< ஆபகூக் 1 >

1 ஆபகூக் என்னும் தீர்க்கதரிசி தரிசனமாகப் பெற்றுக்கொண்ட செய்தி.
Břímě, kteréž u vidění viděl Abakuk prorok.
2 யெகோவாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேட்காமலிருக்கிறீரே! கொடுமையின் காரணமாக நான் எதுவரைக்கும் உம்மை நோக்கி உதவிக்காக் கூப்பிடுவேன், நீர் காப்பாற்றாமல் இருக்கிறீரே!
Až dokud, ó Hospodine, křičeti budu, a nevyslyšíš? Volati budu k tobě pro nátisk, a nespomůžeš?
3 நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கச்செய்கிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு முன்னே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு.
Proč dopouštíš, abych hleděti musil na nepravost, a na bezpráví se dívati, též na zhoubu a na nátisk proti mně? A vždy jest, kdož svár a různici vzbuzuje.
4 ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை சூழ்ந்துகொள்ளுகிறான்; ஆகவே நியாயம் புரட்டப்படுகிறது.
Odkudž se děje opuštění zákona, a nedochází nikdá soud. Nebo bezbožný obkličuje spravedlivého, pročež vychází soud převrácený.
5 நீங்கள் அந்நியமக்களை நோக்கிப்பார்த்து, ஆச்சரியப்பட்டுப் பிரமியுங்கள்; விவரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒரு செயலை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன்.
Pohleďte na národy a popatřte, nýbrž s velikým podivením se užasněte, proto že dělám dílo ve dnech vašich, o němž když vypravováno bude, neuvěříte.
6 இதோ, நான் கல்தேயரென்னும் கொடியதும் வேகமுமான மக்களை எழுப்புவேன்; அவர்கள் தங்களுடையதல்லாத குடியிருப்புக்களைக் கட்டிக்கொள்ள தேசத்தின் விசாலங்களில் நடந்துவருவார்கள்.
Nebo aj, já vzbudím Kaldejské, národ lítý a rychlý, kterýž zjezdí všecku širokost země, aby dědičně opanoval příbytky jiných,
7 அவர்கள் கொடியவர்களும் பயங்கரமுமானவர்கள்; அவர்களுடைய நியாயமும் அவர்களுடைய மேன்மையும் அவர்களாலேயே உண்டாகும்.
Strašlivý a hrozný, od něhož soud jeho i vyvýšenost jeho vyjde.
8 அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளைவிட வேகமும், சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமுமாக இருக்கும்; அவர்களுடைய குதிரைவீரர்கள் பரவுவார்கள்; அவர்களுடைய குதிரைவீரர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்து வருவார்கள்.
Koni jeho rychlejší budou než rysové, a lítější nad vlky večerní; veliké množství bude jezdců jeho, kteřížto jezdci jeho zdaleka přijedou, a přiletí jako orlice, kteráž chvátá na pastvu.
9 அவர்களெல்லோரும் கொடுமைசெய்ய வருவார்கள்; அவர்களுடைய முகங்கள் வற்றச் செய்யும் கீழ்க்காற்றைப்போலிருக்கும்; அவர்கள் மணல் அளவு மக்களைச் சிறைபிடித்துச் சேர்ப்பார்கள்.
Každý z nich k utiskování přijde, obrátíce tváři své k východu, když seberou jako písek zajaté.
10 ௧0 அவர்கள் ராஜாக்களைக் கொடுமை செய்வார்கள்; அதிபதிகள் அவர்களுக்குக் கேலிக்குரியவர்களாக இருப்பார்கள்; அவர்கள் மதில்களையெல்லாம் பார்த்து நகைத்து, மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பார்கள்.
Tentýž i králům se posmívati bude, a knížata smích jemu budou; tentýž každé pevnosti smáti se bude, a zdělaje náspy, dobude jí.
11 ௧௧ அப்பொழுது அவனுடைய மனம்மாற, அவன் தன் பெலன் தன் தேவனாலே உண்டானதென்று சொல்லி மிஞ்சிப்போய்க் குற்றவாளியாவான்.
Tehdy promění se duch jeho, a přestoupí i zaviní, mysle, že ta moc jeho boha jeho jest.
12 ௧௨ யெகோவாவே, நீர் ஆரம்பகாலமுதல் என் தேவனும், என் பரிசுத்தருமானவர் அல்லவா? நாங்கள் சாவதில்லை; யெகோவாவே, நியாயத்தீர்ப்புச் செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.
Hospodine Bože můj, Svatý můj, zdaliž ty nejsi od věčnosti? Myť nezemřeme. Hospodine, k soudu postavil jsi jej, ty, ó skálo, k trestání nastrojil jsi ho.
13 ௧௩ தீமையைப் பார்க்காமலிருக்கிற சுத்தக்கண்ணனே, அநியாயத்தை பார்த்துக்கொண்டிருக்கமாட்டீரே; அப்படியிருக்க துரோகிகளை நீர் பார்த்துக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைக்காட்டிலும் நீதிமானாக இருக்கிறவனை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?
Èistéť jsou tvé oči, tak že na zlé věci hleděti, a na bezpráví se dívati nemůžeš. Pročež přehlídati máš nešlechetníkům a mlčeti, poněvadž bezbožník sehlcuje spravedlivějšího, než sám jest.
14 ௧௪ மனிதர்களைச் சமுத்திரத்து மீன்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமமாக்குகிறதென்ன?
A zanechávati lidí jako ryb mořských, jako zeměplazu, kterýž nemá pána?
15 ௧௫ அவர்களெல்லோரையும் தூண்டிலைக்கொண்டு இழுத்துக்கொள்கிறான்; அவர்களைத் தன் வலையினால் பிடித்து, தன் கூடையிலே சேர்த்துக்கொள்ளுகிறான்; அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான்.
Všecky napořád udicí vytahuje, zatahuje je sítí svou, a zahrnuje je nevodem svým, protož veselí se a pléše.
16 ௧௬ ஆகையால் அவைகளினால் தன் பங்கு கொழுப்புள்ளதும், தன் உணவு சுவையுள்ளதாயிற்று என்று சொல்லி அவன் தன் வலைக்குப் பலியிட்டுத் தன் கூடைக்குத் தூபங்காட்டுகிறான்.
Protož síti své obětuje, a kadí nevodu svému; nebo skrze ně ztučněl díl jeho, a strava jeho zlepšena.
17 ௧௭ இதற்காக அவன் தன் வலையை இழுத்து அதிலுள்ளவைகளைக் கொட்டிக்கொண்டிருந்து, இரக்கமில்லாமல் மக்களை எப்போதும் கொன்றுபோடவேண்டுமோ?
S tím-liž se vším předce zatahovati má sít svou, a ustavičně národy mordovati bez lítosti?

< ஆபகூக் 1 >