< ஆதியாகமம் 15 >

1 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, யெகோவாவுடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: “ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாக இருக்கிறேன்” என்றார்.
После ових ствари дође Авраму реч Господња у утвари говорећи: Не бој се, Авраме, ја сам ти штит, и плата је твоја врло велика.
2 அதற்கு ஆபிராம்: “யெகோவா ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் குழந்தையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரைச் சேர்ந்த இந்த எலியேசர் என் வீட்டைப் பராமரிக்கிறவனாக இருக்கிறானே” என்றான்.
А Аврам рече Господе, Господе, шта ћеш ми дати кад живим без деце, а па коме ће остати моја кућа то је Елијезер овај Дамаштанин?
3 பின்னும் ஆபிராம்: “தேவரீர் எனக்கு வாரிசு அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்கு வாரிசாக இருக்கிறான்” என்றான்.
Још рече Аврам: Ето мени ниси дао порода, па ће слуга рођен у кући мојој бити мој наследник.
4 அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: “இவன் உனக்கு வாரிசு அல்ல, உனக்குப் பிறப்பவனே உனக்கு வாரிசு ஆவான்” என்று சொல்லி,
А гле, Господ му проговори: Неће тај бити наследник твој, него који ће изаћи од тебе тај ће ти бити наследник.
5 அவர் அவனை வெளியே அழைத்து: “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை உன்னாலே எண்ணமுடியுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: “உன் சந்ததி இந்தவிதமாக இருக்கும்” என்றார்.
Па га изведе напоље и рече му: Погледај на небо и преброј звезде, ако их можеш пребројати. И рече му: Тако ће ти бити семе твоје.
6 அவன் யெகோவாவை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாகக் கருதினார்.
И поверова Аврам Богу, а Он му прими то у правду.
7 பின்னும் அவர் அவனை நோக்கி: “இந்த தேசத்தை உனக்குச் சொந்தமாகக் கொடுப்பதற்காக, உன்னை ஊர் என்கிற கல்தேயர்களுடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த யெகோவா நானே” என்றார்.
И рече му: Ја сам Господ, који те изведох из Ура халдејског да ти дам земљу ову да буде твоја.
8 அதற்கு அவன்: “யெகோவா ஆண்டவரே, நான் அதைச் சொந்தமாக்கிக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான்.
А он рече: Господе, Господе, по чему ћу познати да ће бити моја?
9 அதற்கு அவர்: “மூன்றுவயது இளங்கன்றையும், மூன்றுவயது வெள்ளாட்டையும், மூன்றுவயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா” என்றார்.
И рече му: Принеси ми јуницу од три године и козу од три године и овна од три године и грлицу и голупче.
10 ௧0 அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, இருபகுதிகளையும் ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பறவைகளை அவன் துண்டிக்கவில்லை.
И он узе све то, и расече на поле, и метну све поле једну према другој; али не расече птице.
11 ௧௧ பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம் துரத்தினான்.
А птице слетаху на те мртве животиње; а Аврам их одгонише.
12 ௧௨ சூரியன் மறையும்போது, ஆபிராமுக்கு ஆழ்ந்த தூக்கம் வந்தது; பயமுண்டாக்கும் காரிருள் அவனை மூடிக்கொண்டது.
А кад сунце беше на заласку, ухвати Аврама тврд сан, и гле, страх и мрак велик обузе га.
13 ௧௩ அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியினர் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாக இருந்து, அந்த தேசத்தார்களுக்கு அடிமைகளாக இருப்பார்கள் என்றும், அவர்களால் 400 வருடங்கள் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாக அறியவேண்டும்.
И Господ рече Авраму: Знај зацело да ће семе твоје бити дошљаци у земљи туђој, па ће јој служити, и она ће их мучити четири стотине година.
14 ௧௪ இவர்கள் அடிமையாக இருக்கும் தேசத்தை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருட்களுடனே புறப்பட்டு வருவார்கள்.
Али ћу судити и народу коме ће служити; а после ће они изаћи с великим благом.
15 ௧௫ நீ சமாதானத்தோடு உன் முன்னோர்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்செய்யப்படுவாய்.
А ти ћеш отићи к оцима својим у миру, и бићеш погребен у доброј старости.
16 ௧௬ நான்காம் தலை முறையிலே அவர்கள் இந்த இடத்திற்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியர்களுடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை” என்றார்.
А они ће се у четвртом колену вратити овамо; јер гресима аморејским још није крај.
17 ௧௭ சூரியன் மறைந்து காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டுகளின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜூவாலையும் தோன்றின.
А кад се сунце смири и кад се смрче, гле, пећ се димљаше, и пламен огњени пролажаше између оних делова.
18 ௧௮ அந்த நாளிலே யெகோவா ஆபிராமோடு உடன்படிக்கைசெய்து, “எகிப்தின் நதிதுவங்கி ஐப்பிராத்து நதி என்னும் பெரிய நதிவரை உள்ளதும்,
Тај дан учини Господ завет с Аврамом говорећи: Семену твом дадох земљу ову од воде мисирске до велике воде, воде Ефрата,
19 ௧௯ கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,
Кенејску, кенезејску и кедмонејску,
20 ௨0 ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,
И хетејску и ферезејску и рафајску,
21 ௨௧ எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்த தேசத்தை உன்னுடைய சந்ததிக்குக் கொடுத்தேன்” என்றார்.
И аморејску и хананејску и гергесејску и јевусејску.

< ஆதியாகமம் 15 >