப்படுத்தவுமில்லை; காணிக்கைகளைச் செலுத்தும்படி நான் உன்னைச் சங்கடப்படுத்தாமலும், தூபங்காட்டும்படி உன்னை வருத்தப்படுத்தாமலும் இருந்தேன்.
You have not offered me the ram of your holocaust, and you have not glorified me with your victims. I have not burdened you with oblations, nor have I wearied you with incense.
24 ௨௪ நீ எனக்குப் பணங்களால் சுகந்தப்பட்டையைக் கொள்ளாமலும், உன் பலிகளின் கொழுப்பினால் என்னைத் திருப்தியாக்காமலும், உன் பாவங்களினால் என்னைச் சங்கடப்படுத்தி, உன் அக்கிரமங்களினால் என்னை வருத்தப்படுத்தினாய்.
You have bought me no sweet cane with money, and you have not inebriated me with the fat of your victims. Yet truly, you have burdened me with your sins; you have wearied me with your iniquities.
25 ௨௫ நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினைக்காமலும் இருப்பேன்.
I am. I am the very One who wipes away your iniquities for my own sake. And I will not remember your sins.
26 ௨௬ நாம் ஒருவரோடொருவர் வழக்காடும்படி எனக்கு நினைப்பூட்டு; நீ நீதிமானாக விளங்கும்படி உன் காரியத்தைச் சொல்.
Call me to mind, and let us go to judgment together. If you have anything to justify yourself, explain it.
27 ௨௭ உன் ஆதிதகப்பன் பாவம்செய்தான்; உனக்கு முன்னின்று பேசுகிறவர்களும் எனக்கு விரோதமாகத் துரோகம்செய்தார்கள்.
Your first father sinned, and your interpreters have betrayed me.
28 ௨௮ ஆகையால், நான் பரிசுத்த ஸ்தலத்தின் தலைவர்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, யாக்கோபைச் சாபத்திற்கும், இஸ்ரவேலை நிந்தனைக்கும் ஒப்புக்கொடுப்பேன்.
And so, I have defiled the holy leaders. I have handed over Jacob to slaughter, and Israel to calumny.

< ஏசாயா 43 >