< ஏசாயா 2 >

1 ஆமோத்சின் மகனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும்குறித்துக் கண்ட காட்சி.
Słowo, które widział Izajasz, syn Amosa, dotyczące Judy i Jerozolimy.
2 வரும்நாட்களில் யெகோவாவுடைய ஆலயமாகிய மலை, மலைகளின் உச்சியில் அமைக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாக உயர்த்தப்படும்; எல்லா தேசத்தார்களும் அதற்கு ஓடிவருவார்கள்.
Stanie się w dniach ostatecznych, że góra domu PANA będzie utwierdzona na szczycie gór i wywyższona ponad pagórki; i wszystkie narody popłyną do niej.
3 திரளான மக்கள் புறப்பட்டுவந்து: நாம் யெகோவாவின் மலைக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்; நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வசனமும் வெளிப்படும்.
I pójdzie wiele ludów, i powie: Chodźcie, wstąpmy na górę PANA, do domu Boga Jakuba; on będzie nas uczył swoich dróg, a my będziemy kroczyli jego ścieżkami. Z Syjonu bowiem wyjdzie prawo, a słowo PANA z Jerozolimy.
4 அவர் தேசங்களிடையே நியாயந்தீர்த்து, திரளான மக்களின் வாக்குவாதங்களைத் தீர்த்துவைப்பார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் மாற்றுவார்கள்; நாட்டிற்கு விரோதமாக நாடு பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் போர்ப்பயிற்சி எடுப்பதுமில்லை.
On będzie sądził wśród narodów i karcił wielu ludzi. I przekują swe miecze na lemiesze, a swoje włócznie na sierpy. Naród przeciw narodowi nie podniesie już miecza i nie będą się już ćwiczyć do wojny.
5 யாக்கோபின் வம்சத்தாரே, யெகோவாவின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்.
Domu Jakuba, chodźcie, postępujmy w światłości PANA.
6 யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய மக்களைக் கைவிட்டீர்; அவர்கள் கிழக்குத் நாடுகளின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தர்களைப்போல் நாள்பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய மக்கள்மேல் பிரியப்படுகிறார்களே.
Ale ty opuściłeś swój lud, dom Jakuba, gdyż pełen jest [obrzydliwości] wschodu i [są oni] wróżbitami jak Filistyni, a kochają się w cudzych synach.
7 அவர்களுடைய தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்களுடைய பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்களுடைய தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்களுடைய இரதங்களுக்கும் முடிவில்லை.
Ich ziemia jest pełna srebra i złota i nie ma końca ich skarbom. Ich ziemia jest pełna koni i nie ma końca ich rydwanom.
8 அவர்களுடைய தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது; தங்கள் கைகளாலும், தங்கள் விரல்களாலும் உருவாக்கிய சிலைகளைப் பணிந்துகொள்கிறார்கள்.
Ich ziemia jest pełna bożków, [oni] oddają pokłon dziełom własnych rąk, które wykonały ich palce.
9 சிறியவனும், பெரியவனும் அவமானப்படுத்தப்படுகிறார்கள்; ஆகையால் அவர்களுக்கு மன்னியாதிருப்பீராக.
Kłania się [przed nimi] prosty człowiek, poniża się też wielki; nie przebaczaj im.
10 ௧0 யெகோவாவின் பயங்கரத்திற்கும், அவருடைய மகிமையின் புகழ்ச்சிக்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள்.
Wejdź w skałę i ukryj się w prochu ze strachu przed PANEM i przed chwałą jego majestatu.
11 ௧௧ மனிதர்களின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனிதர்களின் வீணான பிடிவாதமும் தணியும்; யெகோவா ஒருவரே நியாயத்தீர்ப்பு நாளில் உயர்ந்திருப்பார்.
Wyniosłe oczy człowieka ukorzą się, ludzka pycha będzie poniżona, a sam tylko PAN zostanie wywyższony w tym dniu.
12 ௧௨ அனைத்தும் தாழ்த்தப்படுவதற்காக சேனைகளுடைய யெகோவாவின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும்,
[Przyjdzie] bowiem dzień PANA zastępów przeciwko każdemu pysznemu i wyniosłemu, i przeciwko każdemu wywyższonemu, a [każdy] zostanie poniżony;
13 ௧௩ லீபனோனிலுள்ள உயரமும் உயர்ந்ததுமான எல்லாக் கேதுருக்களின்மேலும், பாசானிலுள்ள எல்லாக் கர்வாலி மரங்களின்மேலும்,
Przeciwko wszystkim cedrom Libanu, które są wysokie a wyniosłe, i przeciwko wszystkim dębom Baszanu;
14 ௧௪ உன்னதமான எல்லா மலைகளின்மேலும், உயரமான எல்லா மலைகளின்மேலும்,
Przeciwko wszystkim wysokim górom i przeciwko wszystkim wyniosłym pagórkom;
15 ௧௫ உயர்ந்த எல்லாக் கோபுரத்தின்மேலும், பாதுகாப்பான எல்லா மதிலின்மேலும்,
Przeciwko każdej wysokiej wieży i przeciwko każdemu murowi obronnemu;
16 ௧௬ தர்ஷீசின் கப்பல்கள் எல்லாவற்றின்மேலும், அனைத்துச் சித்திர விநோதங்களின்மேலும் வரும்.
Przeciwko wszystkim okrętom Tarszisz i przeciwko wszelkiemu pięknemu malarstwu.
17 ௧௭ அப்பொழுது மனிதர்களின் மேட்டிமை தாழ்ந்து, மனிதர்களின் வீறாப்புத் தணியும்; யெகோவா ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.
I wyniosłość człowieka będzie ugięta i pycha ludzka będzie poniżona, a sam tylko PAN zostanie wywyższony w tym dniu.
18 ௧௮ சிலைகள் முற்றிலுமாக ஒழிந்துபோம்.
A bożki zniszczy doszczętnie.
19 ௧௯ பூமியைத் தத்தளிக்கச்செய்யக் யெகோவா எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப் புகழ்ச்சிக்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும், பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்.
Wtedy wejdą do jaskiń skalnych i do jam podziemnych ze strachu przed PANEM i przed chwałą jego majestatu, gdy powstanie, by przerazić ziemię.
20 ௨0 பூமியைத் தத்தளிக்கச்செய்யக் யெகோவா எழும்பும் அந்நாளிலே, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப் புகழ்ச்சிக்கும் விலகி, கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துகளிலும் புகுந்துகொள்ளும்படிக்கு,
W tym dniu człowiek wrzuci kretom i nietoperzom swoje bożki srebrne i złote, które uczynił, aby oddawać im pokłon;
21 ௨௧ மனிதன் பணிந்துகொள்ளத் தனக்கு உண்டாக்கியிருந்த தன் வெள்ளி சிலைகளையும், தன் பொன் சிலைகளையும், மூஞ்சூறு எலிகளுக்கும் வெளவால்களுக்கும் எறிந்துவிடுவான்.
I wejdzie w szczeliny skalne i na szczyty opok ze strachu przed PANEM i przed chwałą jego majestatu, gdy powstanie, aby przerazić ziemię.
22 ௨௨ நாசியிலே சுவாசமுள்ள மனிதனை நம்புவதை விட்டுவிடுங்கள்; மதிக்கப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.
Przestańcie [polegać] na człowieku, którego tchnienie [jest] w jego nozdrzach. Za co bowiem ma być uznany?

< ஏசாயா 2 >