< ஏசாயா 16 >

1 தேசாதிபதிக்குச் செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை நீங்கள் சேலாபட்டணம் முதல் வனாந்திரம்வரை சேர்த்து மகளாகிய சீயோனின் மலைக்கு அனுப்புங்கள்.
שִׁלְחוּ־כַר מֹשֵֽׁל־אֶרֶץ מִסֶּלַע מִדְבָּרָה אֶל־הַר בַּת־צִיּֽוֹן׃
2 இல்லாவிட்டால் கூட்டைவிட்டுத் துரத்தப்பட்டு அலைகிற குருவியைப்போல மகள்களாகிய மோவாப் அர்னோன் நதியின் துறைகளிடத்திலிருப்பார்கள்.
וְהָיָה כְעוֹף־נוֹדֵד קֵן מְשֻׁלָּח תִּֽהְיֶינָה בְּנוֹת מוֹאָב מַעְבָּרֹת לְאַרְנֽוֹן׃
3 நீ ஆலோசனைசெய்து, நியாயம் செய்து, மத்தியானத்திலே உன் நிழலை இரவைப்போலாக்கி, துரத்தப்பட்டவர்களை மறைத்துக்கொள், ஓடிவருகிறவர்களைக் காட்டிக்கொடுக்காதே.
(הביאו) [הָבִיאִי] עֵצָה עֲשׂוּ פְלִילָה שִׁיתִי כַלַּיִל צִלֵּךְ בְּתוֹךְ צׇהֳרָיִם סַתְּרִי נִדָּחִים נֹדֵד אַל־תְּגַלִּֽי׃
4 மோவாபே, துரத்திவிடப்பட்ட என் மக்கள் உன்னிடத்தில் தங்கட்டும்; அழிக்கிறவனுக்குத் தப்ப அவர்களுக்கு அடைக்கலமாயிரு; ஒடுக்குகிறவன் இல்லாதேபோவான்; அழிவு ஒழிந்துபோம்; மிதிக்கிறவர்கள் தேசத்தில் இல்லாதபடி அழிந்துபோவார்கள்.
יָגוּרוּ בָךְ נִדָּחַי מוֹאָב הֱוִי־סֵתֶר לָמוֹ מִפְּנֵי שׁוֹדֵד כִּֽי־אָפֵס הַמֵּץ כָּלָה שֹׁד תַּמּוּ רֹמֵס מִן־הָאָֽרֶץ׃
5 கிருபையினாலே சிங்காசனம் நிலைப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாக நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாக உண்மையோடே வீற்றிருப்பார்.
וְהוּכַן בַּחֶסֶד כִּסֵּא וְיָשַׁב עָלָיו בֶּאֱמֶת בְּאֹהֶל דָּוִד שֹׁפֵט וְדֹרֵשׁ מִשְׁפָּט וּמְהִר צֶֽדֶק׃
6 மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகங்காரத்தையும், அவன் கோபத்தையும் குறித்துக் கேட்டோம்; அவன் மிகவும் பெருமைக்காரன்; ஆனாலும் அவன் வீம்பு செல்லாது.
שָׁמַעְנוּ גְאוֹן־מוֹאָב גֵּא מְאֹד גַּאֲוָתוֹ וּגְאוֹנוֹ וְעֶבְרָתוֹ לֹא־כֵן בַּדָּֽיו׃
7 ஆகையால், மோவாபியர்கள் ஒருவருக்காக ஒருவர் அலறுவார்கள், எல்லோரும் ஒருமித்து அலறுவார்கள்; கிராரேசேத் ஊரின் அஸ்திபாரங்கள் மக்களுக்காக பெருமூச்சு விடுவார்கள்.
לָכֵן יְיֵלִיל מוֹאָב לְמוֹאָב כֻּלֹּה יְיֵלִיל לַאֲשִׁישֵׁי קִיר־חֲרֶשֶׂת תֶּהְגּוּ אַךְ־נְכָאִֽים׃
8 எஸ்போன் ஊர் வயல்கள் வாடிப்போனது; சீப்மா ஊர் திராட்சைச்செடியின் நல்ல கொடிகளைத் தேசங்களின் அதிபதிகள் நறுக்கிப்போட்டார்கள்; அவைகள் யாசேர்வரை சென்று வனாந்திரத்தில் படர்ந்திருந்தது; அவைகளின் கொடிகள் நீண்டு கடலுக்கு அடுத்த கரைவரையில் இருந்தது.
