< ஏசாயா 11 >

1 ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.
ヱツサイの株より一つの芽いでその根より一つの枝はえて實をむすばん
2 ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய யெகோவாவுடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.
その上にヱホバの靈とどまらんこれ智慧聰明の靈謀略才能の靈知識の靈ヱホバをおそるるの靈なり
3 யெகோவாவுக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,
かれはヱホバを畏るるをもて歡樂としまた目みるところによりて審判をなさず耳きくところによりて断定をなさず
4 நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வார்த்தையாகிய கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரை அழிப்பார்.
正義をもて貧しき者をさばき公平をもて國のうちの卑しき者のために斷定をなしその口の杖をもて國をうちその口唇の氣息をもて惡人をころすべし
5 நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.
正義はその腰の帯となり忠信はその身のおびとならん
6 அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடு படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒன்றாக இருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.
おほかみは小羊とともにやどり豹は小山羊とともにふし犢をじし肥たる家畜ともに居てちひさき童子にみちびかれ
7 பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒன்றாகப் படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்.
牝牛と熊とはくひものを同にし熊の子と牛の子とともにふし獅はうしのごとく藁をくらひ
8 பால் குடிக்கும் குழந்தை விரியன்பாம்புப் புற்றின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்.
乳兒は毒蛇のほらにたはふれ乳ばなれの兒は手をまむしの穴にいれん
9 என் பரிசுத்த மலையெங்கும் தீமை செய்வாருமில்லை; கெடுதல் செய்வாருமில்லை; சமுத்திரம் தண்ணீனால் நிறைந்திருக்கிறதுபோல, பூமி யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
斯てわが聖山のいづこにても害ふことなく傷ることなからんそは水の海をおほへるごとくヱホバをしるの知識地にみつべければなり
10 ௧0 அக்காலத்திலே, மக்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காக மக்கள்கூட்டம் விசாரித்துக் கேட்பார்கள்; அவருடைய தங்கும் இடம் மகிமையாயிருக்கும்.
その日ヱツサイの根たちてもろもろの民の旂となりもろもろの邦人はこれに服ひきたり榮光はそのとどまる所にあらん
11 ௧௧ அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், தூரமான கடலிலுள்ள தீவுகளிலும், தம்முடைய மக்களில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்முறை தமது கரத்தை நீட்டி,
その日主はまたふたたび手をのべてその民ののこれる僅かのものをアツスリヤ、エジプト、パテロス、エテオピア、エラム、シナル、ハマテおよび海のしまじまより贖ひたまふべし
12 ௧௨ மக்களுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்.
ヱホバは國々の爲に旂をたててイスラエルの逐やられたる者をあつめ地の四極よりユダの散失たるものを集へたまはん
13 ௧௩ எப்பிராயீமின் பொறாமை நீங்கும், யூதாவின் எதிரிகள் அழிக்கப்படுவார்கள்; எப்பிராயீம் யூதாவின்மேல் பொறாமையாக இருக்கமாட்டான், யூதா எப்பிராயீமைத் துன்பப்படுத்தமாட்டான்.
またエフライムの猜はうせユダを惱ますものは斷れエフライムはユダをそねまずユダはエフライムを惱ますことなかるべし
14 ௧௪ அவர்கள் இருவரும் ஒன்றாகக்கூடி மேற்கேயிருக்கிற பெலிஸ்தருடைய எல்லைகளின்மேல் பாய்ந்து, கிழக்குத்திசையாரைக் கொள்ளையிட்டு, ஏதோமின்மேலும் மோவாபின்மேலும் போரிடுவார்கள்; அம்மோன் மக்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிவார்கள்.
かれらは西なるペリシテ人の境にとびゆき相共にひがしの子輩をかすめその手をエドムおよびモアブにのべアンモンの子孫をおのれに服はしめん
15 ௧௫ எகிப்தின் சமுத்திரமுனையைக் யெகோவா முற்றிலும் அழித்து, தம்முடைய காற்றின் வலிமையினால் நதியின்மேல் தமது கையை நீட்டி, ஏழு ஆறுகளாகப் பிரித்து, மக்கள் கால் நனையாமல் கடந்துபோகச் செய்வார்.
ヱホバ、エジプトの海汊をからし河のうへに手をふりて熱風をふかせその河をうちて七の小流となし履をはきて渉らしめたまはん
16 ௧௬ இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் அவர்களுக்கு இருந்ததுபோல, அசீரியாவிலே அவருடைய மக்களில் மீதியானவர்களுக்கு ஒரு பெரும்பாதையிருக்கும்.
斯てその民ののこれる僅かのものの爲にアツスリヤより來るべき叫つの大路あり昔しイスラエルがエジプトの地よりいでし時のごとくなるべし

< ஏசாயா 11 >