כִּי שַׁדְמוֹת חֶשְׁבּוֹן אֻמְלָל גֶּפֶן שִׂבְמָה בַּעֲלֵי גוֹיִם הָלְמוּ שְׂרוּקֶּיהָ עַד־יַעְזֵר נָגָעוּ תָּעוּ מִדְבָּר שְׁלֻחוֹתֶיהָ נִטְּשׁוּ עָבְרוּ יָֽם׃
9 ஆகையால் யாசேருக்காக அழுததுபோல, சீப்மா ஊர் திராட்சைச்செடிக்காகவும் மிகவும் அழுவேன்; எஸ்போனே, எலெயாலெயே, உனக்கு என் கண்ணீரைப் பாய்ச்சுவேன்; உன் வசந்தகாலத்துப் பழங்களுக்காகவும், உன் திராட்சைப்பழ அறுப்புக்காகவும் ஆரவாரிக்கிற சந்தோஷ சத்தம் விழுந்துபோனது.
עַל־כֵּן אֶבְכֶּה בִּבְכִי יַעְזֵר גֶּפֶן שִׂבְמָה אֲרַיָּוֶךְ דִּמְעָתִי חֶשְׁבּוֹן וְאֶלְעָלֵה כִּי עַל־קֵיצֵךְ וְעַל־קְצִירֵךְ הֵידָד נָפָֽל׃
10 ௧0 பயிர்வெளியிலிருந்து சந்தோஷமும் களிப்பும் இல்லாமல் போனது; திராட்சைத்தோட்டங்களில் பாடலுமில்லை ஆர்ப்பரிப்புமில்லை; ஆலையில் இரசத்தை மிதிக்கிறவனுமில்லை; சந்தோஷ ஆரவாரத்தை ஓயச்செய்தேன்.
וְנֶאֱסַף שִׂמְחָה וָגִיל מִן־הַכַּרְמֶל וּבַכְּרָמִים לֹֽא־יְרֻנָּן לֹא יְרֹעָע יַיִן בַּיְקָבִים לֹא־יִדְרֹךְ הַדֹּרֵךְ הֵידָד הִשְׁבַּֽתִּי׃
11 ௧௧ ஆகையால் மோவாபுக்காக என் குடல்களும், கிராரேசினுக்காக என் உள்ளமும் சுரமண்டலத்தைப்போல தொனிக்கிறது.
עַל־כֵּן מֵעַי לְמוֹאָב כַּכִּנּוֹר יֶהֱמוּ וְקִרְבִּי לְקִיר חָֽרֶשׂ׃
12 ௧௨ மோவாப் மேடைகளின்மேல் சலித்துப்போனான் என்று காணப்படும்போது, பிரார்த்தனைசெய்யத் தன் பரிசுத்த இடத்திலே நுழைவான்; ஆனாலும் பயனடையமாட்டான்.
וְהָיָה כִֽי־נִרְאָה כִּֽי־נִלְאָה מוֹאָב עַל־הַבָּמָה וּבָא אֶל־מִקְדָּשׁוֹ לְהִתְפַּלֵּל וְלֹא יוּכָֽל׃
13 ௧௩ மோவாபைக்குறித்து அக்காலத்திலே யெகோவா சொன்ன வார்த்தை இதுவே.
זֶה הַדָּבָר אֲשֶׁר דִּבֶּר יְהֹוָה אֶל־מוֹאָב מֵאָֽז׃
14 ௧௪ ஒரு கூலிக்காரனுடைய வருடங்களுக்கு இணையான மூன்று வருடங்களுக்குள்ளே மோவாபின் மகிமையும் அதின் அதிக மக்கள் கூட்டமும் சீரழிந்துபோகும்; அதில் மீதியாயிருப்பது மிகவும் சிறிதும் அற்பமுமாயிருக்கும் என்று யெகோவா இப்பொழுது சொல்கிறார்.
וְעַתָּה דִּבֶּר יְהֹוָה לֵאמֹר בְּשָׁלֹשׁ שָׁנִים כִּשְׁנֵי שָׂכִיר וְנִקְלָה כְּבוֹד מוֹאָב בְּכֹל הֶהָמוֹן הָרָב וּשְׁאָר מְעַט מִזְעָר לוֹא כַבִּֽיר׃

< ஏசாயா 16 >